என் மலர்
புதுச்சேரி

புதுவை லாஸ்பேட்டை விவேகானந்தா பள்ளியில் சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல்நிலை தேர்வு எழுதவந்தவர்களை படத்தில் காணலாம்.
மத்திய தேர்வு வாரியம் நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வு நடந்தது.
- மத்திய தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு நடந்தது.
- தேர்வு எழுத செல்பவர்களுக்கு புதுவை அரசு சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகளை செய்திருந்தது.
புதுச்சேரி:
மத்திய தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு நடந்தது.
புதுவையில் சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு எழுதுவதற்காக லாஸ்பேட்டை விவே கானந்தா மேல்நிலைப் பள்ளி, மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, பெத்திசெமினார் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 9 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
9.30 மணிக்கு தேர்வு தொடங்கி 11.30 மணி வரையிலும் 2.30 மணி முதல் 4.30 மணி வரையிலும் தேர்வு நடைபெற்றது.
தேர்வு எழுத செல்பவர்களுக்கு புதுவை அரசு சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகளை செய்திருந்தது.
இதன்படி புதுவை புதிய பஸ் நிலையத்திலிருந்து 7 மணி முதல் 8.45 மணி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. மீண்டும் தேர்வு முடிந்து தேர்வு மையங்களில் இருந்து மாலை 4.30 மணிக்கு புதிய பஸ் நிலையம் வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.






