என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணக்குள விநாயகர் மருத்துவக்கல்லூரியில் நுரையீரல் உள்நோக்கும் அல்ட்ரா சவுண்டு பரிசோதனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள
    X
    மணக்குள விநாயகர் மருத்துவக்கல்லூரியில் நுரையீரல் உள்நோக்கும் அல்ட்ரா சவுண்டு பரிசோதனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள

    நுரையீரல் அல்ட்ரா சவுண்டு பரிசோதனை அறிமுகம்

    மணக்குள விநாயகர் மருத்துவக்கல்லூரியில் நுரையீரல் உள்நோக்கும் அல்ட்ரா சவுண்டு பரிசோதனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    மணக்குள விநாயகர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நுரையீரல் சிறப்பு மருத்துவ பிரிவில் மாநிலத்திலேயே முதல் முறையாக இ.பி.யு.எஸ். எனும் நுரையீரல் உள்நோக்கும் அல்ட்ரா சவுண்டு பரிசோதனை அறிமுகப்படுத்தப்பட் டுள்ளது. இப்பரிசோதனை நாட்டின் வெகுசில மருத்துவக் கல்லூரிகளிலேயே அமையப்பெற்றுள்ளது.

    இப்பரிசோதனை மூலம் நுரையீரல் உள்ளே உள்ள திசுவினை அல்ட்ரா சவுண்டு மூலம் பரிசோதித்து நோயின் தன்மையை கண்டறிய இயலும். இப்பரிசோதனையின் தொடக்க விழா மணக்குள விநாயகர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமையில் நடந்தது.

    துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன், கல்லூரி இயக்குனர் ராஜகோவிந்தன், துணை இயக்குனர் காக்னே, டீன் கார்த்திகேயன், மருத்துவ கண்காணிப்பாளர் பிரகாஷ், துணை மருத்துவ கண்காணிப்பாளர் கிரிஜா, நுரையீரல் சிறப்பு பிரிவு தலைவர் யுவராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

    நுரையீரல் சிறப்பு மருத்துவர் ஹரிகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவ மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
    Next Story
    ×