என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம் பேசிய காட்சி.
    X
    ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம் பேசிய காட்சி.

    4 மையங்களில் இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்

    அரசு காலிபணியிடங்களை நிரப்பக்கோரி 4 மையங்களில் இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    புதுச்சேரி:

    அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் உழவர்கரை நகராட்சி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணைத்தலைவர் எரிக்ரம்போ தலைமை வகித்தார்.   நிர்வாகிகள் அந்தோணிதாஸ், ஜீவா, முரளி, தியாகு, சூர்யா, 
    ரஞ்சிதா முன்னிலை வகித்தனர். எழிலன் நோக்கவுரையாற்றினார். 

    இந்திய கம்யூனிஸ்டு மாநில நிர்வாக குழு சேதுசெல்வம் சிறப்புரையாற்றினார். தொகுதி செயலாளர்கள் முருகன், சேகர், அன்பழகன், மூர்த்தி, ரவிச்சந்திரன், வீரக்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். 

    10 ஆயிரத்துக்கும் மேற் பட்ட அரசுத்துறை காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தொழிற்சாலைகளில் 60 சதவீத உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    பஞ்சாலைகளை சீரமைத்து ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும். கஞ்சா, லாட்டரி, விபசாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. 

    இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணாசிலை, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் அருகிலும் இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    Next Story
    ×