என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ரகளை செய்த 5 பேர் கைது
    X

    கோப்பு படம்

    ரகளை செய்த 5 பேர் கைது

    • மது குடித்துவிட்டு ரகளை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • அப்போது மது போதையில் ஒருவர் அவ்வழியே செல்வோரை திட்டி ரகளை செய்து கொண்டிருந்தார்.

    புதுச்சேரி:

    மடுகரை போலீசார் மடுகரை ராம்ஜிநகர் அருகே உள்ள நெற்களம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மது போதையில் ஒருவர் அவ்வழியே செல்வோரை திட்டி ரகளை செய்து கொண்டிருந்தார்.

    இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மடுகரை தோப்பு தெருவை சேர்ந்த தாமோதரன் (42) என்பது தெரியவந்தது. இதையடுத்து தாமோதரனை போலீசார் கைது செய்தனர்.

    இதுபோல் மேட்டுப்பாளையம் ஐ.டி.ஐ. பெட்ரோல் பங்க் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக தகாத வார்த்தைகளால் திட்டி ரகளை செய்த தர்மாபுரி கல்கி நகரை சேர்ந்த இளவரசன்(27) என்பவரை மேட்டுப்பாளையம் போலீசார் கைது செய்தனர்.

    பெரியக்கடை போலீசார் கடற்கரை சாலையில் ரோந்து சென்றனர். அப்போது கோர்ட்டு வளாகம் அருகே 3 பேர் மது குடித்து விட்டு போதையில் அவ்வழியே செல்வோரை பார்த்து கிண்டல் செய்து கொண்டிருந்தனர்.

    இதையடுத்து அவர்கள் 3 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தேனி மாவட்டத்தை சேர்ந்த திருப்பதி வாசன்(31), பாண்டிதுரை)28), மரியராஜ்(28) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×