என் மலர்
உள்ளூர் செய்திகள்

விவேகானந்தா பள்ளியில் உலக புவிதின விழிப்புணர்வு நிகழ்ச்சியை செல்வகணபதி எம்.பி. தொடங்கிய காட்சி.
உலக புவிதின விழிப்புணர்வு பேரணி
விவேகானந்தா பள்ளியில் உலக புவிதின விழிப்புணர்வு பேரணியை செல்வகணபதி எம்.பி. தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
லாஸ்பேட்டை விவேகானந்தா வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் உலக புவி தினம் கொண்டாடப்பட்டது.
பள்ளி தாளாளர் செல்வகணபதி எம்.பி. தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு முதன்மை தலைமை ஆசிரியர் பத்மா தலைமை தாங்கினார்.
தலைமை ஆசிரியர் மீனாட்சி முன்னிலை வகித்தார். லாஸ்பேட்டை முக்கிய வீதிகள் வழியாக நடந்த பேரணியில் பங்கேற்ற பள்ளி மாணவர்கள், பொது மக்களுக்கு விதை பந்து, மரக்கன்றுகள் வழங்கினர்.
தொடர்ந்து ‘மாசில்லா உலகை உருவாக்குவோம்’ என்ற தலைப்பில் பள்ளி வளாகத்தில் கண்காட்சிநடந்தது. பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பார்வையிட்டனர்.
Next Story






