என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
ரேசன் கடை ஊழியரை தாக்கி கொலை மிரட்டல்
திருபுவனை அருகே ரேசன் கடை ஊழியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே கூடப்பாக்கம் முத்துக்குமரன் நகரை சேர்ந்தவர் தியாகு (வயது42). இவர் திருபுவனை அருகே ஆண்டியார்பாளையத்தில் உள்ள ரேசன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் ரேசன் கடையில் பொங்கல் தொகுப்பு பரிசு பொருட்களை ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கி கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த பாலகுமார் என்பவர் வரிசையில் நிற்காமலும், ரேசன் அட்டை இல்லாமலும் பொங்கல் தொகுப்பு பரிசு பொருட்களை கொடுக்கு மாறு ரேசன் கடை ஊழியர் தியாகுவிடம் கேட்டார்.
அதற்கு தியாகு ரேசன் அட்டை கொண்டு வருமாறு பாலகுமாரிடம் அறிவுறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த பாலகுமார் தகாத வார்த்தைகளால் திட்டி தியாகுவை சரமாரியாக தாக்கி முகத்தில் குத்தினார்.
மேலும் அங்கிருந்த ரிஜிஸ்டர் புத்தகத்தை எடுத்துக்கொண்டு கொலை செய்து விடுவதாக மிரட்டிவிட்டு பாலகுமார் அங்கிருந்து சென்றார்.
இதுகுறித்து ரேசன் கடை ஊழியர் தியாகு திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






