என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவர் நவீன் உருவ படத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்-.ஏ., காங்கிரஸ் மாநில தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் ஆகி
உக்ரைன் போரில் மரணமடைந்த மாணவர் படத்துக்கு அஞ்சலி
உக்ரைன் போரில் மரணமடைந்த கர்நாடக மாநில மருத்துவ மாணவர் நவீனுக்கு மலரஞ்சலி செலுத்துத் நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி:
உக்ரைன் போரில் மரணமடைந்த கர்நாடக மாநில மருத்துவ மாணவர் நவீனுக்கு புதுவை யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் மலரஞ்சலி செலுத்துத் நிகழ்ச்சி அண்ணாசிலை அருகில் நடந்தது.
கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார்.எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ., மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.எஸ் சுப்பிரமணியம் ஆகியோர் உயிரிழந்த மாணவர் நவீன் உருவபடத்திற்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
இதில் விடுதலை சிறுத்தைகள் தமிழ்மாறன், ம.தி.மு.க. கபிரியேல், இந்திய கம்யூனிஸ்டு சலீம், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ் ராஜா, செல்வகுமார் தமிழர்களம் அழகர், தந்தை பெரியார் திராவிடர் கழகம் வீரமணி, பெரியார் சிந்தனையாளர் இயக்கம் தீனா, தலித் பேந்தர் ஆப் இந்தியா அறிவுமணி.
இந்திய தேசிய இளைஞர் முன்னணி கலைப்பிரியன், இந்திய புரட்சியாளர் இயக்கம் டேவிட், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆனந்து, இந்திய மாணவர் சங்கம் ஜெய பிரதாப், எஸ்.டி.பி.ஐ. கட்சி முஹமது சாலி, நாவலர் நெடுஞ்செழியன் பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் கணேஷ் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பு துணைத் தலைவர் தமிழ்ச் செல்வன் மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.
கல்வி, வேலை வாய்ப் புக்காக புலம்பெயர்ந்த இந்திய மாணவர் மற்றும் இளைஞர்களை பாதுகாப்போடு இந்தியா அழைத்துவர மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பின் மாநில செயலாளர் பிரசாந்த் தலைமையில் ஷிஷாந்த் மற்றும் மாணவர் கூட்டமைப்பு நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story






