என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வாக்களிக்க வந்தவர்கள் வரிசையில் நின்ற காட்சி
    X
    பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வாக்களிக்க வந்தவர்கள் வரிசையில் நின்ற காட்சி

    பிரான்ஸ் அதிபரை தேர்வு செய்ய 2-ம் கட்ட தேர்தல்- புதுவையில் இன்று வாக்குப்பதிவு

    புதுவை கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு துணை தூதரகம் மற்றும் பிரெஞ்சு பள்ளி என 2 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    புதுச்சேரி:

    பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி தேர்தல் கடந்த 10-ந் தேதி நடந்தது.

    இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் இமானுவேல் மெகரான், மெரின்லி ஆகிய இருவரும் அதிக வாக்குகள் பெற்றுள்ளனர். அவர்களில் யாரும் 50 சதவீத வாக்குகள் பெறாததால், இன்று 2-ம் கட்ட தேர்தல் நடந்தது.

    பிரான்ஸ் மற்றும் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற பகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.வாக்குப்பதிவு காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது.

    தேர்தலில் புதுவை மற்றும் சென்னையில் 4 ஆயிரத்து 500-க்கும்.மேற்பட்டோர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். புதுவை கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு துணை தூதரகம் மற்றும் பிரெஞ்சு பள்ளி என 2 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதேபோல், காரைக்காலிலும் ஒரு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் தேர்தலில் அதிக வாக்குகள் பெறுபவரே அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார்.

    Next Story
    ×