என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தொற்று பரவல் எதிரொலியாக கொரோனா கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    அண்மைக்காலமாக பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று பரவிவரும் சூழலில் கொரோனா மேலாண்மைக் குழு கூட்டம் கவர்னர் மாளிகையில் நடைபெற்றது. 

    கவர்னர் தமிழிசை  தலைமை தாங்கினார்.தலைமைச்செயலர் அஸ்வனிகுமார், ஏ.டி.ஜி.பி. ஆனந்த மோகன், சுகாதாரத்துறைச்செயலாளர் உதயகுமார், சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு, உலக சுகாதார நிறுவனத்தின் பிரதிநிதி டாக்டர் சாய்ரா பானு, தனியார் மருத்துவ கல்லூரி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    சுகாதாரக் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், மருந்து, தடுப்பூசி உள்ளிட்டவைகளை தயார் நிலையில் வைத்தல், காலியாக உள்ள பணியிடங்களை அவசரகால தேவை கருதி நிரப்புதல், கூட்டு நடவடிக்கை குழுக்கள் அமைத்தல், கொரோனா வழிமுறைகளை நடைமுறைப்படுத்துதல்.

    மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், விமான நிலையம், ரெயில் நிலையம், பஸ் நிலையம் ஆகிய இடங்களிலும் பொதுமக்கள் கூடும் இடங்களிலும் உடல் வெப்பநிலை பரிசோதனை மையங்கள் அமைத்தல், தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்துதல், குழந்தைகள் மீது சிறப்பு கவனம் செலுத்துதல், கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துதல் ஆகியவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
    புதுவையில் சட்ட பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை காலாப்பட்டில் உள்ள அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் 39-வது தேசிய மாதிரி நீதிமன்ற போட்டி தொடங்கியது.

    கல்லூரி முதல்வர் சீனிவாசன் வரவேற்றார். அமைச்சர் நமச்சிவாயம்   போட்டியை தொடங்கி வைத்து பேசும்போது, புதுவை  சட்டக்கல்லூரி சிறந்த கல்லூரியாக தொடரும். இங்கு சட்ட பல்கலைக்கழகம் தனியாக தொடங்கப்படும் என தெரிவித்தார். 

    விழாவில்  மாவட்ட தலைமை நீதிபதி செல்வ நாதன், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். சட்டக்கல்லூரி  மாதிரி நீதிமன்றத்தில் 35 சட்டக்கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். 

    இந்த விழாவில்  பங்கேற்க வக்கீல்கள் சங்கத்துக்கு முக்கியத்துவம் அளிக்காத கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து புதுவை வக்கீல்கள் சங்க தலைவர் குமரன்  தலைமையில் நிர்வாகிகள் கண்டன தீர்மானம் நிறைவேற்றினர்.
    அபிஷேக பாக்கத்தில் ஆற்றில் மணலை திருடி கடத்த முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    புதுச்சேரி:

    அபிஷேக பாக்கம் பகுதியில் குடியாற்றங்கரை உள்ளது இங்கு சட்ட விரோதமாக  மணல் திருடப்படுவதாக தவளக் குப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 

    அப்போது அங்குள்ள ஆற்றில் மணலை திருடி 4 பேர் கொண்ட கும்பல் வேனில் ஏற்றிக் கொண்டிருந்ததை போலீசார் கண்டனர். 

    உடனே அவர்கள் 4 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். 

    விசாரணையில் அவர்கள் வில்லியனூர் கோட்டைமேடு பொறையாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரூபன் லூர்து நாதன் (வயது 21) ராஜ்குமார் (28) சாரதி (19) மற்றும் சிங்கிரிகுடி அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த ரஜினி (36) என்பது தெரியவந்தது. 

    இதை தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் மணலை கடத்த பயன்படுத்திய வேனையும் பறிமுதல் செய்தனர்.
    மனைவி பிரிந்து சென்ற வேதனையில்அளவுக்கு அதிகமாக மது குடித்த பெயிண்டர் பரிதாபமாக இறந்து போனார்.
    புதுச்சேரி:

    புதுவை உழவர்கரை வயல்வெளி வீதியை சேர்ந்தவர் கிரிஸ்தோப் (வயது36) பெயிண்டர்.இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கலைச்செல்வி என்ற பெண்ணுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 

    இவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக கிரிஸ்தோப்பை விட்டு கலைச்செல்வி பிரிந்து சென்று விட்டார்.

    மனைவி பிரிந்து சென்றதால் கிரிஸ்தோப் குடிப் பழக்கத்திற்கு ஆளானார். தினமும் அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்தார்.

    இதனார். அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. கடந்த 1 வாரமாக கிரிஸ்தோப் படுத்தபடுக்கையானார். இந்த நிலையில் நேற்று மதியம் கிரிஸ்தோப் வீட்டில் பேச்சு மூச்சி இன்றி மயங்கி கிடந்தார். உடனே உறவினர்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்து பார்த்தனர். ஆனால் சிறிது நேரத்தில் கிரிஸ்தோப் பரிதாபமாக இறந்து போனார். 

    இது குறித்து அவரது சகோதரர் பிரான்சுவா கொடுத்த புகாரின் பேரில் ரெட்டியார் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    புதுவை மாநில எல்லை பகுதியான மதகடிப்பட்டு பகுதியில் நடுரோட்டில் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
    புதுச்சேரி,23

    புதுவை மாநில எல்லை பகுதியான மதகடிப்பட்டு பகுதியில் தமிழக பகுதியையும், புதுவை பகுதியையும் இணைக்கும் இடத்தில் புதுவை விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் நடுவே  பேரிகார்டு வைக்கப்பட்டுள்ளது. 

    எல்லை பகுதியையொட்டி உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இருந்து வரும் வாகனங்கள் வளைந்து செல்வதற்காகவும் விப
    த்து ஏற்படாத வண்ணம் பேரிகார்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

    ஆனால், அந்த பகுதியில் இரவு நேரம் இருள் சூழ்ந்து காணப்படுவதால் புதுவையில் இருந்து தமிழக பகுதியை நோக்கி வரும் வாகனங்கள் பேரிகார்டில் மோதி விபத்துக்குள்ளாகிறது. 

    புதுவையில் இருந்து தமிழக பகுதியை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற வளவனூர் அருகே உள்ள சாலையம்பாளையம்  பகுதியை சேர்ந்த கவி என்பவர் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

    இந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் போக்குவரத்து போலீசார் பேரிக்கார்டில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும் என்றும், பேரிகார்டுகளை விபத்து ஏற்படாத வண்ணம் வைக்குமாறும் அப்பகுதி பொதுமக்கள் போக்குவரத்து போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    புதுச்சேரி தவளக்குப்பம் அண்ணா நகரில் சொர்ணாகர்ஷண பைரவர்அஷ்ட பைரவர்கள் கோவில்களில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது.
    புதுச்சேரி, 23:

    புதுச்சேரி தவளக்குப்பம் அண்ணா நகரில் சொர்ணாகர்ஷண பைரவர் மற்றும் அஷ்ட பைரவர்கள் கோவில் உள்ளது, இந்த கோவிலில் தேய்பிறை அஷ்டமி திருவிழா கடந்த 19ந் தேதி கொடியேற்றத் துடன் தொடங்கியது.
     அதனைத் தொடர்ந்து நேற்று மாலை 6 மணியளவில் முதல்கால பூஜைகள் தொடங்கியது,

    20ந் தேதி காலை 6 மணியளவில் 2ம் கால பூஜையும், உற்சவ மூர்த்தி களுக்கு விசேச அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது. தொடர்ந்து 21ந் தேதி சிறப்பு பூஜைகள் நடைபெற்று, மகா தீபாரா தனையுடன் லட்ச்சார்ச்சனை நடை பெற்றது. முக்கிய நாளான நேற்று காலை சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. ஊரணி பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபட்டனர். 

    அதனைத் தொடர்ந்து இரவு 108 திருவிளக்கு வழிபாடு பூஜை நடை பெற்றது. இதில் திரளான பெண்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
    விழா மற்றும் பூஜை ஏற்பாட்டினை விழாக்குழு தலைவர் ராயல் மற்றும் அண்ணா நகர் கிராம வாசிகள் செய்திருந்தனர்.

    தனியார் பஸ் வரும் நேரத்தில் அரசு பஸ் இயங்கியதால் தனியார் பஸ் டிரைவர், அரசு பஸ் திருநள்ளாறு பிரதான சாலையில் சென்ற போது, சாலை நடுவே வழிமறித்து நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    காரைக்கால்:

    காரைக்கால் திருச்சி இடையே, மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த பல நாட்களாக, திருநள்ளாரில் இருந்து தனியார் பஸ் காரைக்காலுக்கு செல்லும் நேரத்தில், அம்பகரத்தூரில் இருந்து காரைக்காலுக்கு அரசு பஸ் இயக்கப்பட்டுள்ளது.

    அரசுப் பஸ் இயக்கக் கூடிய நேரத்தை தவிர்த்துவிட்டு தனியார் பஸ் வரும் நேரத்தில் இயங்கியதால் தனியார் பஸ் டிரைவர் பலமுறை காரைக்கால் மாவட்ட போக்குவரத்து துறையில் புகார் செய்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    நேற்று மாலை தனியார் பஸ் வரும் நேரத்தில் அரசு பஸ் இயங்கியதால் தனியார் பஸ் டிரைவர், அரசு பஸ் திருநள்ளாறு பிரதான சாலையில் சென்ற போது, சாலை நடுவே வழிமறித்து நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரசு பஸ் தனியார் பஸ் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பஸ்ஸில் பயணிகள் பள்ளி முடித்து செல்லும் மாணவ மாணவிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். மேலும், திருச்சி பிரதான சாலையான காரைக்கால் திருநள்ளாறு சாலையில் அரை மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, திருநள்ளாறு மற்றும் மாவட்ட போக்குவரத்து போலீசார் சமாதானம் செய்ததையடுத்து போக் குவரத்து சீரானது.

    பாகூரில் விஷ வண்டு கடித்து 4 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    புதுச்சேரி:

    பாகூர்  வில்லியனூர் செல்லும் சாலையில் ஏராளமான புளிய மரங்கள் வழி நெடுகிலும் இருந்து வருகிறது. இதில் ஒரு புளிய மரத்தில் விஷ வண்டு கூடுகட்டி உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை அவ்வழியாக சென்ற அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவம் (72), திலகம் (65), கங்கா (80), தண்டபாணி (62) ஆகிய 4 பேரை அடுத்தடுத்து விஷ வண்டு கடித்தது.

    இதில் காயமடைந்த 4 பேரும் அருகில் உள்ள பாகூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    தகவலறிந்த பாகூர் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அதிகாரி பக்கிரி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் நேற்று இரவு 10 மணி அளவில் புளிய மரத்தில் கூடு கட்டி இருந்த விஷ வண்டை தீவைத்து அகற்றினர்.

    அதே பகுதியில் மேலும் 2 விஷ வண்டு கூடுகள் உயரமான மரத்தில் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். 

    அதையும் வனத்துறை உதவியுடன் தீயணைப்பு படை வீரர்கள் தீ வைத்து அகற்ற நடவடிக்கை எடுப்பதாக தீயணைப் புத்துறை நிலைய அதிகாரி தெரிவித்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் 100 நாள் வேலையில் வேலை செய்து கொண்டிருந்த பெண் ஒருவரை விஷ வண்டு கடித்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
    புனித லூர்து மாதா தேவாலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூரில் உள்ள பிரசித்திபெற்ற  தூய லூர்து அன்னை  திருத்தலத்தின் ஆண்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகை முடிந்த 6வது நாளில் கொடியேற்றத்துடன் தொடங்கும்.

    145வது ஆண்டு திருவிழா கொடியேற்றதுடன் தொடங்கியது. 
    காலை 5.30 மணிக்கு திருத்தல வளாகத்தில் அமைந்திருக்கும் அருள்நிறை ஆலயத்தில் நடைபெற்ற கூட்டு திருப்பலிக்கு பின்னர், திருத்தல  முற்றத்தில் உள்ள கொடிமரத்தில்  சென்னை  மயிலை உயர் மறைமாவட்ட முன்னாள் பேராயர் சின்னப்பா கொடியேற்றி ஆண்டு திருவிழாவினை தொடங்கி வைத்தார். 

    முன்னதாக அருள்நிறை ஆலயத்தில் இருந்து திருக்கொடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கொடி யேற்றப்பட்டது. 
    இதனை தொடர்ந்து திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் திருப்பலி மற்றும் தேர் பவனி நடைபெறுகிறது.
    அபிஷேகபாக்கம் பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த போலீசார் மினி லாரியை பறிமுதல் செய்தனர்.
    பாகூர்:

    தவளக்குப்பம் அடுத்த அபிஷேகபாக்கம் தமிழக பகுதியை சேர்ந்த கிளிஞ்சிகுப்பம் கிராமத்துக் இடையே மலட்டாற்றின் ஓடை இருந்து வருகிறது. இந்த ஓடையில் சில சமூக விரோதிகள் மணலை கட்டுமானப் பணிக்கு திருட்டுத்தனமாக மணல் வாரி விற்பனை செய்து வருகின்றனர். அது சம்மந்தமாக அவ்வப்போது அப்பகுதி மக்கள் வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்து கண்டுகொள்ளாமல் இருந்துந்தனர்.

    வந்த நிலையில் நேற்று இரவு மணல் திருட்டு நடப்பதாக அப்பகுதி மக்கள் மீண்டும் தவளகுப்பம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு ஒரு மினி லாரியை வைத்து மணல் ஏற்றிவருவதை கண்டுபிடித்தனர். மணல் திருட்டில் ஈடுபட்ட சிங்கிரிகுடி பகுதியை சேர்ந்த ரஜினி வயது 30, வில்லியனூர் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த சாரதி வயது 19, ரூபன் வயது 21, ராஜ்குமார் வயது 28, ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் மணல் திருட்டில் பயன்படுத்திய மினி லாரி போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
    85 வார்டுகளுக்கு நிர்வாகிகள் மனு தாக்கல் நடந்தது.
    புதுச்சேரி:

    புதுவை மேற்கு மாநில அ.தி.மு.க.வுக்குட்பட்ட வார்டு, தொகுதி, நகரம், மாநில நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தல் நடந்தது.

    மேற்கு மாநில தேர்தல் பொறுப்பாளர்கள் அருண்மொழிதேவன், முருகுமணி ஆகியோர் தலைமை வகித்தனர். 

    மேற்கு மாநில செயலாளர்  ஓம்சக்திசேகர் முன்னிலை வகித்தார். முதல் நாளான இன்று வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது. நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக  கலந்துகொண்டு வார்டு  தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை தேர்தல் பொறுப்பாளர்களிடம் தாக்கல் செய்தனர். மேற்கு மாநிலத்துக்குட்பட்ட 85 வார்டுகளுக்கு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

    நிகழ்ச்சியில் அவைத் தலைவர் பேராசிரியர் ராமதாஸ், துணை  தலைவர் ஆனந்தன், இணை செயலாளர்கள் காசிநாதன், மகாதேவி, துணை செயலாளர்கள் கோவிந்தம் மாள், நாகமணி, சதாசிவம், கணேசன், பொருளாளர் சங்கர், இளைஞரணி செயலாளர் விக்னேஷ், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் செல்வராஜ், மாணவரணி செயலாளர் புகழ், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் முருகன், தொகுதி செயலாளர்கள் பொன்னுசாமி, வெங்கடேசன், மணி, தர்மலி ங்கம், கமல்தாஸ்,சேகர், தீன தயாளன், வேலவன், ஆனந்தன், இருசப்பன், கோபால் உட்பட பலர் கலந்துகொண்டனர். 
    அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து தடுப்பூசி போட வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவையில் முதல்- அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசை கவர்னர் தமிழிசை மூலமாக மாற்ற பா.ஜனதாவினர் சதி செய்வதாக எதிர்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இதே குற்றச்சாட்டை கூறியிருந்தார். இந்த நிலையில் கவர்னர் தமிழிசை இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

    ஓட்டல் ஆனந்தா இன்னில் நடந்த தென்னிந்திய வணிக மற்றும் தொழில்அவை சார்பில் நடந்த மாநாட்டை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகை புதுவை வளர்ச்சிக்கு மைல்கல்லாக இருக்கும். பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டவும் உள்ளார்.

    இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருக்கும். ஏற்கனவே பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் புதுவையின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு பக்கபலமாக உள்ளனர்.

    இதனால் அமித்ஷாவின் வருகையை புதுவை மாநிலத்தின் வளர்ச்சிக்கான வருகையாக பார்க்க வேண்டும். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது மாநில வளர்ச்சிக்கே எதிர்ப்பு தெரிவிப்பது போலாகும்.

    அதோடு புதுவையில் ஆன்மிக பணிக்கு நீண்டகாலமாக சேவை செய்த அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் விழாவிலும் அவர் பங்கேற்கிறார்.

    கொரோனா 4-வது அலை பரவல் தொடர்பாக மருத்துவ வல்லுனர்கள் மற்றும் மருத்துவக்கல்லூரி நிர்வாகிகளை அழைத்து பேச உள்ளேன். அனைவரும் முக கவசம் அணிவதை கடைபிடிக்க வேண்டும். கொரோனா பரவல் இல்லை என்பதால் சிலர் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர்.

    தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கு பள்ளிகளில் தடுப்பூசி செலுத்தினோம்.

    இப்போது அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து தடுப்பூசி போட வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட்டதால்தான் கொரோனா பரவாமல் தடுக்கப்பட்டது. தேவைப்பட்டால் சிறப்பு முகாம் நடத்தப்படும்.

    எதிர்கட்சிகளின் ஆட்சி மாற்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றது. ஆக்கப்பூர்வமான கோப்புகளுக்கு நான் தொடர்ந்து அனுமதி அளித்து வருகிறேன். கவர்னர் மாளிகையில் என்ன நடக்கிறது? என யார் வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    முன்னதாக மாநாட்டை தொடங்கி வைத்து கவர்னர் தமிழிசை பேசியதாவது:-

    ஆன்மிகம் மற்றும் சுற்றுலாவுக்கு புதுவை தாய் பூமியாக உள்ளது. பெஸ்ட் புதுவையாக மாற்ற பிரதமர் அறிவித்துள்ளார். அதற்காக பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வருகிறோம்.

    கல்வி, ஆன்மிகம், சுற்றுலா ஆகியவற்றில் பல திட்டங்கள் நிறைவேற்றப் பட்டு வருகிறது. கொரோனாவுக்கு பிறகு பொருளாதாரத்தையும், நாட்டையும் மீட்டெடுக்க பிரதமர் முனைப்போடு செயல்பட்டு வருகிறார்.

    கொரோனா தொடக்க காலத்தில் பாதுகாப்பு உடை மற்றும் உபகரணங்கள் வெளிநாடுகளில் இருந்து வாங்க வேண்டிய நிலையில் இருந்தோம். ஆனால் பின்னர் தன்னிறைவு பெற்று ஏற்றுமதி செய்யும் நிலைமைக்கு கொண்டு வந்துள்ளோம். வெளி நாட்டுக்கு தடுப்பூசியை ஏற்றுமதி செய்கிறோம்.

    புதுவையில் தொழில் தொடங்க வருவோருக்கு அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும். புதுவையில் தொழில் முனைவோர் தொழில்களை தொடங்கி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×