என் மலர்
புதுச்சேரி
புதுவை மாநில பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டத்தில் 3 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
புதுச்சேரி:
புதுவையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.
புதுவையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. கூட்டணி ஆட்சியில் பங்கேற்றுள்ள பா.ஜ.க.வுக்கு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் அங்காளன், சிவசங்கர், கொல்லப்பள்ளி சீனிவாசஅசோக் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சட்டமன்ற பதவி கிடைக்காத என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு வாரிய தலைவர் பதவி வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆட்சி அமைந்து 8 மாதமாகியும் இதுவரை வாரிய பதவிகள் வழங்கப்படவில்லை. சமீபத்தில் பா.ஜ.க.வினர் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து, தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள், ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய பதவிகள் கேட்டனர்.
அரசு நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் வாரிய பதவி வழங்க முடியாது என முதல்-அமைச்சர் ரங்கசாமி மறுத்துவிட்டார். இதனால் பா.ஜ.க. ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். பா.ஜ.க. ஆதரவு சுயேட்சைகள் தங்கள் ஆதரவை விலக்கிக்கொள்ள திட்டமிட்டனர். அவர்களை சமாதானப்படுத்த பா.ஜ.க. பல்வேறு முயற்சிகளை எடுத்தது.
இந்த நிலையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் ஓட்டல் அக்கார்டில் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பா.ஜனதா பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில் 3 ஆதரவு சுயேட்சைகளுக்கும் வழக்கம்போல அழைப்பு அனுப்பப்பட்டது. கூட்டத்தில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்டு, சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் அங்காளன், சிவசங்கர், கொல்லப்பள்ளி சீனிவாச அசோக், நியமன எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், அசோக்பாபு, வி.பி.ராமலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது தொகுதியில் நலத்திட்டங்களை செயல்படுத்தாமலும், தங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை பா.ஜனதா நிறைவேற்றாதது குறித்தும் ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் பேசினர்.
இதைத்தொடர்ந்து சுயேட்சை எம்.எல்.ஏ.க் களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கட்சித் தலைமை மூலம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஆதரவை வாபஸ் பெற முடிவெடுத்திருந்த நிலையில் அவர்கள் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்றதால் சமாதானம் அடைந்துள்ளதாக தெரிகிறது.
அரசியல் ஆதாயத்துக்காக மத கலவரத்தை தூண்ட காங்.-தி.மு.க. முயற்சிக்கிறது என அ.தி.மு.க. குற்றச்சாட்டியுள்ளது.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசியல் ஆதாயத்துக்காக புதுவையில் மத கலவரத்தை தூண்டும் முயற்சியில் தி.மு.க.-காங்கிரஸ் கட்சி இறங்கியுள்ளதை அதிமுக வன்மையாக கண்டிக்கிறது.
பள்ளியில் சீருடை அணிவது சம்பந்தமான, ஆசிரியரின் சாதாரணமான அறிவுறுத்தலை பூதாகாரமாக்கி மதத்தின் பெயரால் மாணவர்களிடம் பிரிவினையை உருவாக்கும் முயற்சியை திமுக எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி இறங்கி யுள்ளது அநாகரிகமான செயல்.
சமுதாயத்தில் ஒரு சிலரால் சிறு தவறுகள் ஏற்பட்டால், மாநில நலனை கருதாமல் சம்பந்தப்பட்ட மதத்தினரின் உணர்வுகளை தூண்டும் விதத்தில் வாய்க்கு வந்தபடி பொய் பேசுவது பொறுப்புள்ள அரசியல் வாதிகளுக்கு அழகல்ல.
அரியாங்குப்பம் பள்ளியில் பர்தா சம்பந்தமான சாதார ணமான பிரச்சசினையை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் முதல்-அமைச்சரை சந்தித்து மனு அளித்து மதரீதியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
முதல்&அமைச்சராக இருந்த நாராயண சாமியும், மதவாத சக்திகள் தலை தூக்கி உள்ளதாக பொறுப்பற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்த திட்டங்களை முழுமையாக செயல்படுத்துகிறது. ஆட்சியில் குறைகூற முடியாமல் திட்டமிட்டு ஆட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த கல்வி அமைச்சரை மாற்ற வேண்டும் என நாராயணசாமி கோருகிறார்.
மதம், சாதி பெயரால் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் சுயநலமிக்க அரசியல் கட்சி தலைவர்களையும், எம்.எல்.ஏ.க்களையும் மத நம்பிக்கை கொண்டவர்கள் சீர் தூக்கி பார்த்து இவர்களின் அற்ப செயல்களை புறந்தள்ள வேண்டும்.
அமைதி தவழும் புதுவையில் திட்டமிட்டு மத கலவரத்தை தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது உரிய நடவடிக்கையை காவல்துறை உயரதிகாரிகள் எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு ஏனாமை சேர்ந்த முதியவர் பலியானார்.
புதுச்சேரி:
புதுவையில் 2 ஆயிரத்து 417 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் புதிதாக 162 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 102, காரைக்காலில் 36, ஏனாமில் 22, மாகியில் 2 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் 34, காரைக்காலில் 16, ஏனாமில் 5, மாகியில் 3 பேர் என 58 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 619, காரைக்காலில் 80, ஏனாமில் 34, மாகியில் 8 பேர் என 741 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர்.
புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 922 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 460 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர்.
புதுவையில் ஆயிரத்து 473, காரைக்காலில் 825, ஏனாமில் 129, மாகியில் 21 பேர் என 2 ஆயிரத்து 448 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது 2 ஆயிரத்து 506 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர்.
ஏனாம் பிராந்தியத்தை சேர்ந்த 69 வயது முதியவர் கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 956 ஆக உயர்ந்துள்ளது.
புதுவையில் 2-வது தவணை உட்பட 15 லட்சத்து 50 ஆயிரத்து 874 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
வருமானவரித்துறை ஊழியர்கள் சம்மேளன நாள் கொண்டாடினர்.
புதுச்சேரி:
புதுவை முத்தியால்பேட்டையில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் வருமான வரித்துறை ஊழியர்களின் 70-ம் ஆண்டு சம்மேளன நாள் விழா கொடியேற்றி கொண்டாடப்பட்டது.
விழாவில் மண்டல செயலாளராக தேர்வு செய்யப்பட்ட கோவிந்தனுக்கு பாராட்டு விழாவும் நடந்தது. விழாவுக்கு புதுவை வருமானவரித்துறை ஊழியர் சங்க தலைவர் உமா மகேஸ்வரி தலைமை வகித்தார். செயலாளர் அனிருத் ஷர்மா முன்னிலை வகித்தார். மூத்த உறுப்பினர் சித்ரா கொடியை ஏற்றி வைத்தார்.
வருமானவரித்துறை ஊழியர் சங்க மண்டல செயலாளர் கோவிந்தன், செயலாளர் தமிழ்ச்செல்வன், வருமானவரித்துறை அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் சிற்றரசன் நன்றி கூறினார். தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
அரசு காலிபணியிடங்களை நிரப்பக்கோரி 4 மையங்களில் இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் உழவர்கரை நகராட்சி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணைத்தலைவர் எரிக்ரம்போ தலைமை வகித்தார். நிர்வாகிகள் அந்தோணிதாஸ், ஜீவா, முரளி, தியாகு, சூர்யா,
ரஞ்சிதா முன்னிலை வகித்தனர். எழிலன் நோக்கவுரையாற்றினார்.
இந்திய கம்யூனிஸ்டு மாநில நிர்வாக குழு சேதுசெல்வம் சிறப்புரையாற்றினார். தொகுதி செயலாளர்கள் முருகன், சேகர், அன்பழகன், மூர்த்தி, ரவிச்சந்திரன், வீரக்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
10 ஆயிரத்துக்கும் மேற் பட்ட அரசுத்துறை காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தொழிற்சாலைகளில் 60 சதவீத உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பஞ்சாலைகளை சீரமைத்து ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும். கஞ்சா, லாட்டரி, விபசாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணாசிலை, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் அருகிலும் இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முன்னோர்கள் விட்டுச்சென்ற பணம் தரும் பனை மரங்களை பாதுகாக்க கோரிக்கை எம்.ஜி.ஆர். பொதுநல சமூக பேரவை வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி:
பாரத ரத்னா எம்.ஜி.ஆர். பொது நல சமூக பேரவை செயலாளர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விழுப்புரம்& நாகப்பட்டினம் 4 வழிச்சாலைக்காக திருபுவனை ஏரியில் உள்ள பனை மரங்களை வெட்டி அழிக்க முன்வருகிறார்கள். இதனை உடனடியாக தடுத்து நிறுத்தி இயற்கை அரணை நாம் பாதுகாக்க வேண்டும்.
ஏனெனில் இன்றைய காலக்கட்டத்தில் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி அனைவரும் பாதிக் கப்பட்டுள்ளோம்.
இப்படிப்பட்ட நிலையில் பல தலைமுறைகளாக நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற சொத்தான பனை மரங்களை சாலை விரிவாக்கம் என்ற போர்வையில் அழிக்க நினைப்பது மாபெரும் தவறாகும்.
பனை மரங்கள் உள்ள இடங்களை விட்டு விட்டு வேறு வழிப்பாதையை அமைக்கலாம்.
இன்று ஒரு பனை மரம் வளர வேண்டும் என்றால் பல வருடங்கள் ஆகும். அதன் வளர்ச்சியினை பார்ப்பது இந்த தலைமுறையினரால் முடியாத காரியம். பல 100 கோடி செலவு செய்தாலும் இத்தகைய பசுமை நிறைந்த வரிசையாக அரணாக பனை மரங்களை உருவாக்க முடியாது. இது மிக, மிக அரிய செயலாகும்.
தமிழக அரசு பனை மரங்களை வெட்ட தடை விதித்துள்ளது. அதே போல் புதுவையிலும் இந்த அரிய பனை மரங்களை வெட்ட தடை விதித்து அதனை தக்க முறையில் பாதுகாக்க வேண்டும்.
மாநிலத்தில் 33 சதவீதம் வனப்பகுதி அமைய வேண்டும். ஆனால் புதுவையில் அது போன்று ஏதும் இல்லை. மேலும் கொஞ்சமாக உள்ள இயற்கை வள சொத்தான பனை மரங்களை நாம் மீட்டு எடுக்க வேண்டும்.
ஒரு காலத்தில் பனை மரங்களை நம்பி பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்தன. இன்று குறைவதினால் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் நிலத்தடி நீர், மண் வளம், தூய காற்று பாதிக்கப்படக்கூடிய அபாய கரமான சூழ்நிலையை உருவாக்கி வருகின்றனர்.
பல வருடங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் நெல்லூரில் தங்க கடற்கரை சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட போது இருந்த பனை மரங்களை வெட்டி சாய்க்காமல் சாலையின் நடுவே வருகின்ற மாதிரி அமைத்து அதனை இன்றும் நடைமுறையில் கடைபிடித்து வருகின்றனர்.
அதேபோல் நம் மாநி லத்திலும் பனை மரங்களை வெட்டாமல் தடுத்து அதனை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
பொது இடத்தில் பன்றிகள் திரிந்தால் சட்ட நடவடிக்கை வில்லியனூர் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி:
பன்றிகள் பொது இடங்களில் திரியவிடும் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பன்றிகள் வளர்ப்போர் அவற்றை வெளியில் திரிய விடாமல் பட்டியில் வைத்து வளர்க்குமாறு பல முறை எச்சரிக்கை செய்யப்பட்டது. ஆனால், உரிமையாளர்கள் உதாசீனப்படுத்தி வருகின்றனர்.
தொடர்ந்து பொது சுகாதாரத்துக்கும், விளை நிலங்களுக்கும், பொது மக்கள் உயிர் மற்றும் உடமைகளுக்கும் கேடு விளைவிக்கின்றனர். பன்றி வளர்ப்போரிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அதில் பன்றிகளை பட்டியில் வளர்ப்போம், வெளியில் திரிய விட மாட்டோம், மீறி வெளியில் திரியும் பன்றிகளை பிடித்து நிபந்தனைகள் இன்றி அப்புறப்படுத்திக் கொள்ளலாம் என எழுத்துபூர்வமாக அளித்த உறுதிமொழியை மீறி செயல்படுகின்றனர்.
விதிகளை மீறி பன்றிகளை பொது இடங்களில் திரியவிடுவது கொம்யூன் பஞ்சாயத்து சட்டத்துக்கு எதிரான செயல்பாடு. எனவே, இனி பன்றிகளை வெளியில் திரிய விடக்கூடாது என உத்தரவிடப்படுகிறது.
இன்று முதல் 5 நாட்களுக்குள் பொது இடங்களில் சுற்றித்திரியும் பன்றிகளை உரிமையாளர்களே உடனடியாக பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். தவறினால் பன்றி வளர்ப்போர் மீது வழக்கு பதிவு செய்யப்படும். பொது வெளியில் சுற்றித்திரியும் பன்றிகள் முன்னறிவிப்பின்றி பிடித்து அப்புறப்படுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
திருபுவனை அருகே ரேசன் கடை ஊழியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே கூடப்பாக்கம் முத்துக்குமரன் நகரை சேர்ந்தவர் தியாகு (வயது42). இவர் திருபுவனை அருகே ஆண்டியார்பாளையத்தில் உள்ள ரேசன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் ரேசன் கடையில் பொங்கல் தொகுப்பு பரிசு பொருட்களை ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கி கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த பாலகுமார் என்பவர் வரிசையில் நிற்காமலும், ரேசன் அட்டை இல்லாமலும் பொங்கல் தொகுப்பு பரிசு பொருட்களை கொடுக்கு மாறு ரேசன் கடை ஊழியர் தியாகுவிடம் கேட்டார்.
அதற்கு தியாகு ரேசன் அட்டை கொண்டு வருமாறு பாலகுமாரிடம் அறிவுறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த பாலகுமார் தகாத வார்த்தைகளால் திட்டி தியாகுவை சரமாரியாக தாக்கி முகத்தில் குத்தினார்.
மேலும் அங்கிருந்த ரிஜிஸ்டர் புத்தகத்தை எடுத்துக்கொண்டு கொலை செய்து விடுவதாக மிரட்டிவிட்டு பாலகுமார் அங்கிருந்து சென்றார்.
இதுகுறித்து ரேசன் கடை ஊழியர் தியாகு திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வில்லியனூரில் எலி மருந்து தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
வில்லியனூர் கணுவாய்பேட்டை புதுநகர் 3-வது தெருவை சேர்ந்தவர் ராஜி. கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கெஜ லட்சுமி (வயது45). இவர் கடந்த 2 ஆண்டுகளாக கழுத்து வலியால் அவதிபட்டு வந்தார்.
இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் கழுத்து வலி தீரவில்லை. இதனால் கெஜலட்சுமி மனவேதனையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் கழுத்து வலி அதிகமானதால் மனமுடைந்த கெஜலட்சுமி தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து தின்று விட்டார். மாலையில் வேலை முடிந்து ராஜி வீட்டுக்கு வந்த போது மனைவி எலி மருந்து தின்று மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் ராஜி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மனைவியை சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கெஜலட்சுமி சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கெஜலட்சுமி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து ராஜி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தபிறகு புதுச் சேரியில் மதவாத சக்திகள் தலைதூக்கி உள்ளதாக முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறியதாவது:-
புதுச்சேரியில் மதவாத சக்திகள் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. அரியாங்குப்பம் அரசு பள்ளிக்கு பர்தா அணிந்து வந்த மாணவியை, ஆசிரியர் ஒருவர் பர்தாவுடன் பள்ளிக்கு வரக்கூடாது என கூறியுள்ளார். இதுகுறித்து புகார் அளித்தும் கல்வித்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இதில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலையிட்டு சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகாவில் அரசு பள்ளியில் முஸ்லிம் மாணவி பர்தா அணிவதற்கு தடை விதித்த காரணத்தால் அம்மாநிலமே பற்றி எரிகிறது. மேலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேநிலை புதுச்சேரியில் உருவாகி விடக்கூடாது.
வாதானூர் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ். கலாசாரத்தை பள்ளிகள் மூலமாக புதுவையில் நுழைப்பதற்கான வேலையை பா.ஜ.க. செய்கிறது. அதற்கு கல்வித்துறை அமைச்சர் தூண்டுதலாக உள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தபிறகு மதவாத சக்தி தலைதூக்கி உள்ளது. இந்த 2 சம்பவங்கள் தொடர்பாக கல்வித்துறை விசாரணையை தொடங்கி உள்ளதாக கூறுகிறார்கள். இந்த விசாரணையின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. முதல்-அமைச்சர் ரங்கசாமி மதசார்பற்ற கொள்கையில் உறுதியாக இருந்தால் கல்வித்துறையை முதல்-அமைச்சர் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். புதுவையில் மத ரீதியான பிரச்சினையை முளையிலேயே கிள்ளி எறிந்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
புதுச்சேரியில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு கொடுத்த 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் தங்களது தொகுதியில் எவ்வித வளர்ச்சி பணி நடைபெறவில்லை என சபாநாயகர், கவர்னரை சந்தித்து உள்ளனர். 3 எம்.எல். ஏ.க்கள் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முதல்-அமைச்சரிடம் தான் முறையிட வேண்டும்.
சபாநாயகர் சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் கருத்துகளை கேட்கலாம். சபையை நடத்துவது தான் அவரது வேலை. அரசியல் செய்வது அவரது வேலையில்லை. அவர் அரசியல் செய்ய வேண்டுமென்றால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு செய்யலாம். சபாநாயகர் பா.ஜ.க.வின் ஏஜெண்டாக செயல்படுவதை ஏற்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.

குபேந்திரன் திறமையை பாராட்டி சரியான அங்கீகாரத்தை அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என்று உள்ளூர் மக்கள் கோரிக்கை வைத்தனர்.
அரியாங்குப்பம்:
மீன்களை கொண்டு பாரம்பரியம் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய கலை மீன் சிற்பம் வரைந்து அனைவரையும் கவர்ந்து வருகிறார், குபேந்திரன் (வயது 29).
இவர் புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். மீனவரான இவர் கலைத் துறையில் 2 பட்டப்படிப்புகளை முடித்து உள்ளார். ஓவியம் மற்றும் சிற்ப துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு திறமைகளை காட்டி வருகிறார்.
இவரது படைப்புகளின் கண்காட்சி கன்னியாகுமரி முதல் டெல்லி வரை பிரசித்தி பெற்றதாகும். இதில், தனித் திறமையாக மீனவர்களின் வாழ்க்கையை ஆய்வாகவே கொண்டு செயல்படுகிறார்.
அதாவது, மீனவர்களின் வாழ்க்கை தாக்கத்தை ஓவியம் மற்றும் சிற்பங்களாக வடிப்பதில் குபேந்திரன் கில்லாடி ஆவார். குறிப்பாக மீன்களைக் கொண்டு உருவாக்கும் சிற்பங்கள் ஒவ்வொன்றும் பேசும்.
ஓவியம் மற்றும் சிற்பத்தில் புதிய முயற்சியாக பாரம்பரியம் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மீனவர் வாழ்வியலை கலை வடிவில் அளித்து வருகிறார்.
மீன்களைக் கொண்டு ஒரு சிற்பத்தை உருவாக்க ஒன்றரை மாதம் தேவைப்படுகிறது. இந்த சிலை மற்றும் ஓவியங்கள் போல் சுற்றுலா பயணிகள் வேறு எங்கும் பார்க்க வாய்ப்பில்லை. கடலில் இருந்து பிடிக்கப்படும் மீன்களை உரிய முறையில் பதப்படுத்தி சிற்பங்களாக வடிக்கிறார். கலைத்துறையில் இதுபோன்று இதுவரை யாரும் செய்ததில்லை. இதனை வெளிநாட்டவரும் கண்டு பாராட்டி சிலைகளை வாங்கி செல்கின்றனர்.
மீனவர்களின் வாழ்க்கையை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் இந்த முயற்சியை தனிநபராக செய்து வரும் தான் விரைவில் இக்கலையை அடுத்த தலைமுறைக்கும் கற்றுக் கொடுத்து உலக அரங்கிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே தனது விருப்பமாக கூறுகிறார், குபேந்திரன்.
இவரது திறமையை பாராட்டி குபேந்திரனுக்கு சரியான அங்கீகாரத்தை அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என்று உள்ளூர் மக்கள் கோரிக்கை வைத்தனர்.

காரைக்கால் அருகே பொது இடத்தில் நின்று பொதுமக்களுக்கு இடையூறாக ஆபாசமாக பேசியது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால்:
காரைக்கால் அருகே கோட்டுச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளமுருகு மற்றும் போலீசார், ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வரிச்சிக்குடி வ.உ.சி நகர் அருகே திரு.பட்டினம் கீழையூரை சேர்ந்த கண்ணன் (வயது 35) பொது இடத்தில் நின்று, பொதுமக்களுக்கு இடையூறாக ஆபாசமாக பேசிகொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
கோட்டுச்சேரி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார், காசாகுடி கம்பன் நகர் அருகே ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மேலகாசாகுடியை சேர்ந்த சற்குண பெருமாள்(42), பொது இடத்தில் நின்று, பொதுமக்களுக்கு இடையூறாக ஆபாசமாக பேசினார். போலீசார் அவரையும் கைது செய்தனர்.