என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை
பாகூர் அருகே காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
பாகூர் அருகே குடியிருப்பு பாளையம் அய்யனார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 49). இவர் அபிஷேகபாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி யில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.
சங்கருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லவில்லை என தெரிகிறது.
மேலும் குடிப்பதற்கு அவரது மனைவி சரஸ்வதியுடன் பணம் கேட்டு வற்புறுத்தி வந்துள்ளார். இதனை சரஸ்வதி கண்டித்து பணம் தரவில்லை என தெரிகிறது.
இந்நிலையில் சரஸ்வதியிடம் கோபித்துக் கொண்டு சங்கர் அருகிலுள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று அங்கேயே தங்கி விட்டார்.
இந்நிலையில் சங்கர் அங்குள்ள ஒரு மரத்தில் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தொங்குவதாக அங்கிருந்தவர்கள் சரஸ்வதிக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே சரஸ்வதி உறவினர்களுடன் அங்கு சென்று தூக்கில் தொங்கிய சங்கரை மீட்டு பாகூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சங்கர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து சரஸ்வதி பாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






