என் மலர்
புதுச்சேரி
புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் நவீன மீன் அங்காடி அருகே ரூ.70 கோடி செலவில் புதிய பஸ்நிலையம் கட்டப்படுகிறது. இந்த பணியை மத்திய மந்திரி அமித் ஷா அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.
புதுச்சேரி:
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் சுற்றுப்பயணமாக புதுவைக்கு வருகிறார்.
இன்று இரவு சென்னை ஆவடியில் தங்குகிறார். அங்கிருந்து காலை 9 மணிக்கு ஹெலிகாப்டரில் புதுவைக்கு புறப்படுகிறார்.
புதுவை லாஸ்பேட்டை விமான நிலையத்தில் நாளை காலை 10 மணிக்கு வந்திறங்குகிறார். அவரை கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வரவேற்கின்றனர்.
தொடர்ந்து அவர் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள மகாகவி பாரதியார் நினைவு இல்லத்துக்கு வருகிறார். அங்கு பாரதியார் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். இதனை தொடர்ந்து அரவிந்தர் ஆசிரமத்துக்கு சென்று அரவிந்தர், அன்னை சமாதிக்கு அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் அங்கிருந்து 11 மணிக்கு புதுவை பல்கலைக்கழகத்துக்கு செல்கிறார்.
அங்கு அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் ஆண்டு விழாவில் பங்கேற்கிறார். பல்கலைக்கழகத்தில் புதிய கட்டிடங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
பின்னர் 12.40 மணிக்கு கவர்னர் மாளிகை வருகிறார். அங்கு மதிய உணவருந்தி ஓய்வெடுக்கிறார். தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், கட்சி பிரமுகர்களை சந்தித்து பேசுகிறார். 2 மணிக்கு கம்பன் கலையரங்கில் நடடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார்.
புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 390 போலீஸ் கான்ஸ்டபிள்களுக்கு பணி ஆணை வழங்குகிறார். குமரகுருபள்ளத்தில் அடுக்குமாடி குடியிருப்பு, விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிக்கு அடிக்கல் நாட்டுவது உட்பட பல திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் நவீன மீன் அங்காடி அருகே ரூ.70 கோடி செலவில் புதிய பஸ்நிலையம் கட்டப்படுகிறது. இந்த பணியை மத்திய மந்திரி அமித் ஷா அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். பின்னர் அங்கிருந்து 3.45 மணிக்கு இந்திராகாந்தி சிலை அருகே உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்துக்கு வருகிறார்.
அங்கு எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். தொடர்ந்து 5 மணிக்கு புதுவை விமான நிலையத்துக்கு சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை செல்கிறார்.
மத்திய மந்திரி அமித் ஷா வருகையையொட்டி புதுவை நகர் முழுவதும் பிரம்மாண்டமான அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளது.
நகர் முழுவதும் கொடி, பேனர், தோரணங்கள் கட்டப்பட்டுள்ளது. பா.ஜனதா சார்பில் 5 இடங்களில் அமித் ஷாவுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. அமித் ஷா வருகையையொட்டி நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவரின் பயண வழி நெடுகிலும் தடுப்புக்கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது.
புதுவையில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விழா நடைபெறும் இடங்கள், பா.ஜனதா அலுவலகம் ஆகியவைகளில் அங்குலம், அங்குலமாக வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது. வழிகெடுகிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.
அமித் ஷா வருகையையொட்டி விடுதிகளில் தங்கியிருப்போர் விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் சுற்றுப்பயணமாக புதுவைக்கு வருகிறார்.
இன்று இரவு சென்னை ஆவடியில் தங்குகிறார். அங்கிருந்து காலை 9 மணிக்கு ஹெலிகாப்டரில் புதுவைக்கு புறப்படுகிறார்.
புதுவை லாஸ்பேட்டை விமான நிலையத்தில் நாளை காலை 10 மணிக்கு வந்திறங்குகிறார். அவரை கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வரவேற்கின்றனர்.
தொடர்ந்து அவர் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள மகாகவி பாரதியார் நினைவு இல்லத்துக்கு வருகிறார். அங்கு பாரதியார் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். இதனை தொடர்ந்து அரவிந்தர் ஆசிரமத்துக்கு சென்று அரவிந்தர், அன்னை சமாதிக்கு அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் அங்கிருந்து 11 மணிக்கு புதுவை பல்கலைக்கழகத்துக்கு செல்கிறார்.
அங்கு அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் ஆண்டு விழாவில் பங்கேற்கிறார். பல்கலைக்கழகத்தில் புதிய கட்டிடங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
பின்னர் 12.40 மணிக்கு கவர்னர் மாளிகை வருகிறார். அங்கு மதிய உணவருந்தி ஓய்வெடுக்கிறார். தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், கட்சி பிரமுகர்களை சந்தித்து பேசுகிறார். 2 மணிக்கு கம்பன் கலையரங்கில் நடடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார்.
புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 390 போலீஸ் கான்ஸ்டபிள்களுக்கு பணி ஆணை வழங்குகிறார். குமரகுருபள்ளத்தில் அடுக்குமாடி குடியிருப்பு, விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிக்கு அடிக்கல் நாட்டுவது உட்பட பல திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் நவீன மீன் அங்காடி அருகே ரூ.70 கோடி செலவில் புதிய பஸ்நிலையம் கட்டப்படுகிறது. இந்த பணியை மத்திய மந்திரி அமித் ஷா அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். பின்னர் அங்கிருந்து 3.45 மணிக்கு இந்திராகாந்தி சிலை அருகே உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்துக்கு வருகிறார்.
அங்கு எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். தொடர்ந்து 5 மணிக்கு புதுவை விமான நிலையத்துக்கு சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை செல்கிறார்.
மத்திய மந்திரி அமித் ஷா வருகையையொட்டி புதுவை நகர் முழுவதும் பிரம்மாண்டமான அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளது.
நகர் முழுவதும் கொடி, பேனர், தோரணங்கள் கட்டப்பட்டுள்ளது. பா.ஜனதா சார்பில் 5 இடங்களில் அமித் ஷாவுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. அமித் ஷா வருகையையொட்டி நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவரின் பயண வழி நெடுகிலும் தடுப்புக்கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது.
புதுவையில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விழா நடைபெறும் இடங்கள், பா.ஜனதா அலுவலகம் ஆகியவைகளில் அங்குலம், அங்குலமாக வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது. வழிகெடுகிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.
அமித் ஷா வருகையையொட்டி விடுதிகளில் தங்கியிருப்போர் விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.
விவேகானந்தா பள்ளியில் உலக புவிதின விழிப்புணர்வு பேரணியை செல்வகணபதி எம்.பி. தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
லாஸ்பேட்டை விவேகானந்தா வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் உலக புவி தினம் கொண்டாடப்பட்டது.
பள்ளி தாளாளர் செல்வகணபதி எம்.பி. தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு முதன்மை தலைமை ஆசிரியர் பத்மா தலைமை தாங்கினார்.
தலைமை ஆசிரியர் மீனாட்சி முன்னிலை வகித்தார். லாஸ்பேட்டை முக்கிய வீதிகள் வழியாக நடந்த பேரணியில் பங்கேற்ற பள்ளி மாணவர்கள், பொது மக்களுக்கு விதை பந்து, மரக்கன்றுகள் வழங்கினர்.
தொடர்ந்து ‘மாசில்லா உலகை உருவாக்குவோம்’ என்ற தலைப்பில் பள்ளி வளாகத்தில் கண்காட்சிநடந்தது. பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பார்வையிட்டனர்.
மதகடிப்பட்டு கடை வீதியில் தேங்கிய கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க அமைச்சர் லட்சுமிநாராயணனிடம் முன்னாள் எம்.எல்.ஏ. கோபிகா கோரிக்கை வைத்தார்.
புதுச்சேரி:
நாகப்பட்டினம் 4 வழி பாதைக்காக சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
சாலை பணியால் புதுவை எல்லையான திருபுவனை தொகுதி மதகடிப்பட்டு புதுநகரில் இருந்து வரும் கழிவு நீர் மதகடிப்பட்டு கடைவீதியில் கடந்த ஒரு மாதமாக தேங்கியுள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் வியாபாரம் பாதித்து பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் முன்னாள் எம்.எல்.ஏ. கோபிகாவிடம் புகார் செய்தனர். தொடர்ந்து அமைச்சர் லட்சுமி நாராயணனை முன்னாள் எம்.எல்.ஏ. கோபிகா நேரில் சென்று தேங்கி நிற்கும் கழிவுநீரை வெளியேற்ற மாற்று நடவடிக்கை எடுக்குமாறு கூறினார்.
இதனை ஏற்று 4 வழிச்சாலை அமைக்கும் ஒப்பந்ததாரரிடம் அமைச்சர் லட்சுமிநாராயணன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக கழிவுநீரை அகற்ற உத்தரவிட்டார்.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரை கோபிகா சந்தித்து மாற்று ஏற்பாடு செய்து தரும்படி கேட்டுக்கொண்டார் காவல்துறை ஒத்துழைப்புடன் நிறைவேற்றித்தருவதாக ஒப்பந்ததாரர்கள் உறுதி அளித்தனர்.
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் விளை பொருட்களுக்கு பணம் தராமல் இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டு உள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை தட்டாஞ்சாவடியில் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
புதுவையை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் விளையும் உளுந்து, பச்சைப் பயறு, காராமணி, மணிலா, கம்பு, நெல், உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்வது வழக்கம்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அரசே நேரடியாக கொள்முதல் செய்யாமல் அரசு அனுமதி பெற்ற வியாபாரிகள் விவசாய விளை பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து வருகின்றனர்.
அப்படி கொள்முதல் செய்யும் விளை பொருட்களுக்கு வியாபாரிகள் உடனடியாக பணம் வழங்குவதில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் கொள்முதல் செய்யப்படும் விளை பொருட்களுக்கு மாதக்கணக்கில் இழுத்தடித்த பிறகே பணம் வழங்குவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
மேலும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் பணம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று தெரிவித்ததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது விவசாயிகள் தரப்பில்,கடன் வாங்கி விவசாயம் செய்து விளை பொருட்களை மார்க்கெட் கமிட்டிக்கு கொண்டு வந்தால் அதிகாரிகள் உரிய பணத்தை வழங்காமல் இழுத்தடிப்பு செய்கின்றனர் மேலும் சிறிய தொகையை கூட வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று சொல்கிறார்கள். ஆனால், மாதக்கணக்கில் வங்கியில் பணம் வந்து சேர்வதில்லை என புகார் செய்தனர்.
விளை பொருட்களை மார்க்கெட் கமிட்டிக்கு எடுத்துவர வாகன கட்டணங்கள் செலுத்த வேண்டி உள்ளதால் உடனடியாக கையில் பணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனை அடுத்து வரும் திங்கட்கிழமை முதல் பணம் பட்டுவாடா செய்யப்படும் என்று மார்க்கெட் கமிட்டி சார்பில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.
பா.ஜனதா சார்பில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற் றி பெற்றவர்களுக்கு வெங்கடேசன் எம்.எல்.ஏ. பரிசு வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவை மாநில பா.ஜனதா கட்சியின் சார்பில் திருபுவனை மற்றும் திருப்பூர் பகுதிகளில் இருளர் இன மக்களை சந்தித்து அவர்களுக்கு போட்டிகள் நடத்தி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ. வெங்கடேசன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பழுங்குடியினர் தலைவர் சுகுமார், கராத்தே முருகன், நாகராஜ், புகழேந்தி, பாலாஜி, விஸ்வநாதன், சிவக்குமார், வெங்கடேசன், தொகுதி பொது செயலாளர் பாலகுமர், செயலாளர், மோகன்ராஜ், சத்தியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மத்திய அரசின் பயனுள்ள திட்டங்கள் குறித்து எம்.எல்.ஏ. வெங்கடேசன் விளக்கி கூறினார்.
உள்துறை மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு இந்தி எதிர்ப்பு, நிதி நெருக்கடி, ஆட்சியில் பா.ஜனதா தலையீடுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டப் போவதாக எதிர்கட்சிகள் அறிவித்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவைக்கு வருகை தரும் மத்திய உள்துறை மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு இந்தி எதிர்ப்பு, நிதி நெருக்கடி, ஆட்சியில் பா.ஜனதா தலையீடுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டப் போவதாக எதிர்கட்சிகள் அறிவித்துள்ளனர்.
இதில் இருதரப் பினருடையே எந்தவிதமான அசம் பாவிதமும் நிகழா வண்ணம் அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமித்ஷா கருத்தை தி.மு.க. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் திரித்து தவறான தகவலை கூறிவருகின்றனர். 2014-ம் ஆண்டு மத்திய அமைச்சராக இருந்த சிதம்பரம் இந்தியாவின் இணைப்பு மொழியாக இந்திதான் இருக்க வேண்டும் என்றும் ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி இருந்தால்தான் இந்திய நிர்வாகம் செம்மைப்படும் என கூறியிருந்தார்.
ஆனால் இப்போது இந்தியைப் பற்றி காங்கிரஸ் பேசுவது வியப்பாக உள்ளது.
கடந்த காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியில் 5 ஆண்டு காலத்தில் எந்த திட்டத்தையும் செயல் படுத்தாமல் மாநிலத்தின் உள்கட்ட அமைப்பு வசதிகளை செய்யாமல் புதுவையை பாலைவனமாக்கினர்.
இதற்கு நிதி நெருக்கடி என காரணம் காட்டினர். இவர்களது ஆட்சியில் மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்ததோ அதையேதான் தற்போதும் செய்து வருகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணி முதல்-அமைச்சர் ரங்கசாமி 10 மாதத்தில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல் படுத்தி உள்ளார்.
கடந்த காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியில் வழங்கப்பட்ட மத்திய அரசு நிதி ஒதுக்கீடு இப்பொழுதும் அதே அளவில் தான் உள்ளது. மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்கள் செயல்பாடு இதற்கெல்லாம் செயல்படுத்த திறமையும், நல்ல மனமும் இருந்தால் போதும் அது எங்கள் கூட்டணி அரசின் முதல்- அமைச்சருக்கு உள்ளது.
ஆனால், கடந்த காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி அரசின் முதல்-அமைச்சராக இருந்த நாராயணசாமிக்கு திறமை யும், நல்ல மனதும் இல்லை. மத்திய அரசுடன் தொடர் மோதல் போக்கு ஒன்றையே தனது ஒரு அம்ச கொள்கையாக எடுத்துக் கொண்டார்.
கடந்த காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சி என்பது மாநிலத்தின் இருண்ட ஆட்சி என்பதை மறந்து விட்டு தற்போது நல்லாட்சி நடத்தும் எங்கள் கூட்டணி அரசை விமர்சனம் செய்வது வேடிக்கையாக உள்ளது.
அரசில் பா.ஜனதா தலையீடு இருப்பதாக எதிர்கட்சிகள் குறை கூறுகின்றன. நடப்பது பா.ஜனதா கூட்டணி ஆட்சி இந்த கூட்டணி ஆட்சியில் பா.ஜனதா தலையீடு இருக்கக் கூடாது என மற்றவர்கள் பேசுவது விந்தையாக இருக்கிறது.
மாநில நிர்வாகத்தில் கவர்னர் தலையீடு, நிதி நெருக்கடி உள்ளிட்ட எதுவாக இருந்தாலும் இன்று வரை முதல்- அமைச்சர் மத்திய அரசையும், கவர்னரையும் குறை கூறாத நிலையில் எதிர்க்கட்சிகள் குழப்பதை ஏற்படுத்தும் விதமாக பேசிவருவது கண்டிக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஊர்வலத்தில் கியாஸ் சிலிண்டரை மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்றனர்.
புதுச்சேரி:
நாம் தமிழர் கட்சி சார்பில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது.
நெல்லிதோப்பு சுப்பையா சிலை அருகில் இருந்து தொடங்கிய ஊர்வலத்துக்கு நாம் தமிழர் கட்சியின் மாநில செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.
மாநில பொருளாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். மறைமலையடிகள் சாலை அண்ணாசாலை, வழியாக சென்று ராஜா தியேட்டர் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இளைஞர் பாசறை ஞானப்பிரகாசம், மணி பாரதி, மகளிர் பாசறை கவுரி, பிரவிணா, தேவிகா, பிரியாலட்சுமி, சுபஸ்ரீ, தமிழ்ச்செல்வன், தொகுதி நிர்வாகிகள் காமராஜ், பிரியன், நிர்மல், கலிவரதன், செந்தமிழன், அய்யனார், கருணாநிதி, சுந்தர், மதியழகன், தொழிற்சங்க நிர்வாகிகள் ரமேஷ், தமிழ்ச்செல்வன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்
கியாஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற கோரியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஊர்வலத்தில் கியாஸ் சிலிண்டரை மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்றனர்.
இருசக்கர வாகன வாடகையை முறைப்படுத்த வேண்டும் என்று அமைச்சரிடம் சம்பத் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அளித்தார்.
புதுச்சேரி:
புதுவையில் இருசக்கர வாகனங்கள் வாடகை விடுவதில் அதிக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும் என அமைச்சர் சந்திரபிரியங்காவிடம், சம்பத் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவை வருவாயில் சுற்றுலாத்துறை முக்கிய அங்கம் வகிக்கிறது. புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
புதுவையில் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்ப்பதற்கு இரு சக்கர வாகனங்களை சுற்றுலா பயணிகள் நாடி வருகின்றனர். இதனால் இரு சக்கர வாகனங்களை வாடகைக்கு விடுபவர்கள் உரிய ஆவணங்களை பெறாமல் அதிக வாடகைக்கு விடுகின்றனர்.
இதனை பயன்படுத்தி வெளியூர் சுற்றுலா பயணிகள் பலர் ஒரு சில சட்ட விரோத செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.
வாடகைக்கு விடும் இரு சக்கர வாகனங்கள், பொதுமக்கள் பயன்படுத்தும் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகள் ஒரே வண்ணத்தில் இருப்பதால் ஒரு சில சுற்றுலா பயணிகளின் சமூக விரோத செயல்களை போலீசாரால் கண்காணிக்க முடியவில்லை.
எனவே, கோவா உள்ளிட்ட சுற்றுலா நகரங்களில் வாடகைக்கு விடப்படும் இரு சக்கர வாகனங்களில் மஞ்சள் நிற எழுத்துக்களால் நம்பர் பிளேட் உள்ளதை போல் புதுவையிலும் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். இதனை போக்குவரத்து துறை மூலம் ஒழுங்குபடுத்த வேண்டும்.
இதனால் புதுவை அரசுக்கும் வருவாய் கிடைப்பது மட்டுமல்லாமல் வெளியூரில் இருந்து புதுவை வரும் சுற்றுலா பயணிகளின் உள்ளூர் பயணம் எளிமை-யாகவும், பாதுகாப்பாகவும் அமையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. அமைப்பு தேர்தலில் நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என்று ஓம்சக்திசேகர் அழைப்பு விடுத்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை மேற்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் ஓம்சக்திசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜெயலலிதா ஆசியோடு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் ஆணைப்படி புதுவை மேற்கு மாநில அ.தி.மு.க. பகுதிக்கு உட்பட்ட வார்டு, தொகுதி, நகரம், மாநில நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தல் நடைபெற உள்ளது.
மேற்கு மாநில தேர்தல் பொறுப்பாளர்கள் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் முருகமணி ஆகியோரின் தலைமையில் வார்டு அ.தி.மு.க. வுக்கு நாளை (சனிக்கிழமை), தொகுதி, நகரம், மாநில நிர்வாகிகள், பொதுக்குழு உறுப் பினர்கள் தேர்தல் (ஞாயிற்று கிழமை) லட்சுமி பெட்ரோல் பங்க் அருகில் ஓம்சக்தி என்.எஸ்.போஸ் திருமண மண்டபத்தில் நடைபெறும்.
அ.தி.மு.க.நிர்வாகிகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு அமைப்பு தேர்தலில் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவன்-மனைவி படுகாயம் அடைந்தனர்.
புதுச்சேரி:
புதுவை மூலகுளம் திருமலைத் தாயார் நகரை சேர்ந்தவர் கேணியப்பன் (வயது58). இவர் பொதுப்பணித்துறையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது மனைவி இந்திராகாந்தியுடன் மோட்டார் சைக்கிளில் புதுவைக்கு வந்து கொண்டிருந்தார்.
மறைமலை சாலையில் வந்த போது ஒருவழி சாலையில் வந்த கடலூர் மாவட்டம் உடலப்பட்டு கிராமத்தை சேர்ந்த மூர்த்தி என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக கேணியப்பன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கேணியப்பன் மற்றும் அவரது மனைவி இந்திராகாந்தி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர்.
அவர்கள் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து புதுவை கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வில்லியனூர் சிவகணபதி நகரை சேர்ந்தவர் துரைராஜ் வயது 65). இவரும் இவரது மனைவி கவுரி (55) என்பவரும் மோட்டார் சைக்கிளில் தைலாபுரத்தில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டி ருந்தனர்.
வில்லியனூர் பைபாஸ் ரோட்டில் வந்த போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டர் சைக்கிள் திடீரென துரைராஜ் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தடுமாறி விழுந்த துரைராஜ் அவரது மனைவி கவுரி ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மூலகுளத்தில் உள்ள தனியார் ஆஸ் பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுவை முருங்கப்பாக்கம் பாண்டியன் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் தனது தாயார் மல்லிகாவுடன்(60) மோட்டார் சைக்கிளில் மேட்டுப் பாளையத்துக்கு சென்று கொண்டிருந்தார். குண்டுசாலை-மேட்டுப் பாளையம் மெயின் ரோட்டில் எம்.ஜி.ஆர். நுழைவு வாயில் அருகில் சென்ற போது அந்த வழியாக வந்த டெம்போ எதிர்பாராத விதமாக மணிகண்டன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தடுமாறி விழுந்த மணிகண்டன் மற்றும் அவரது தாயார் ஆகிய இருவரும் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து கோரிமேடு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சாராயம் குடிக்க தாய் பணம் கொடுக்க மறுத்ததால் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
முதலியார்பேட்டை உடையார் தோப்பு பகுதியை சேர்ந்தவர் முருகேசன். (வயது 55). கூலித் தொழி-லாளி இவர் திருமணம் செய்து கொள்ளாமல் அன்-றாடம் சம்பாதிக்கும் பணத்தில் மது குடித்து வந்தார்.
மேலும் கடந்த சில ஆண்டுகளாக முருகேசன் வேலைக்கு எதுவும் செல்-லாமல் தனது தாய் தனலட்சுமி வாங்கும் முதியோர் பென்சன் பணத்தை அடிக்கடி கேட்டுசென்று சாராயம் குடித்து வந்தார்.
அதுபோல் முருகேசன் சாராயம் குடிப்பதற்காக தனது தாயிடம் பணம் கேட்டார். ஆனால் தனலட்சுமி பணம் கொடுக்க மறுத்துவிட்டார்.
இதனால் விரக்தியடைந்த முருகேசன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இரும்பு ஷீட் பைப்பில் தனது தாய் சேலையால் தூக்கு போட்டு தொங்கினார். இதனை பார்த்த தனலட்சுமி அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தினர் உதவி-யுடன் தூக்கிலிருந்து முருகேசனை மீட்டு சிகிச்சைக்காக ஆட்டோ மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே முருகேசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து முருகேசனின் உறவினர் நாராயணன் கொடுத்த புகாரின் பேரில் முதலியார் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உலக நுகர்வோர் தின ஊர்தி பிரசாரம் நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுவை அரசு நுகர்வோர் மற்றும் விவகாரங்கள் துறை, ராஜீவ் காந்தி நலச் சங்கம் சார்பில் உலக நுகர்வோர் தின ஊர்தி பிரசாரம் ஊசுடு தொகுதி பத்துக்கண்ணில் நடைபெற்றது.
பிரசாரத்தை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் தொடங்கி வைத்து நுகர்வோர் கையேடு மற்றும் துண்டு நோட்டீஸ் வழங்கினார். நிகழ்ச்சியில் ஊசுடு தொகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்க தலைவரும், சமூக சேவகருமான நாராயணன் செய்திருந்தார்.






