என் மலர்
புதுச்சேரி
- மோட்டார் சைக்கிள் விபத்தில் கட்டிட தொழிலாளி பலியானார்.
- இவருக்கு சுமதி என்ற மனைவியும், விஜயக்குமரன் என்ற மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.
புதுச்சேரி:
முத்தியால்பேட்டை சாலை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஸ்டியான் (55) கட்டிட தொழிலாளி. இவருக்கு சுமதி என்ற மனைவியும், விஜயக்குமரன் என்ற மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.
கிருஸ்டியான் மோட்டார் சைக்கிளில் லாஸ்பேட்டைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். கருவடிக்குப்பம் சாலையில் ஒரு கோழி இறைச்சி கடை அருகே வந்த போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் திடீரென கிருஸ்டியான் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது அதிவேகமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட கிருஸ்டியான் தலையில் பலத்த காயமடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கிருஸ்டியான் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது மகன் விஜயகுமரன் கொடுத்த புகாரின் பேரில் புதுவை வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வம்பாகீரப்பாளையத்தில் வழக்கை வாபஸ் பெறக்கோரிமீனவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வம்பாகீரப்பாளையத்தில் சண்முகம் என்பவர் தரப்பினருக்கும், சுந்தர்ராஜ் தரப்பினருக்கும் முன்விரோதம் காரணமாக மோதல் ஏற்பட்டது.
புதுச்சேரி:
வம்பாகீரப்பாளையத்தில் சண்முகம் என்பவர் தரப்பினருக்கும், சுந்தர்ராஜ் தரப்பினருக்கும் முன்விரோதம் காரணமாக மோதல் ஏற்பட்டது.
அப்போது சண்முகம் தாக்கப்பட்டதற்கு ஊர்க்காரர் என்ற முறையில் அவருக்கு ஆதரவாக மீனவர் சந்திரன்(வயது46) ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார்.
இந்த நிலையில் சந்திரன் தனது வீட்டு வாசலில் தனது மனைவியுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த வெள்ளையன் தகாத வார்த்தைகளால் சந்திரனை திட்டி அவரை தாக்கினார். எவ்வளவு தைரியம் இருந்தால் எனது உறவினர்கள் மீது போலீசில் புகார் செய்வாய், நீ உயிரோடு இருக்க வேண்டும் என்றால் உடனே வழக்கை திரும்ப பெற்றுக்கொள்.
இல்லையென்றால் கல்லை உனது தலையில் போட்டு கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார். இதனால் பயந்து போன சந்திரனை அவரது மனைவி வீட்டுக்குள் அழைத்து கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டார்.
பின்னர் வெள்ளையன் அங்கிருந்து சென்ற பின்னர் சந்திரன் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று அதன்பிறகு ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மடுகரையில் வியாபார போட்டியில் வேர்கடலையை வீசி ஏறிந்து பெண்ணை தாக்கியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மடுகரை அருகே தமிழக பகுதியான மேல்பாதி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் அச்சுதன்.
புதுச்சேரி:
மடுகரை அருகே தமிழக பகுதியான மேல்பாதி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் அச்சுதன். இவரது மனைவி குப்பம்மாள்(வயது48). இவர் கடந்த 5 ஆண்டுகளாக மடுகரை-சிறுவந்தாடு ரோட்டில் உள்ள ஒரு மதுக்கடை முன்பு வேர்கடலை வியாபாரம் செய்து வருகிறார்.
இவரது கடை அருகே மடுகரையை சேர்ந்த கிருபாகரன்(38) மற்றும் அவரது உறவினர்கள் பாலகிருஷ்ணன், ஆனந்த் ஆகியோர் தனித்தனியாக சால்னா கடை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே குப்பம்மாளுக்கும் கிருபாகரனுக்கும் வியாபார போட்டி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று கிருபாகரன் குப்பம்மாளிடம் உன்னிடம் வேர்கடலை வாங்குபவர்கள் தோல்களை எனது கடை முன்பு வீசி செல்கிறார்கள். எனவே கடையை காலி செய் என்று கூறினார்.
அதற்கு குப்பம்மாள் கடையை எடுத்து விடுகிறேன் என்று கூறிக்கொண்டு இருக்கும் போதே கிருபாகரன் வேர்கடலை கூடையை ரோட்டில் வீசி குப்பம்மாளை தகாத வார்த்தைகளால் திட்டினார்.
மேலும் குப்பம்மாளின் தலைமுடியை பிடித்து கையாலும், காலாலும் தாக்கினார். மேலும் அங்கு கிடந்த மரக்கட்டையை எடுத்து குப்பம்மாளை கையிலும், தலையிலும் தாக்கினார். அதோடு அருகில் சால்னா கடை வைத்திருக்கும் கிருபாகரனின் உறவினர்கள் பாலகிருஷ்ணன், ஆனந்த் ஆகியோரும் குப்பம்மாளை தாக்கி இனிமேல் இந்த பக்கம் வந்தால் உயிரோடு இருக்கமாட்டாய் என்று கூறிய படியே குப்பம்மாளை விரட்டி தாக்க முயன்றனர்.
இதனால் பயந்து போன குப்பம்மாள் அந்த கும்பலிடமிருந்து தப்பி மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் கண்ணில் காயமடைந்ததால் அதற்காக தவளக்குப்பத்தில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதனை தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்து குப்பம்மாள் மடுகரை புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- புதுவை மிஷன் வீதி, நேரு வீதி சந்திப்பில் உள்ள பிளாட் பாரத்தில் சுமார் 3 வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை இரும்பு தடுப்பில் கயிற்றால் கட்டிப்போடப்பட்டு இருந்தது.
- பெற்ற பிள்ளையை கடை முன்பு கயிற்றில் தாய் கட்டிப்போட்டு சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
புதுவை மிஷன் வீதி, நேரு வீதி சந்திப்பில் உள்ள பிளாட் பாரத்தில் சுமார் 3 வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை இரும்பு தடுப்பில் கயிற்றால் கட்டிப்போடப்பட்டு இருந்தது. அதன் அருகில் 3 வயது மதிக்கத்தக்க மற்றொரு ஆண் குழந்தை உட்கார்ந்து கொண்டிருந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்பகுதியில் ஒரு பெண் தனது குழந்தைகளுடன் பிளாட்பாரத்தில் வசித்து வருவதும், அவர் தனது குழந்தையை கட்டிப்போட்டு வெளியே சென்றிருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. குழந்தையை கயிற்றில் கட்டுப்போட்டு சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெற்றது.
- மாநாட்டில் கட்சியை வலுப்படுத்த எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அனைத்து மாநிலங்களிலும் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகளிடம் காங்கிரஸ் தலைமை தெரிவித்து வருகிறது.
புதுச்சேரி:
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெற்றது.
மாநாட்டில் கட்சியை வலுப்படுத்த எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அனைத்து மாநிலங்களிலும் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகளிடம் காங்கிரஸ் தலைமை தெரிவித்து வருகிறது. இதற்காக அந்தந்த மாநில பொறுப்பாளர்கள் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி புதுவை மாநில நிர்வாகிகள் கூட்டம் செண்பகா ஓட்டலில் நடைபெறறது. புதுவை பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார், மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வைத்திலிங்கம் எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ., ரமேஷ் பரமத், சீனியர் துணை தலைவர் தேவதாஸ், முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, முன்னாள்
எம்.எல்.ஏ.க்கள் அனந்த–ராமன், நீலகங்காதரன், எம்.என்.ஆர். பாலன், நிர்வாகிகள் கருணாநிதி, தனுசு, ரகுமான், இளையராஜா, விக்னேஷ் மற்றும் மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.Top adviser consulting with state congressional executives
கூட்டத்தில் தினேஷ் குண்டுராவ் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள், கட்சியில் செயல்பட வேண்டிய விதம், கட்சியை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.
- புதுவை வேதபுரீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடைபெற்றது.
- வேதபுரீஸ்வரர் கோவிலில் 36-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா துர்க்காம்பாள் பூஜையுடன் தொடங்கியது
புதுச்சேரி:
புதுவை காந்தி வீதியில் அமைந்துள்ள திரிபுரசுந்தரி சமேத வேதபுரீஸ்வரர் கோவிலில் 36-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா துர்க்காம்பாள் பூஜையுடன் தொடங்கியது இதையொட்டி எல்லையம்மன் பூஜையும், விக்னேஸ்வர பூஜையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, தினசரி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்வாக வருகிற 9-ந் தேதி காலை திருக்கல்யாண உற்சவமும், வருகிற 13-ந் தேதி காலை தேர் திருவிழா, 15-ந் தேதி திருஞானசம்பந்தர் உற்சவம் நடக்கிறது.
வருகிற 19-ந் தேதி மாலை விடையாற்றி அபிஷேகம், 20-ந் தேதி காலை உற்சவசாந்தி சங்காபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவல் குழுவினர் செய்து வருகின்றனர்.
- திருக்கனூர் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம் பெண் தற்கொலை தூக்கில் தொங்கினார்.
- திருக்கனூர் சோரப்பட்டு டி.வி.சென்டர் வீதியை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மனைவி சுசீலா. இவர்களது மகள் தட்சண்யா(வயது19). இவர் பிளஸ்-2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
புதுச்சேரி:
திருக்கனூர் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருக்கனூர் சோரப்பட்டு டி.வி.சென்டர் வீதியை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மனைவி சுசீலா. இவர்களது மகள் தட்சண்யா(வயது19). இவர் பிளஸ்-2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இதற்கிடையே தட்சண்யா அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த காதலுக்கு தட்சண்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் தட்சண்யா காதலித்து வந்த வாலிபர் வீட்டார் அவருக்கு திருமணம் செய்து வைக்க வேறு இடத்தில் பெண் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனையறிந்த தட்சண்யா மனவேதனையடைந்தார். காதலனுக்கு வேறு இடத்தில் பெண் பார்த்து திருமணம் செய்வதை பொறுத்துக்கொள்ள இயலாத தட்சண்யா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது தாயார் சுசீலா கொடுத்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புனிதராஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காதலித்த வாலிபரை திருமணம் செய்ய முடியாத ஏக்கத்தில் இளம் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- சுற்றுச்சூழல் தினத்தையொட்டி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது.
- உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மண் வளப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி இன்று காலை நடைபெற்றது.
புதுச்சேரி:
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மண் வளப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி இன்று காலை நடைபெற்றது.
ஹோப் எனும் தன்னார்வு தொண்டு நிறுவனம் சார்பில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று காலை புதுவை எல்லையான முள்ளோடையில் பேரணி தொடங்கியது.
இந்த பேரணியை கிருமாம்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் விஜய குமார் தொடங்கி வைத்தார். சைக்கிள் பேரணி புதுவை கடற்கரை காந்தி சிலையில் நிறைவு பெறுகிறது.
- மத்திய தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு நடந்தது.
- தேர்வு எழுத செல்பவர்களுக்கு புதுவை அரசு சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகளை செய்திருந்தது.
புதுச்சேரி:
மத்திய தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு நடந்தது.
புதுவையில் சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு எழுதுவதற்காக லாஸ்பேட்டை விவே கானந்தா மேல்நிலைப் பள்ளி, மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, பெத்திசெமினார் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 9 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
9.30 மணிக்கு தேர்வு தொடங்கி 11.30 மணி வரையிலும் 2.30 மணி முதல் 4.30 மணி வரையிலும் தேர்வு நடைபெற்றது.
தேர்வு எழுத செல்பவர்களுக்கு புதுவை அரசு சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகளை செய்திருந்தது.
இதன்படி புதுவை புதிய பஸ் நிலையத்திலிருந்து 7 மணி முதல் 8.45 மணி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. மீண்டும் தேர்வு முடிந்து தேர்வு மையங்களில் இருந்து மாலை 4.30 மணிக்கு புதிய பஸ் நிலையம் வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
- மோட்டார் சைக்கிள் திருடர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
- முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் புதுவை 100 அடி ரோட்டில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
புதுச்சேரி:
முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் புதுவை 100 அடி ரோட்டில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும் படியாக வந்த 2 வாலிபர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர்.
ஆனால் போலீசாரின் தடுப்பை மீறி அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி செல்ல முயன்றனர். உடனே போலீசார் விரட்டி சென்று 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் அந்த வாலிபர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் மரக்காணம் அருகே ஆளத்தூர் கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன், பாக்கம் கூட்டு ரோட்டை சேர்ந்த சங்கர் (37) என்பதும், அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திருட்டு மோட்டார் சைக்கிள் என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
- மது குடித்துவிட்டு ரகளை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
- அப்போது மது போதையில் ஒருவர் அவ்வழியே செல்வோரை திட்டி ரகளை செய்து கொண்டிருந்தார்.
புதுச்சேரி:
மடுகரை போலீசார் மடுகரை ராம்ஜிநகர் அருகே உள்ள நெற்களம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மது போதையில் ஒருவர் அவ்வழியே செல்வோரை திட்டி ரகளை செய்து கொண்டிருந்தார்.
இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மடுகரை தோப்பு தெருவை சேர்ந்த தாமோதரன் (42) என்பது தெரியவந்தது. இதையடுத்து தாமோதரனை போலீசார் கைது செய்தனர்.
இதுபோல் மேட்டுப்பாளையம் ஐ.டி.ஐ. பெட்ரோல் பங்க் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக தகாத வார்த்தைகளால் திட்டி ரகளை செய்த தர்மாபுரி கல்கி நகரை சேர்ந்த இளவரசன்(27) என்பவரை மேட்டுப்பாளையம் போலீசார் கைது செய்தனர்.
பெரியக்கடை போலீசார் கடற்கரை சாலையில் ரோந்து சென்றனர். அப்போது கோர்ட்டு வளாகம் அருகே 3 பேர் மது குடித்து விட்டு போதையில் அவ்வழியே செல்வோரை பார்த்து கிண்டல் செய்து கொண்டிருந்தனர்.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தேனி மாவட்டத்தை சேர்ந்த திருப்பதி வாசன்(31), பாண்டிதுரை)28), மரியராஜ்(28) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
காரைக்காலை அருகே திருநள்ளாறு சுரக்குடி மெயின் சாலையில், காரைக்கால் பொதுப்பணித்துறையில் எம்.டி.எஸ்.ஆக பணியாற்றி வருபவர் உத்தண்டி. இவர் மீன் குட்டை ஒன்றை பராமரித்து வருகிறார்.
இந்த மீன்குட்டையை சுற்றியுள்ள செடி, மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக, மீன்குட்டை ஓரம் ரூ.16 ஆயிரம் மதிப்பிலான மின் மோட்டாரை உத்தண்டி வைத்துள்ளார்.
சம்பவத்தன்று இரவு, வழக்கம்போல், மீன்குட்டையை நண்பர் மகாலிங்கம் என்பவருடன், உத்தண்டி பார்வையிட சென்றபோது, நீர் மோட்டாரை 4 பேர் திருடிசெல்வது தெரியவந்தது.
தொடர்ந்து, நண்பர் உதவியுடன், நீர் மோட்டாரை திருடிசென்ற திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்த மனோகர்(வயது35), ஜானகிராமன்(34), கருணாநிதி(34), ராஜேந்திரன்(37) ஆகிய 4 பேரில், மனோகர் மற்றும் ஜானகிராமனை, கையும் களவுமாக பிடித்து, நீர் மோட்டாரை பறிமுதல் செய்தார். மற்ற 2 பேர் தப்பியோடிவிட்டனர்.
தொடர்ந்து, கையும் களவுமாக பிடித்த 2 பேரையும், உத்தண்டி திருநள்ளாறு காவல்நிலையத்தில் ஒப்படைத்து, தப்பியோடிய மற்ற 2 பேரையும் பிடித்து, 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, 2 பேரை கைது செய்து, தலைமறைவான மற்ற 2 பேரை தேடிவருகின்றனர்.






