என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்ற காட்சி.
அரசு பள்ளியில் முப்பெரும் விழா
அரசு பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.
புதுச்சேரி:
பிள்ளைச்சாவடி நா. வரதன் அரசு நடுநிலைப் பள்ளியில் சமுதாய நலப்பணித் திட்டம் மற்றும் தேசிய பசுமைப் படை இணைந்து சாலை பாதுகாப்பு, இயற்கையை காப்போம் மற்றும் கல்வியின் முக்கியத்துவம் குறித்த முப்பெரும் விழா நடைபெற்றது.
பள்ளி தலைமையாசிரியை திலகவதி தலைமை தாங்கினார். தமிழாசிரியர் ஜெகதீசன் வரவேற்றார். போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக சத்யா சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
மேலும் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பொம்மலாட்ட நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகளை வழங்கினார்.
தொடர்ந்து செல்லிப்பட்டு பட்டதாரி ஆசிரியர் சோமசுந்தரம் பொம்மலாட்டத்தின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
முடிவில் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பாரதிதாசன் நன்றி கூறினார்.
முன்னதாக பகல் 12 மணி அளவில் நிழல் இல்லாத நிகழ்வு குறித்த அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செல்வநாயகி, உமாமகேஸ்வரி, பிரேமானந்த் கோன்தரன், கோபாலகிருஷ்ணன், விஜயபாஸ்கர், நான்சி ரத்தினகுமாரி, உமாதேவி மற்றும் அலுவலக ஊழியர்கள் இணைந்து செய்திருந்தனர்.
Next Story






