என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பாகூர் கொம்யூனில் கிராம சபை கூட்டத்தில் அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    புதுச்சேரி:

    தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட  பரிக்கல்பட்டு, கிராம பஞ்சாயத்து சார்பில்  சிறப்பு கிராம சபை கூட்டம்  நடைபெற்றது. 

     இந்த கூட்டத்திற்கு பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக செந்தில்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

    பாகூர் வேளாண்துறை அதிகாரி பரந்தாமன், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து உதவி பொறியாளர் முத்து சிவம், மேலாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    இந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்திற்கு மேல்பரிக்கல்பட்டு, கீழ்பரிக் கல்பட்டு, சின்ன ஆராய்ச்சிக் குப்பம், பெரிய ஆராய்ச்சிகுப்பம், கொமந்தான்மேடு கிராமத்தைச் சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  இதில் ஆராய்ச்சி குப்பம் பரிக்கல்பட்டு. கொமந்தான்மேடு  குடியிருப்புப் பகுதியில் மின் வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி, செய்து கொடுக்க வேண்டும். இளைஞர்களுக்கு விளை யாட்டு திடல் அமைத்து தரவேண்டும்.

    சுத்தமான குடிநீர் அனைத்து குடும்பங்களுக்கும் வழங்க வேண்டும். சுடுகாடு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கிராமசபை கூட்டத்தில் நிறை வேற்றப்பட்டன.

     மேலும் விவசாய கடன் பெறும் அட்டை பெறுவதற் கான விண்ணப்பம் வழங்கப் பட்டது. முடிவில் பரிக்கல் பட்டு செயல்அதிகாரி ஆனந்தராஜ் நன்றி கூறினார்.

    இதைப்போல பாகூரில் உள்ள 13 கிராமபஞ்சாயத்துகளில் கிராம கூட்டம்  நடந்தது.
    பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.
    புதுச்சேரி:

    பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் பாவலர் சரசுவதி வைத்தியநாதன் எழுதிய குடும்பம் ஒரு கோவில்,  வானவில் பூக்கள் ஆகிய 2 நூல்கள் வெளியீட்டு விழா ஆந்திர மகாசபாவில் நடைபெற்றது. 

    அமைச்சர் லட்சுமி நாராயணன்  நூல்களை வெளியிட்டார். அதனை உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி பெற்று கொண்டார்.

    இந்நிகழ்ச்சிக்கு   பாரதிதாசன் பேரன் பாரதி முன்னிலை வகித்தார், விழாவில் பாரதிதாசன் அறக்கட்டளை உறுப்பினர்கள், சமூக ஆய்வாளர்கள், தமிழ் எழுத்தாளர்கள்  கலந்து கொண்டனர்.
    பிரதமரின் வாக்குறுதிப்படி சிறந்த புதுவையாக மாற்றுவோம் மத்திய மந்திரி அமித்ஷா உறுதியளித்தார்.
    புதுச்சேரி:

    புதுவை கம்பன் கலையரங்கில் நடந்த அரசு விழாவில்  மத்திய மந்திரி அமித்ஷா பங்கேற்று கிழக்கு கடற்கரை சாலையில் புதிய பஸ் நிலையம், விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் உள்ளிட்ட திட்டப்பணிகளை தொடங்கி வைத்து.  பேசியதாவது:-

    புதுவை மக்களின்  ஆதரவால் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சிறந்த  புதுவையாக்குவோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார். 

    நாங்கள் மீண்டும் வரும் போது சிறந்த புதுவையாக மாற்றி விட்டுத்தான் வருவோம்.  அதன் ஒருகட்டமாகத்தான் இப்போது ரூ.362.91 கோடியில் புதிய பஸ் நிலையம்,, தாவரவியல் பூங்கா விரிவாக்கம், சூரிய மின்ஒளி தயாரிப்பு திட்டம்,  பாரம்பரிய நகரம், சுற்றுலா திட்டம் என பல்வேறு திட்டங்களை தொடங்கியுள்ளோம். 

    காங்கிரஸ் ஆட்சி காலத்தில் லஞ்ச, ஊழல் மட்டுமே இருந்தது. என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா ஆட்சி மாநில  மக்களின் வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறது.

    காங்கிரஸ் ஆட்சி ஏழைகளைப்பற்றி கவலைப்படாத பொய் தகவல்கூறும் ஆட்சியாக நடந்து வந்தது. பிரதமர் மோடி கூறியபடி புதுவையை முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம்  ஆகியோர் சிறந்த புதுவையாக மாற்றுவார்கள். 

    இவ்வாறு அவர் பேசினார்.
    அரசு பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.
    புதுச்சேரி:

    பிள்ளைச்சாவடி நா. வரதன் அரசு நடுநிலைப் பள்ளியில் சமுதாய நலப்பணித்  திட்டம் மற்றும் தேசிய பசுமைப் படை இணைந்து சாலை பாதுகாப்பு, இயற்கையை காப்போம் மற்றும் கல்வியின் முக்கியத்துவம் குறித்த முப்பெரும் விழா நடைபெற்றது.

    பள்ளி தலைமையாசிரியை திலகவதி தலைமை தாங்கினார். தமிழாசிரியர் ஜெகதீசன்  வரவேற்றார். போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக சத்யா சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 

    மேலும் உதவி  சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பொம்மலாட்ட நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகளை வழங்கினார். 

    தொடர்ந்து செல்லிப்பட்டு பட்டதாரி ஆசிரியர் சோமசுந்தரம்  பொம்மலாட்டத்தின்  மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 

    முடிவில் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பாரதிதாசன்   நன்றி கூறினார். 

    முன்னதாக பகல் 12 மணி அளவில் நிழல் இல்லாத நிகழ்வு குறித்த  அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி  நடைபெற்றது.  நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செல்வநாயகி, உமாமகேஸ்வரி, பிரேமானந்த் கோன்தரன், கோபாலகிருஷ்ணன், விஜயபாஸ்கர், நான்சி ரத்தினகுமாரி, உமாதேவி மற்றும் அலுவலக ஊழியர்கள் இணைந்து செய்திருந்தனர்.
    ஜிப்மரில் கொரோனா சிகிச்சை மையம் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    இந்தியாவில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. 

    பிற மாநிலங்களில் இருந்து புதுவைக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். அவர்கள் மூலம் மீண்டும் புதுவையில் தொற்று பரவல் அதிகரிக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஜிப்மர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இணைப்பு கட்டடத்தில் கொரோனா சிகிச்சை மையம் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 

    அனைத்து உபகரணங்கள், மருந்துகளுடன், பணியாளர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். கோரிமேடு மார்பக நோய் மருத்துவமனையில் உள்ள மாநில சுகாதாரத் துறையின் கொரோனா வார்டிலும் சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
    முத்தியால்பேட்டையில் தச்சு தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை சுப்பிரமணியர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த கிருஷ்ணன். தச்சு தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் பெருமாள் ராஜ் என்ற மகனும் உள்ள-னர். 

    கருத்து வேறுபாடு காரணமாக ஆனந்த-கிருஷ்ணனை விட்டு பிரிந்து அவரது மனைவி, தனது மகன் பெருமாள் ராஜுடன் சாரம் சக்தி நகரில் வசித்து வருகிறார். 

    கடந்த சில நாட்களாக ஆனந்தகிருஷ்ணன் உடல்-நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். அவரை அவ்வப்-போது அவரது மகன் பெருமாள் ராஜ் பார்த்து நலம் விசாரித்து விட்டு செல்வார். 

    இந்த நிலையில்  ஆனந்த-கிருஷ்ணனுக்கு மேலும் உடல்நிலை பாதிக்கப்படவே அவரை  அவரது மகன் பெருமாள் ராஜ் தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தார். 

    இந்த நிலையில்  பெருமாள்ராஜ் தனது தந்தையை பார்க்க முத்தியால் பேட்டையில் உள்ள வீட்டுக்கு வந்தார். 

    அப்போது அனந்த-கிருஷ்ணன் தூக்கு போட்டு தொங்குவதை கண்டு பெருமாள்ராஜ் அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர்  உதவியுடன் அனந்தகிருஷ்ணனை தூக்கில் இருந்து மீட்டு கதிர்காமம் அரசு ஆஸ்பத்-திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்-டர்கள் ஏற்கனவே அனந்தகிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

    இதுகுறித்து பெருமாள்-ராஜ்-முத்தியால் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    நெல்லித்தோப்பு மார்க்-கெட் வீதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி ராதா (70). இவர்களுக்கு குழந்தை ஏதும் இல்லை. 

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சங்கர் இறந்து விட்டதால் ராதா தனது அண்ணன் மகள் மாலதி பராமரிப்பில் இருந்து வந்தார். அவருக்கு அவ்வப்-போது மாலதி உணவு மற்றும் மருத்துவ உதவி செய்து வந்தார். 

    இந்த நிலையில் மாலதி தனது அத்தை ராதாவை பார்க்க அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் ராதா இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

    வயது முதிர்ச்சியினாலோ அல்லது நோய் பாதிப்பாலோ ராதா இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. 

    இதுகுறித்து மாலதி உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார்.  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை தங்கிய தினம் - பக்தர்கள் கூட்டு தியானம் நடைபெற்றது.
    புதுச்சேரி:

    அரவிந்தர் ஆசிரம அன்னை, 1941-ம் ஆண்டு மார்ச் 29-ந் தேதி முதன்முறையாக புதுவை வந்தார். 

    சில காலம் இங்கு தங்கியிருந்த அன்னை பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர், 1920-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி மீண்டும் புதுவைக்கு வந்த அன்னை, ஆசிரமத்திலேயே நிரந்தரமாக தங்கிவிட்டார். 

    அந்த ஆண்டின் நவம்பர் மாதத்தில் ஆசிரம பொறுப்புகளை அன்னையிடம், அரவிந்தர் ஒப்படைத்தார். 

    அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை நிரந்தரமாக தங்கிய தினம், ஆசிரமத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப் பட்டு வருகிறது.

    அதன்படி ஆசிரமத்தில் அன்னை நிரந்தரமாக தங்கிய தினத்தை முன்னிட்டு, அரவிந்தர், அன்னை தங்கியிருந்த அறைகளை திறந்து, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பார்வையிட திறந்து வைக்கப்பட்டது.

     இதில் உள்ளுர் மற்றும் வெளியூரை சேர்ந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து ஆசிரமத்தில் கூட்டு தியானம் நடைபெற்றது.
    முத்தியால் பேட்டையில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.8 லட்சம் நகையை கொள்ளையடித்த பெண் சிக்கினார்.
    புதுச்சேரி:

    புதுவை முத்தியால் பேட்டை டி.வி.நகர் செட்டிக்குளம் வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணி இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி அனிதா வயது 38  இவர் சேதராப்பட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். 

    சம்பவத்தன்று அனிதா தனது 18 பவுன் நகைகளை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு பீரோவில் வைத்து பூட்டி பீரோ சாவியை வீட்டின் ஒரு மறைவான இடத்தில் வைத்து விட்டு  வேலைக்கு சென்றார். பின்னர் வேலை முடிந்து வந்து பார்த்த போது நகை வைத்திருந்த பிளாஸ்டிக் டப்பா காலியாக கிழே கிடப்பதை கண்டு திடுக்கிட்டார். யாரோ  மர்ம நபர்கள் அனிதா பீரோ சாவியை மறைவான இடத்தில் வைத்து செல்வதை கண்காணித்து பின்னர் அவர் சென்ற பின் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளை போன நகையின் மொத்த மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும். 

    இது குறித்து அனிதா முத்தியால் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திண்டிவனம் ஜக்காம் பேட்டையை சேர்ந்த் வளர்மதி 32 என்ற பெண் ஜிப்மரில் சிகிச்சைகாக கடந்த சில நாட்களாக டி.வி. நகரில் வாடகை வீட்டில் தங்கியிருந்து வந்ததும் சம்பவத்தன்று அனிதா வேலைக்கு சென்ற பின்னர் பீரோ சாவியை எடுத்து நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
    இதையடுத்து வளர்மதியை பிடித்து போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.
    பிரான்ஸ் அதிபரை தேர்வு செய்ய 2-ம் கட்ட தேர்தல் நடந்தது.


    புதுச்சேரி:


    பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி தேர்தல் கடந்த 10-ந் தேதி நடந்தது. 

    இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் இமானுவேல் மெகரான், மெரின்லி ஆகிய இருவரும் அதிக வாக்குகள் பெற்றுள்ளனர். அவர்களில் யாரும் 50 சதவீத வாக்குகள் பெறாததால், இன்று 2-ம் கட்ட தேர்தல் நடந்தது. 

    பிரான்ஸ் மற்றும் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற பகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.வாக்குப்பதிவு காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. 

    தேர்தலில் புதுவை மற்றும் சென்னையில் 4 ஆயிரத்து 500-க்கும்.மேற்பட்டோர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். புதுவை கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு துணை தூதரகம் மற்றும் பிரெஞ்சு பள்ளி என 2 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 
    இதேபோல், காரைக் காலிலும் ஒரு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் தேர்தலில் அதிக வாக்குகள் பெறுபவரே அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார்.
    விமான நிலைய வாசலில் பா.ஜனதா தொண்டர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் உற்சாகத்தோடும், ஆரவாரத் தோடும் வரவேற்றனர். அமித்ஷாவுக்கு மலர்களை துவவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவைக்கு ஒரு நாள் சுற்றுப்பயணமாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று வந்தார்.

    சென்னை ஆவடியில் இருந்து 9.36 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்ட அமித்ஷா புதுவை லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு காலை 10.10 மணிக்கு வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், சாய்.ஜெ.சரவணன் குமார், சந்திரபிரியங்கா, பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா பிரமுகர்கள் சால்வை அணிவித்தும், பூங்கொத்து அளித்தும் வரவேற்றனர்.

    விமான நிலைய வாசலில் பா.ஜனதா தொண்டர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் உற்சாகத்தோடும், ஆரவாரத் தோடும் வரவேற்றனர். அமித்ஷாவுக்கு மலர்களை துவவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தொண்டர்களின் வரவேற்பை அவர் மகிழ்வோடு ஏற்றுக்கொண்டார். பின்னர் மத்திய மந்திரி அமித்ஷா கார் மூலம் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள மகாகவி பாரதியார் நினைவு இல்லத்துக்கு வந்து அவரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    பின்னர் அங்கிருந்து கார் மூலம் அரவிந்தர் ஆசிரமத்துக்கு வந்தார். மத்திய மந்திரி அமித்ஷாவை ஆசிரம நிர்வாகிகள் வரவேற்றனர். அங்கு மகான் அரவிந்தர், அன்னை மீரா ஆகியோரின் சமாதியில் மலர் வைத்து அமித்ஷா அஞ்சலி செலுத்தினார்.

    பின்னர் மகான் அரவிந்தர், அன்னை ஆகியோரின் அறையை பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் புதுவை பல்கலைக் கழகத்துக்து சென்று அங்கு நடந்த மகான் ஸ்ரீஅரவிந்தரின் 150-வது பிறந்தநாள் ஆண்டு விழாவில் பங்கேற்றார். பல்கலைக்கழகத்தில் பல்வேறு புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

    மத்திய மந்திரி அமித்ஷா வருகையையொட்டி காலை 10 முதல் 10.20 மணி வரை விமான நிலை சாலை, என்.சி.சி., தலைமை அலுவலகம், நாவலர் நெடுஞ்செழியன் பள்ளி, குளூனி பள்ளி, லதா ஸ்டீல் அவுஸ் சந்திப்பு, மடுவுபேட் சந்திப்பு, சிவாஜி சிலை, முத்தியால் பேட்டை ஏழை மாரியம்மன் கோவில், முத்தியால்பேட்டை காந்தி வீதி, அஜந்தா சிக்னல், எஸ்.வி. பட்டேல் சாலை, ஈஸ்வரன் கோவில் தெரு வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

    காலை 10.35 முதல் 10.40 மணி வரை செஞ்சி சாலை, மரைன் வீதி, அரவிந்தர் ஆசிரம் பகுதியிலும், 10.50முதல் 11 மணி வரை செயின்ட் லூயிஸ் வீதி, பழைய சாராய ஆலை, எஸ்.வி. பட்டேல் சாலை, அஜந்தா சிக்னல், முத்தியால்பேட்டை காந்தி வீதி, கோட்டக்குப்பம், இ.சி.ஆர்., ரவுண்டானா, பெரிய முதலியார் சாவடி, பொம்மையார்பாளையம், பிள்ளைச்சாவடி, புதுவை பல்கலைக்கழகம் வரையிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

    மதியம் 12.30 முதல் 12.40 மணி வரை பிள்ளைச்சாவடி, பொம்மையார்பாளையம், பெரியமுதலியார்சாவடி, கோட்டக்குப்பம், முத்தியால்பேட்டை, அஜந்தா சிக்னல், எஸ்.வி.பட்டேல் சாலை, கவர்னர் மாளிகை பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

    இன்று மதியம் 1.55 முதல் 2 மணிவரை செஞ்சி சாலை, புஸ்சி வீதி, கம்பன் கலைய ரங்கம், 3.35 முதல் 3.45 மணிவரை அண்ணாசாலை சந்திப்பு, மறைமலையடிகள் சாலை, நெல்லித்தோப்பு, இந்திரா சதுக்கம், பா.ஜனதா தலைமை அலுவலக பகுதியிலும், மாலை 4.50 முதல் 5 மணி வரை இந்திரா சதுக்கம், 100 அடி சாலை, ராஜீவ் சதுக்கம், கொக்குபார்க் சந்திப்பு, லதா ஸ்டீல் ஹவுஸ் சந்திப்பு, லாஸ்பேட்டை விமான சாலையில் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.

    புதுவைக்கு வந்த அமித்ஷாவை வரவேற்கும் விதமாக பிரம்மாண்ட அலங்கார வளைவுகள், கொடி, தோரணங்கள், பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. மத்திய மந்திரி வருகையையொட்டி நகர் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட் டிருந்தனர். அவர் செல்லும் வழியெங்கும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தர். புதுவை முழுவதும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    புதுவை கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு துணை தூதரகம் மற்றும் பிரெஞ்சு பள்ளி என 2 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    புதுச்சேரி:

    பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி தேர்தல் கடந்த 10-ந் தேதி நடந்தது.

    இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் இமானுவேல் மெகரான், மெரின்லி ஆகிய இருவரும் அதிக வாக்குகள் பெற்றுள்ளனர். அவர்களில் யாரும் 50 சதவீத வாக்குகள் பெறாததால், இன்று 2-ம் கட்ட தேர்தல் நடந்தது.

    பிரான்ஸ் மற்றும் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற பகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.வாக்குப்பதிவு காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது.

    தேர்தலில் புதுவை மற்றும் சென்னையில் 4 ஆயிரத்து 500-க்கும்.மேற்பட்டோர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். புதுவை கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு துணை தூதரகம் மற்றும் பிரெஞ்சு பள்ளி என 2 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதேபோல், காரைக்காலிலும் ஒரு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் தேர்தலில் அதிக வாக்குகள் பெறுபவரே அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார்.

    மணக்குள விநாயகர் மருத்துவக்கல்லூரியில் நுரையீரல் உள்நோக்கும் அல்ட்ரா சவுண்டு பரிசோதனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    மணக்குள விநாயகர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நுரையீரல் சிறப்பு மருத்துவ பிரிவில் மாநிலத்திலேயே முதல் முறையாக இ.பி.யு.எஸ். எனும் நுரையீரல் உள்நோக்கும் அல்ட்ரா சவுண்டு பரிசோதனை அறிமுகப்படுத்தப்பட் டுள்ளது. இப்பரிசோதனை நாட்டின் வெகுசில மருத்துவக் கல்லூரிகளிலேயே அமையப்பெற்றுள்ளது.

    இப்பரிசோதனை மூலம் நுரையீரல் உள்ளே உள்ள திசுவினை அல்ட்ரா சவுண்டு மூலம் பரிசோதித்து நோயின் தன்மையை கண்டறிய இயலும். இப்பரிசோதனையின் தொடக்க விழா மணக்குள விநாயகர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமையில் நடந்தது.

    துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன், கல்லூரி இயக்குனர் ராஜகோவிந்தன், துணை இயக்குனர் காக்னே, டீன் கார்த்திகேயன், மருத்துவ கண்காணிப்பாளர் பிரகாஷ், துணை மருத்துவ கண்காணிப்பாளர் கிரிஜா, நுரையீரல் சிறப்பு பிரிவு தலைவர் யுவராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

    நுரையீரல் சிறப்பு மருத்துவர் ஹரிகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவ மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
    ×