என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேங்கிய கழிவு நீரை வெளியேற்ற மாற்று நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சர் லட்சுமிநாராயணனிடம் முன்னாள் எம்.எல்.ஏ. கோப
    X
    தேங்கிய கழிவு நீரை வெளியேற்ற மாற்று நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சர் லட்சுமிநாராயணனிடம் முன்னாள் எம்.எல்.ஏ. கோப

    கழிவுநீரை வெளியேற்ற முன்னாள் எம்.எல்.ஏ. நடவடிக்கை

    மதகடிப்பட்டு கடை வீதியில் தேங்கிய கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க அமைச்சர் லட்சுமிநாராயணனிடம் முன்னாள் எம்.எல்.ஏ. கோபிகா கோரிக்கை வைத்தார்.
    புதுச்சேரி:

    நாகப்பட்டினம் 4 வழி பாதைக்காக சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    சாலை பணியால் புதுவை எல்லையான திருபுவனை தொகுதி மதகடிப்பட்டு புதுநகரில் இருந்து வரும் கழிவு நீர் மதகடிப்பட்டு கடைவீதியில் கடந்த ஒரு மாதமாக தேங்கியுள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் வியாபாரம் பாதித்து பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் முன்னாள் எம்.எல்.ஏ.  கோபிகாவிடம் புகார் செய்தனர். தொடர்ந்து  அமைச்சர் லட்சுமி நாராயணனை முன்னாள் எம்.எல்.ஏ.  கோபிகா நேரில் சென்று தேங்கி நிற்கும் கழிவுநீரை வெளியேற்ற மாற்று நடவடிக்கை எடுக்குமாறு கூறினார். 

    இதனை ஏற்று 4 வழிச்சாலை அமைக்கும் ஒப்பந்ததாரரிடம் அமைச்சர் லட்சுமிநாராயணன்  தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக கழிவுநீரை அகற்ற உத்தரவிட்டார்.

    இதனையடுத்து சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரை கோபிகா சந்தித்து மாற்று ஏற்பாடு செய்து தரும்படி கேட்டுக்கொண்டார்  காவல்துறை  ஒத்துழைப்புடன் நிறைவேற்றித்தருவதாக ஒப்பந்ததாரர்கள் உறுதி அளித்தனர்.

    Next Story
    ×