என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேசிய அளவிலான மாதிரி நீதிமன்ற போட்டியை அமைச்சர் நமச்சிவாயம் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரியில் சட்ட பல்கலைக்கழகம்- நமச்சிவாயம் தகவல்
புதுவையில் சட்ட பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை காலாப்பட்டில் உள்ள அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் 39-வது தேசிய மாதிரி நீதிமன்ற போட்டி தொடங்கியது.
கல்லூரி முதல்வர் சீனிவாசன் வரவேற்றார். அமைச்சர் நமச்சிவாயம் போட்டியை தொடங்கி வைத்து பேசும்போது, புதுவை சட்டக்கல்லூரி சிறந்த கல்லூரியாக தொடரும். இங்கு சட்ட பல்கலைக்கழகம் தனியாக தொடங்கப்படும் என தெரிவித்தார்.
விழாவில் மாவட்ட தலைமை நீதிபதி செல்வ நாதன், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். சட்டக்கல்லூரி மாதிரி நீதிமன்றத்தில் 35 சட்டக்கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பங்கேற்க வக்கீல்கள் சங்கத்துக்கு முக்கியத்துவம் அளிக்காத கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து புதுவை வக்கீல்கள் சங்க தலைவர் குமரன் தலைமையில் நிர்வாகிகள் கண்டன தீர்மானம் நிறைவேற்றினர்.
Next Story






