என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்
இளம் பெண் தற்கொலை தூக்கில் தொங்கினார்
- திருக்கனூர் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம் பெண் தற்கொலை தூக்கில் தொங்கினார்.
- திருக்கனூர் சோரப்பட்டு டி.வி.சென்டர் வீதியை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மனைவி சுசீலா. இவர்களது மகள் தட்சண்யா(வயது19). இவர் பிளஸ்-2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
புதுச்சேரி:
திருக்கனூர் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருக்கனூர் சோரப்பட்டு டி.வி.சென்டர் வீதியை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மனைவி சுசீலா. இவர்களது மகள் தட்சண்யா(வயது19). இவர் பிளஸ்-2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இதற்கிடையே தட்சண்யா அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த காதலுக்கு தட்சண்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் தட்சண்யா காதலித்து வந்த வாலிபர் வீட்டார் அவருக்கு திருமணம் செய்து வைக்க வேறு இடத்தில் பெண் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனையறிந்த தட்சண்யா மனவேதனையடைந்தார். காதலனுக்கு வேறு இடத்தில் பெண் பார்த்து திருமணம் செய்வதை பொறுத்துக்கொள்ள இயலாத தட்சண்யா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது தாயார் சுசீலா கொடுத்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புனிதராஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காதலித்த வாலிபரை திருமணம் செய்ய முடியாத ஏக்கத்தில் இளம் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






