என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராம சபை கூட்டத்தில் செந்தில்குமார் எம்.எல்.ஏ. பேசியபோது எடுத்த படம். ‌
    X
    கிராம சபை கூட்டத்தில் செந்தில்குமார் எம்.எல்.ஏ. பேசியபோது எடுத்த படம். ‌

    பாகூர் கொம்யூனில் கிராம சபை கூட்டம்

    பாகூர் கொம்யூனில் கிராம சபை கூட்டத்தில் அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    புதுச்சேரி:

    தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட  பரிக்கல்பட்டு, கிராம பஞ்சாயத்து சார்பில்  சிறப்பு கிராம சபை கூட்டம்  நடைபெற்றது. 

     இந்த கூட்டத்திற்கு பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக செந்தில்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

    பாகூர் வேளாண்துறை அதிகாரி பரந்தாமன், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து உதவி பொறியாளர் முத்து சிவம், மேலாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    இந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்திற்கு மேல்பரிக்கல்பட்டு, கீழ்பரிக் கல்பட்டு, சின்ன ஆராய்ச்சிக் குப்பம், பெரிய ஆராய்ச்சிகுப்பம், கொமந்தான்மேடு கிராமத்தைச் சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  இதில் ஆராய்ச்சி குப்பம் பரிக்கல்பட்டு. கொமந்தான்மேடு  குடியிருப்புப் பகுதியில் மின் வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி, செய்து கொடுக்க வேண்டும். இளைஞர்களுக்கு விளை யாட்டு திடல் அமைத்து தரவேண்டும்.

    சுத்தமான குடிநீர் அனைத்து குடும்பங்களுக்கும் வழங்க வேண்டும். சுடுகாடு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கிராமசபை கூட்டத்தில் நிறை வேற்றப்பட்டன.

     மேலும் விவசாய கடன் பெறும் அட்டை பெறுவதற் கான விண்ணப்பம் வழங்கப் பட்டது. முடிவில் பரிக்கல் பட்டு செயல்அதிகாரி ஆனந்தராஜ் நன்றி கூறினார்.

    இதைப்போல பாகூரில் உள்ள 13 கிராமபஞ்சாயத்துகளில் கிராம கூட்டம்  நடந்தது.
    Next Story
    ×