என் மலர்
புதுச்சேரி
உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை விரைவில் மீட்க மத்திய அரசுக்கு மேலும் அழுத்தம் கொடுப்போம் என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி:
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. போர் நடக்கும் உக்ரைனில் சிக்கியுள்ள புதுவை மாணவ-மாணவிகளை மீட்க புதுவை அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் குருசுக்குப்பம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த லீலாதரன் என்பவரது மகன் சேஷாதரன் (வயது 25) என்பவர் உக்ரைனில் மருத்துவம் இறுதியாண்டு படித்து வருகிறார். தற்போது உக்ரைனில் சிக்கியுள்ள அவர் ஹங்கேரி பகுதியில் தங்கியுள்ளார்.
அவரது வீட்டிற்கு முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ., காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று இரவு நேரில் சென்று மாணவரின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் மத்திய அரசிடம் பேசி உக்ரைனில் சிக்கியுள்ள புதுவை மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இது குறித்து முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு தற்போது நடவடிக்கை எடுத்தாலும் உக்ரைன் நாட்டில் இருந்து இந்தியர்கள் வெளியே செல்ல முடியவில்லை. ஹங்கேரி, போலந்து பகுதிக்கு செல்கின்றனர். அங்கிருந்து தான் அவர்கள் மீட்கப்படுகின்றனர். குருசுக்குப்பம் பகுதியை சேர்ந்த மாணவர் சேஷாதரனுடன் 11 புதுவை மாணவர்கள் தங்கியுள்ளனர். புதுவை மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவு துறை மந்திரியிடம் வலியுறுத்த உள்ளோம்.
இந்தியாவில் உள்ள மாணவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று பிரதமருக்கும், மத்திய மந்திரிகளுக்கும் மேலும் அழுத்தம் கொடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.

ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கும் மீன்பிடி படகுகள் உடனடியாக கரை திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தெற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகி உள்ளது. இது அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இலங்கை மற்றும் தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.
இதனால் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் வரும் 3 நாட்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக் கூடும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கும் மீன்பிடி படகுகள் உடனடியாக கரை திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறது.
இதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், வடதமிழக மற்றும் தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும்.
நாளை (சனிக்கிழமை) மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேத்திலும் இடையிடையே மணிக்கு 70 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளில் பலமான காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே மேற்கண்ட நாட்களில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையொட்டி புதுவை துறைமுகம், காரைக்கால் துறைமுகத்தில் நேற்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. மீன்வளத்துறையினரும் மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளனர்.

காரைக்காலில் என்.சி.சி. அலுவலக அரசு ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால்:
காரைக்கால் கோவில்பத்து அம்பேத்கர் நகரைச்சேர்ந்தவர் காளிதாஸ் (வயது49). இவர், காரைக்கால் செய்தி மற்றும் விளம்பரத்துறையிலும் பின்னர் காரைக்கால் என்.சி.சி.அலுவலகத்திலும் அரசு ஊழியராக (எம்.டி.எஸ்) பணியாற்றி வந்தார்.
இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சனை காரணமாக, வேலைக்கு செல்லாமல், அதிகம் மது அருந்தி, உணவு உட்கொள்ளாமல் இருந்து வந்ததாகவும், மனைவி மற்றும் நண்பர்களிடம், தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக புலம்பி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டு அறையில், யாரும் இல்லாத நேரத்தில், புடவையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து அவரது மனைவி செந்தாமரை, காரைக்கால் நகர காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

புதுவையில் கனமழையால் பாதிக்கப்பட்ட 7 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.7 கோடி நிவாரணம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த ஆண்டு இறுதியில் வரலாறு காணாத மழை பெய்தது.
மழையால் விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அரசு சிவப்பு ரேசன் கார்டுதாரர்களுக்கு ரூ.5 ஆயிரம், மஞ்சள் கார்டுதாரர்களுக்கு ரூ.4 ஆயிரத்து 500 மழை நிவாரணமாக வழங்கியது.
சாகுபடி செய்த பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.
இப்போது இந்த நிவாரணத்தை வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. விவசாயிகளின் வங்கி கணக்கில் இத்தொகை செலுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது அதிக கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயி கள் சாகுபடி செய்த பயிர் களுக்கான நிவாரண தொகை ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வழங்க முதல்&அமைச்சர் அறிவித்தார்.
இதன்படி விவசாயிகளுக்கு நிவாரண தொகை ரூ.7 கோடியே 10 லட்சத்து 57 ஆயிரத்து 600 வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதனால் புதுவை, காரைக்கால், ஏனாம் பகுதிகளை சேர்ந்த 7 ஆயிரத்து 16 விவசாயிகள் பயனடைவர். கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக் கான நிவாரண தொகை புதுவையை சேர்ந்த 6 ஆயிரத்து 54 விவசாயி களுக்கு ரூ.5 கோடியே 97 லட்சத்து 11 ஆயிரத்து 200, காரைக்காலை சேர்ந்த 731 விசாயிகளுக்கு ரூ.97 லட்சத்து 55 ஆயிரத்து 800, ஏனாமை சேர்ந்த 231
விவசாயிகளுக்கு ரூ.15 லட்சத்து 90 ஆயிரத்து 600 விரைவில் வங்கி கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிதிக்குழுவில் புதுவையை இணைக்க வேண்டும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமனிடம் அமைச்சர் நமச்சிவாயம் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் விமானம் மூலம் டெல்லி சென்றார்.
அங்கு 11 மணிக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமனை அவரது அலுவலகத்தில் அமைச்சர் நமச்சிவாயம் சந்தித்தார். அப்போது மாநிலம், யூனியன் பிரதேசங்களின் நிதிக்குழுவில் புதுவை சேர்க்கப்படாததால் மத்திய அரசின் மானியம், நிதி உதவி கிடைக்கவில்லை. இதனால் மாநிலத்தில் நலத்திட்டங்களை செயல் படுத்த முடியவில்லை.
எனவே நிதிக்குழுவில் புதுவையை சேர்க்க வேண்டும். கடந்த காலத்தை போல புதுவைக்கு 90 சதவீத மானியத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அதோடு புதுவைக்கு சிறப்பு நிதியாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து டெல்லியில் முகாமிட்டுள்ள அமைச்சர் நமச்சிவாயம், மத்திய சுகாதாரத்துறை மந்திரி, உள்துறை செயலரை ஆகியோரையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
ஆறுபடைவீடு மருத்துவக்கல்லூரி சார்பில் செவித்திறன் பாதுகாப்பு குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
புதுச்சேரி:
கிருமாம்பாக்கம் ஆறு படைவீடு மருத்துவ கல்லூரி வளாகத்தில் இயங்கும் மறுவாழ்வு மற்றும் மருத்துவ உளவியல் கல்லூரி சார்பில் உலக செவித்திறன் தினம் கொண்டாடப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக புதுவை இந்திரா காந்தி சிலை சதுக்கத்தில் நடந்த உலக செவித்திறன் நிகழ்ச்சியை போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் தொடங்கி வைத்தார்.
அவ்வழியாக சென்ற வாகன ஓட்டி களுக்கு செவித்திறன் தொடர்பான விழிப்புணர்வு துண்டறிக்கையை வழங்கி னார்.
மேலும் செவித்திறன் பாதுகாப்பதன் அவசியம் மற்றும் அத்துடன் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்தி மாணவர்கள் சாலையோரமாக நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் ராஜன், செவித்திறன் பாதுகாப்பதன் அவசியம் குறித்து பேசுகையில், “காது கேளாமைக்கு முக்கிய பிரச்சினையாக இருப்பது இரைச்சல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இரைச்சலால் காது கேட்காமல் போனால் அது நிரந்தரமாகும் வாய்ப்பு உள்ளது.
மருத்துவ சிகிச்சைகளி னாலும் பயன்தராது. அதே நேரத்தில் இந்த இரைச்சலை கட்டுப்படுத்தியும் எரிச்சலை தவிர்த்து செவித்திறனை பாதுகாத்துக்கொள்ள முடியும்.
அதிக நேரம் மொபைல் போனில் இயர் போனை படுத்தி கேட்கும் போது அதன் செவித்திறன் பாதிக்கப்படும், அதனால் காது கேட்காமல் போகும் வாய்ப்பு உள்ளது” என்றார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆறுபடைவீடு மருத்துவ கல்லூரி இணைப்பதிவாளர் பெருமாள் செய்திருந்தார். உதவி பேராசிரியர் ஜான் நன்றி கூறினார்.
நகராட்சி-கொம்யூன் ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:
புதுவை மாநில நகராட்சி-கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் கூட்டு போராட்டக்குழு சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு வினாயகவேல், ஆனந்த கணபதி முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன கவுரவ தலைவர் பால மோகனன், அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பு பொதுச் செயலாளர் லட்சுமணசாமி சிறப்புரையாற்றினர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் உதயகுமார், சேகர், பத்ரீஸ் தெலமாஷ், வேளாங் கண்ணிதாசன், கணேசன், பாலசுப்பிரமணியன், மாணிக்கம், ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.
புதுவை அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் சம்பளம், ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்தபோராட்டம் நடந்தது.
போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்றனர். முடிவில் கலியபெருமாள் நன்றி கூறினார்.
புதுவையில் டாக்டர் வீட்டில் நகை கொள்ளை நடந்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை சவரிராயலு வீதியை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 35). பிம்ஸ் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவியும் டாக்டர் ஆவார். ஒரு நிகழ்ச்சிக்கு செல்ல தர்மராஜின் மனைவி பீரோவை திறந்து நகையை எடுக்க முயன்றார்.
அப்போது அதில் வைத்திருந்த 3 பவுன் கம்மல் ஜிமிக்கி, 4 பவுன் நெக்லஸ், 3 பவுன் வளையல், கால் பவுன் டாலர் உட்பட 11 பவுன் நகை கொள்ளை போயிருந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த தர்மராஜ் மற்றும் அவரது மனைவி இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் அளித்தனர்.
ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் மனோஜ், சப்&இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இதனிடையே தர்மராஜியின் வீட்டிற்கு யார்-யார்? வந்து சென்றார்கள் என மருத்துவ தம்பதியினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது 4 நாட்களுக்கு முன்பு திருச்சியை சேர்ந்த உறவினர் வெங்கடேஷ் வந்து தங்கி சென்றது தெரியவந்தது. தற்போது வெங்கடேஷ் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வாலிகண்டபுரம் பெட்ரோல் பங்கில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இதனையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று வெங்கடேஷிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனிடையே, அவரது வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது திடீரென அதில் பணம் அதிகமாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை உரிய முறையில் போலீசார் விசாரித்தனர். பின்னர் அவர் நகைகளை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து புதுவை அழைத்து வந்தனர். அவர் அடகு கடையில் வைத்த நகைகள் மீட்கப்பட்டது.
பாகூர் அருகே காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
பாகூர் அருகே குடியிருப்பு பாளையம் அய்யனார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 49). இவர் அபிஷேகபாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி யில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.
சங்கருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லவில்லை என தெரிகிறது.
மேலும் குடிப்பதற்கு அவரது மனைவி சரஸ்வதியுடன் பணம் கேட்டு வற்புறுத்தி வந்துள்ளார். இதனை சரஸ்வதி கண்டித்து பணம் தரவில்லை என தெரிகிறது.
இந்நிலையில் சரஸ்வதியிடம் கோபித்துக் கொண்டு சங்கர் அருகிலுள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று அங்கேயே தங்கி விட்டார்.
இந்நிலையில் சங்கர் அங்குள்ள ஒரு மரத்தில் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தொங்குவதாக அங்கிருந்தவர்கள் சரஸ்வதிக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே சரஸ்வதி உறவினர்களுடன் அங்கு சென்று தூக்கில் தொங்கிய சங்கரை மீட்டு பாகூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சங்கர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து சரஸ்வதி பாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த தொழில் அதிபர் விபத்தில் பலியானார்.
புதுச்சேரி:
கோட்டக்குப்பம் அருகே உள்ள இடையஞ்சாவடி கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர். அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர்.
இவரது மூத்த மகன் முருகசாமி என்கிற விஜய் (வயது 40). இவர், அதே பகுதியில் ஊதுவத்தி கம்பெனி நடத்தி வந்தார். பழுதான தனது இருசக்கர வாகனத்தை புதுவையில் பழுது நீக்க கொடுத்து இருந்தார்.
இரு சக்கர வாகனத்தை பழுது நீக்கி எடுத்துக் கொண்டு கோட்டக்குப்பம் வழியாக இடையஞ்சாவடி கிராமத்திற்கு சென்றார்.
சின்ன கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் சென்ற போது மாடு திடீரென குறுக்கே சென்றது. மோட்டார் சைக்கிள் மாட்டின் மீது மோதியதில் முருகசாமி தூக்கி வீசப்பட்டார்.
இதனால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அங்கிருந்த வர்கள் மீட்டு ஜிப்மர் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முருகசாமி அதிகாலை இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து இவருடைய சகோதரர் விஷ்ணுகாந்த் கொடுத்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் இன்ஸ் பெக்டர் ராபின்சன், சப்&இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாலையின் குறுக்கே சென்ற மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலதிபர் பலியான சம்பவம் இடையஞ்சாவடி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உக்ரைன் போரில் மரணமடைந்த கர்நாடக மாநில மருத்துவ மாணவர் நவீனுக்கு மலரஞ்சலி செலுத்துத் நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி:
உக்ரைன் போரில் மரணமடைந்த கர்நாடக மாநில மருத்துவ மாணவர் நவீனுக்கு புதுவை யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் மலரஞ்சலி செலுத்துத் நிகழ்ச்சி அண்ணாசிலை அருகில் நடந்தது.
கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார்.எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ., மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.எஸ் சுப்பிரமணியம் ஆகியோர் உயிரிழந்த மாணவர் நவீன் உருவபடத்திற்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
இதில் விடுதலை சிறுத்தைகள் தமிழ்மாறன், ம.தி.மு.க. கபிரியேல், இந்திய கம்யூனிஸ்டு சலீம், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ் ராஜா, செல்வகுமார் தமிழர்களம் அழகர், தந்தை பெரியார் திராவிடர் கழகம் வீரமணி, பெரியார் சிந்தனையாளர் இயக்கம் தீனா, தலித் பேந்தர் ஆப் இந்தியா அறிவுமணி.
இந்திய தேசிய இளைஞர் முன்னணி கலைப்பிரியன், இந்திய புரட்சியாளர் இயக்கம் டேவிட், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆனந்து, இந்திய மாணவர் சங்கம் ஜெய பிரதாப், எஸ்.டி.பி.ஐ. கட்சி முஹமது சாலி, நாவலர் நெடுஞ்செழியன் பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் கணேஷ் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பு துணைத் தலைவர் தமிழ்ச் செல்வன் மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.
கல்வி, வேலை வாய்ப் புக்காக புலம்பெயர்ந்த இந்திய மாணவர் மற்றும் இளைஞர்களை பாதுகாப்போடு இந்தியா அழைத்துவர மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பின் மாநில செயலாளர் பிரசாந்த் தலைமையில் ஷிஷாந்த் மற்றும் மாணவர் கூட்டமைப்பு நிர்வாகிகள் செய்திருந்தனர்.
வைத்திலிங்கம் எம்.பி. புகார் மருத்துவ காப்பீடு திட்டம் செயல் இழந்ததால் ஏழை நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தி லிங்கம் எம்.பி. கூறியுள்ளார்.
புதுச்சேரி :
புதுவை வைத்திலிங்கம் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசு சுகாதாரத்துறை வழங்குகிற காப்பீடு அட்டையை எந்த தனியார் மருத்துவ மனையும் ஏற்றுக்கொள்ளவில்லை. புதுவை மாநிலத்தில் மட்டுமின்றி, அண்டை மாநிலத்திலும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் காரணமாக நோயாளிகள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நோயாளிகளுக்கு வேண்டிய உதவியை யாரிடம் பெற்றுக் கொள்வது என்று தெரியாத நிலை உள்ளது. மேலும் நோயாளிகளுக்கு வழிகாட்டுவதற்கு துறையை சார்ந்தவர்களும் தயாராக இல்லை. அதிகாரிகளுக்கும் கூட எந்த மருத்துவமனைக்கு சென்றால் பலன்களை பெற முடியும் என்ற விபரம் தெரியவில்லை.
புதுவையை சேர்ந்தவர்கள் அண்டை மாநிலத்திற்கு செல்லும் போது அங்கு ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் எங்கு செல்வது என்றும் வழிகாட்டப்படவில்லை. காரைக்காலில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரியில் இடமில்லை.
எனவே இந்த மருத்துவ திட்டம் முழுமையாக செயல் இழந்து இருக்கிறது. மக்களுக்கு எந்த விதமான பயனும் இல்லாமல் உள்ளது. அரசு மவுனமாக இருந்து ஏழை நோயாளிகள் பாதிப்பை கண்டும் காணாமல் இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
உடனடியாக கவர்னரும், முதல்-அமைச்சரும் தலையிட்டு ஏழை நோயாளி களுக்கு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்
இவ்வாறு வைத்திலிங்கம் எம்.பி. அறிக்கையில் கூறியுள்ளார்.