என் மலர்
உள்ளூர் செய்திகள்

தற்கொலை
காரைக்காலில் என்.சி.சி. அலுவலக அரசு ஊழியர் தற்கொலை
காரைக்காலில் என்.சி.சி. அலுவலக அரசு ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால்:
காரைக்கால் கோவில்பத்து அம்பேத்கர் நகரைச்சேர்ந்தவர் காளிதாஸ் (வயது49). இவர், காரைக்கால் செய்தி மற்றும் விளம்பரத்துறையிலும் பின்னர் காரைக்கால் என்.சி.சி.அலுவலகத்திலும் அரசு ஊழியராக (எம்.டி.எஸ்) பணியாற்றி வந்தார்.
இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சனை காரணமாக, வேலைக்கு செல்லாமல், அதிகம் மது அருந்தி, உணவு உட்கொள்ளாமல் இருந்து வந்ததாகவும், மனைவி மற்றும் நண்பர்களிடம், தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக புலம்பி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டு அறையில், யாரும் இல்லாத நேரத்தில், புடவையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து அவரது மனைவி செந்தாமரை, காரைக்கால் நகர காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story