என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
7 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.7 கோடி நிவாரணம்
புதுவையில் கனமழையால் பாதிக்கப்பட்ட 7 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.7 கோடி நிவாரணம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த ஆண்டு இறுதியில் வரலாறு காணாத மழை பெய்தது.
மழையால் விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அரசு சிவப்பு ரேசன் கார்டுதாரர்களுக்கு ரூ.5 ஆயிரம், மஞ்சள் கார்டுதாரர்களுக்கு ரூ.4 ஆயிரத்து 500 மழை நிவாரணமாக வழங்கியது.
சாகுபடி செய்த பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.
இப்போது இந்த நிவாரணத்தை வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. விவசாயிகளின் வங்கி கணக்கில் இத்தொகை செலுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது அதிக கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயி கள் சாகுபடி செய்த பயிர் களுக்கான நிவாரண தொகை ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வழங்க முதல்&அமைச்சர் அறிவித்தார்.
இதன்படி விவசாயிகளுக்கு நிவாரண தொகை ரூ.7 கோடியே 10 லட்சத்து 57 ஆயிரத்து 600 வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதனால் புதுவை, காரைக்கால், ஏனாம் பகுதிகளை சேர்ந்த 7 ஆயிரத்து 16 விவசாயிகள் பயனடைவர். கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக் கான நிவாரண தொகை புதுவையை சேர்ந்த 6 ஆயிரத்து 54 விவசாயி களுக்கு ரூ.5 கோடியே 97 லட்சத்து 11 ஆயிரத்து 200, காரைக்காலை சேர்ந்த 731 விசாயிகளுக்கு ரூ.97 லட்சத்து 55 ஆயிரத்து 800, ஏனாமை சேர்ந்த 231
விவசாயிகளுக்கு ரூ.15 லட்சத்து 90 ஆயிரத்து 600 விரைவில் வங்கி கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story






