என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.8 லட்சம் நகை கொள்ளை
முத்தியால் பேட்டையில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.8 லட்சம் நகையை கொள்ளையடித்த பெண் சிக்கினார்.
புதுச்சேரி:
புதுவை முத்தியால் பேட்டை டி.வி.நகர் செட்டிக்குளம் வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணி இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி அனிதா வயது 38 இவர் சேதராப்பட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
சம்பவத்தன்று அனிதா தனது 18 பவுன் நகைகளை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு பீரோவில் வைத்து பூட்டி பீரோ சாவியை வீட்டின் ஒரு மறைவான இடத்தில் வைத்து விட்டு வேலைக்கு சென்றார். பின்னர் வேலை முடிந்து வந்து பார்த்த போது நகை வைத்திருந்த பிளாஸ்டிக் டப்பா காலியாக கிழே கிடப்பதை கண்டு திடுக்கிட்டார். யாரோ மர்ம நபர்கள் அனிதா பீரோ சாவியை மறைவான இடத்தில் வைத்து செல்வதை கண்காணித்து பின்னர் அவர் சென்ற பின் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளை போன நகையின் மொத்த மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும்.
இது குறித்து அனிதா முத்தியால் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திண்டிவனம் ஜக்காம் பேட்டையை சேர்ந்த் வளர்மதி 32 என்ற பெண் ஜிப்மரில் சிகிச்சைகாக கடந்த சில நாட்களாக டி.வி. நகரில் வாடகை வீட்டில் தங்கியிருந்து வந்ததும் சம்பவத்தன்று அனிதா வேலைக்கு சென்ற பின்னர் பீரோ சாவியை எடுத்து நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதையடுத்து வளர்மதியை பிடித்து போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.
Next Story






