என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மோட்டார் சைக்கிள் திருடர்கள் 2 பேர் கைது
    X

    மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரையும் அவர்களை கைது செய்த போலீசாரையும் படத்தில் காணலாம்.

    மோட்டார் சைக்கிள் திருடர்கள் 2 பேர் கைது

    • மோட்டார் சைக்கிள் திருடர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் புதுவை 100 அடி ரோட்டில் ரோந்து பணி மேற்கொண்டனர்.

    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் புதுவை 100 அடி ரோட்டில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும் படியாக வந்த 2 வாலிபர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர்.

    ஆனால் போலீசாரின் தடுப்பை மீறி அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி செல்ல முயன்றனர். உடனே போலீசார் விரட்டி சென்று 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் அந்த வாலிபர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அவர்கள் மரக்காணம் அருகே ஆளத்தூர் கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன், பாக்கம் கூட்டு ரோட்டை சேர்ந்த சங்கர் (37) என்பதும், அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திருட்டு மோட்டார் சைக்கிள் என்பதும் தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

    Next Story
    ×