என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புதுவையில் 2 ஆயிரத்து 861 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
    • புதுவையில் 195, காரைக்காலில் 49, மாகியில் ஒருவர் என புதிதாக 245 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் 2 ஆயிரத்து 861 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    இதில் புதுவையில் 195, காரைக்காலில் 49, மாகியில் ஒருவர் என புதிதாக 245 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

    புதுவையில் 18, காரைக்காலில் 3 பேர் என 21 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் ஆயிரத்து 33, காரைக்காலில் 143, ஏனாமில் 21 பேர், மாகியில் 2 பேர் என ஆயிரத்து 1199 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர்.

    புதுவையில் 127, காரைக்காலில் 26, ஏனாமில் 7 பேர் என 160 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர்.

    மாநிலத்தில் கொ ரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 963 ஆக உள்ளது. புதுவையில் 2-வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 17 லட்சத்து 66 ஆயிரத்து 330 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

    இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    • தொலைக்காட்சி நடிகர்கள் பங்கேற்று 2 நாள் கிரிக்கெட் போட்டி நடந்து முடிந்தது,
    • 6 அணிகளாக பிரிந்து 9 போட்டிகள் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுவை துத்திப்பட்டு சி.ஏ.பி. கிரிக்கெட் மைதானத்தில் சினிமா மற்றும் தொலைக்காட்சி நடிகர்கள் பங்கேற்று 2 நாள் கிரிக்கெட் போட்டி நடந்து முடிந்தது. 6 அணிகளாக பிரிந்து 9 போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் நடிகர் ம.கா.பா.வின் அணியான சில்க் ஸ்மிதா அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றது. திரைப்பட நடிகர் மகேந்திரன் அணி ரன்னர் பட்டத்தை பெற்றது.

    வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா துத்திப்பட்டு சி.ஏ.பி. கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. பரிசளிப்பு விழாவில் நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் மேலாண் இயக்குனர் நடிகை நிரோஷா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக சபாநாயகர் ஏம்பலம் செல்வம், போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, சுற்றுலாத்துறை செயலர் அருண் மற்றும் மார்க் மேலாண் இயக்குனர் நந்தகுமார், ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கலந்து கொண்டு சாம்பியன் பட்டம் பெற்ற ம.கா.பா அணிக்கு கோப்பை மற்றும் பரிசு பொருட்களை வழங்கினர். கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட் மற்றும் அதிக ரன் எடுத்த வீரர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. ஒட்டு மொத்த ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

    • பள்ளி தாளாளர் மருத்துவர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்
    • காமராஜர் பிறந்த நாளையொட்டி மாணவர்களுக்கு ஓவிய போட்டி நடத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை பெரியார் நகர் நியூ லிட்டில் கிட்ஸ் மழலையார் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது. விழாவிற்கு, பள்ளி தாளாளர் மருத்துவர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். காமராஜர் பிறந்த நாளையொட்டி மாணவர்களுக்கு ஓவிய போட்டி நடத்தப்பட்டது.

    வெற்றி பெற்ற மழலையர்களுக்கு ரமேஷ் எம்.எல்.ஏ., புதுவை ஒலிம்பிக் சங்க இணைச் செயலாளர் வளவன், கோஜூ ரியு கராத்தே சங்க செயலாளர் சுந்தரராஜன் ஆகியோர் பரிசு வழங்கினர். காமராஜர் பற்றி மழலைகள் பேசினர். கலை நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை ஆசிரியைகள் மகாலட்சுமி, லட்சுமி, பிரியா, சோனியா மேரி ஆகியோர் செய்தனர்.

    • மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் அமைச்சர் நமச்சிவாயம் பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை பாரதீய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் நமச்சிவாயம் பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம் ரிச்சர்ட் ஜான்குமார், சிவசங்கரன், அசோக் பாபு, மாநில துணைத்தலைவர்கள் தங்க விக்ரமன், செல்வம், முருகன் மற்றும் மாநில செயலாளர்கள், மாநில அணி தலைவர்கள், பிரிவு அமைப்பாளர்கள் ,மாவட்டத் தலைவர்கள், தொகுதி தலைவர்கள் ,தொகுதி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மாநிலத் தலைவர் சாமிநாதன் கூறும் போது பொதுமக்கள் அனைவரிடமும் தேசப்பற்றை அதிகப்படுத்தும் நோக்கத்துடன் 75- வது சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    • தலைமை ஆசிரியர் அறை ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் கம்ப்யூட்டர் மற்றும் பாட புத்தகங்களை திருடி சென்றுள்ளனர்
    • நெட்டப்பாக்கம் கம்பத்தம் வீதியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர் அறை ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் கம்ப்யூட்டர் மற்றும் பாட புத்தகங்களை திருடி சென்றுள்ளனர்.

    நெட்டப்பாக்கம் கம்பத்தம் வீதியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக ரகுமான்கான் உள்ளார். 2 மாடி கட்டிடம் கொண்ட இப்பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கான கம்ப்யூட்டர் சாதனங்கள் மற்றும் பாடப்புத்தகங்கள் பள்ளி தலைமை ஆசிரியரின் அறையில் வைக்கப்பட்டிருந்தன.

    இந்த நிலையில் பள்ளி முடிந்ததும் வகுப்பறைகள் மற்றும் பள்ளியின் முன்புற வாயில் கதவும் பூட்டப்பட்டது. வழக்கம் போல் பள்ளி தலைமை ஆசிரியர் ரகுமான்கான் தனது அறை கதவை திறக்க வந்தார். அப்போது அங்கு ஜன்னல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது அங்கு வைக்கப்பட்டிருந்த கம்ப்யூட்டர் சாதனங்கள், பள்ளி பாடப்புத்தகங்கள் திருடப்பட்டிருந்தது.

    இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ரகுமான்கான் நெட்டப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    • மணக்குள விநாயகர் இன்ஸ்டி டியூட்ஆப் டெக்னாலஜி கல்லூரியில் பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது.
    • கல்லூரி முதல்வர் மலர்க்கண் வரவேற்று பேசினார்

    புதுச்சேரி:

    கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டி டியூட்ஆப் டெக்னாலஜி கல்லூரியில் பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது.

    விழாவிற்கு மணக்குளவிநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கல்லூரி முதல்வர் மலர்க்கண் வரவேற்று பேசினார்.விழாவில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவன தலைமை கையகப்படுத்துதல் துறை உலகளாவிய தலைவர் கிரிஷ் நந்திமத் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பதக்கங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

    விழாவில் புதுவை பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்த 31 மாணவ-மாணவிகளுக்கு 33 கிராம் தங்கம், 140 கிராம் வெள்ளி பதக்கங்கள் வழங்கப்பட்டன. இதில் இளநிலை, முதுநிலை பட்டம் முடித்த 1,220 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.

    விழாவில் மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி இயக்குனர் வெங்கடாசலபதி, வேலை வாய்ப்பு துறை தலைவர் கைலாசம், மணக்குள விநாயகர் தொழில் நுட்ப கல்லூரி முதல்வர் காஞ்சனா, மயிலம் என்ஜினீயரிங் கல்லூரி வேலை வாய்ப்பு துறை அதிகாரி சதீஷ் மற்றும் பலர்க லந்து கொண்டனர். முடிவில் எந்திரவியல் துறை தலைவர் ராஜாராம் நன்றி கூறினார்.

    • உலக ஆணழகன் சாம்பியன் ஷிப் போட்டி நடந்தது.
    • 65 கிலோ எடைபிரிவில் இளஞ்செழியனுடன் 50 பேர் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    தாய்லாந்து நாட்டில் கிராண்ட் சென்டர் பாயிண்ட் டெர்மினல் நகரில் கடந்த 16-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை உலக ஆணழகன் சாம்பியன் ஷிப் போட்டி நடந்தது.

    இதில் 25-க்கும் மேற்பட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் இந்தியா சார்பில் புதுவை தேங்காய் திட்டை சேர்ந்த இளஞ்செழியன் என்பவர் பயிற்சியாளர் மணிகண்டன் தலைமையில் பங்கேற்றார். 65 கிலோ எடைபிரிவில் இளஞ்செழியனுடன் 50 பேர் பங்கேற்றனர். இதில் இளஞ்செழியன் 4-ம் இடம் பெற்று சாதனை படைத்தார். இதையடுத்து நாட்டுக்கும் புதுவைக்கும் பெருமை சேர்ந்த இளஞ்செழியனை புதுவை மாநில ஒருங்கிணைந்த அனைத்து விளையாட்டு வீரர்கள் நலச் சங்க தலைவர் இளங்கோவன், துணை தலைவர் மதி ஒளி ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • சாரதா கங்காதரன் கல்லூரியின் வேலைவாய்ப்பு குழு சார்பில் இறுதியாண்டு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
    • புதுவை சமுதாய கல்லூரி, போப் ஜான்பால் கல்லூரி, சாரதா கங்காதரன் கல்லூரியை சேர்ந்த 33 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை வேல்ராம்பட்டு சாரதா கங்காதரன் கல்லூரியின் வேலைவாய்ப்பு குழு சார்பில் இறுதியாண்டு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.

    கல்லூரியின் துணைத்தலைவர் டாக்டர் பழனிராஜா தலைமை தாங்கி முகாமினை தொடங்கி வைத்தார். அஸ்கான் டெக்னாலஜி சி.இ.ஒ. கண்ணன் ராஜேந்திரன், கல்லூரி முதல்வர் உதயசூரியன்ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முகாமில் பெங்களூரு, சென்னை, கோவை மற்றும் புதுவையை சேர்ந்த (சாப்ட்வேர், மார்க்கெட்டிங், இன்சூரன்ஸ், பி.பி.ஓ.) 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு ஆட்களை தேர்வு செய்தனர்.

    முகாமில் 2020-21-ல் தேர்வு பெற்ற மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    முகாமில் கலை அறிவியல், பொறியியல், வணிகவியல், வணிக மேலாண்மை பயின்ற மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் புதுவை சமுதாய கல்லூரி, போப் ஜான்பால் கல்லூரி, சாரதா கங்காதரன் கல்லூரியை சேர்ந்த 33 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.

    மேலும் சாரதா கங்காதரன் கல்லூரி, பாரதிதாசன் மகளிர் கல்லூரி உள்ளிட்ட பல்வே று கல்லூரிகளை சேர்ந்த 70 மாணவ-மாணவிகள் அடுத்த கட்ட தேர்வுக்கு தேர்வாகியுள்ளனர்.

    விழாவில் அஸ்கான் டெ க்னாலஜி, சென்க்ஸ் அகாடமி, வெள்ளி வெஞ்சர்ஸ், அகஸ்தியா அகாடமி ஆகிய 4 நிறுவனங்களுடன் சாரதா கங்காதரன் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.

    முகாமிற்கான ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆன், துணை ஒருங்கிணைப்பாளர் கமலக்கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • புதுவை ரெட்டியார் பாளையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவன் பஸ் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்து போனார்.
    • சாலைகளை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் விபத்து ஏற்பட்டதாக கூறி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை ரெட்டியார் பாளையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவன் பஸ் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்து போனார்.

    சாலைகளை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் விபத்து ஏற்பட்டதாக கூறி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து புதுவை கலெக்டர் வல்லவன் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உத்தரவிட்டார்.

    அதன்படி காலை 9 மணிக்கு தாசில்தார் மகாதேவன் தலைமையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பார்த்தசாரதி, ஏழுமலை மற்றும் போலீசாருடன் இணைந்து புதுவை - கடலூர் சாலையில் வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை முதல் நைனார் மண்டபம் வரை சாலையில் அமைத்துள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    இதற்கு சாலையோர சிறு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    அதன்பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்று கலெக்டரிடம் முறையிடுவதற்காக சென்ற னர். இதுகுறித்து தாசில்தார் மகாதேவன் கூறியதாவது:-

    புதுவையில் சாலையில் ஆக்கிரமித்துள்ள ஆக்கிர மிப்புகளை அகற்றுவது வழக்கம். அதுபோல் கலெக்டர் உத்தரவின் பேரில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடு பட்டோம்.

    இந்த பணி தொடர்ந்து நடைபெறும். மேலும் சாலையோர வியாபாரிகள் தங்களது ஆக்கிரமிப்புகளை தாமாகவே முன்வந்து அகற்றிக் கொள்ள வேண்டு மென கூறினார்.

    • பாகூரை அடுத்த கிருமாம் பாக்கம் அருகே தனியார் மருத்துவமனை உள்ளது.
    • இங்கு சிகிச்சைக்காக புதுவை மட்டுமின்றி தமிழகத்திலிருந்து பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    புதுச்சேரி:

    பாகூரை அடுத்த கிருமாம் பாக்கம் அருகே தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு சிகிச்சைக்காக புதுவை மட்டுமின்றி தமிழகத்திலிருந்து பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    இந்த நிலையில் கடலூர் செல்லங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் குமார் (வயது 21). இங்கு மருத்துவ படிப்பை படித்துக் கொண்டே மருத்துவ மனை யில் பணி செய்து வந்தார்.

    சம்பவத்தன்று பணி முடிந்து வீடு திரும்ப மோட்டார் சைக்கிளை எடுக்க வந்த போது மோட்டார் சைக்கிள் திருடப்பட்டிருப்பதை கண்டு மனோஜ்குமார் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் மனோஜ்குமார் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் கிருமாம்

    பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினார்.

    விசாரணையில் மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது மருத்துவமனைக்கு ஒரே மோட்டார் சைக்கிளில் சந்தேகம் படும்படி நபர்கள் வருவதும் சிறிது நேரம் கழித்து மனோஜ் குமாரின் மோட்டார் சைக்கிளை திருடி செல்வது பதிவாகி இருந்தது.

    இதையடுத்து கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை வைத்து பாகூரை அடுத்த கரையாம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (46) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணை யில் பாலமுருகன் கூட்டாளியுடன் மோட்டார் சைக்கிள் திருடியதை ஒப்பு கொண்டார். தொடர்ந்து அவரிடம் விசாரணை செய்தபோது பாலமுருகன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அதே தனியார் மருத்துவமனையில் காவலாளியாக வேலை செய்து வந்ததும், அதன் பிறகு மற்றொரு மருத்துவ மனையில் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.

    அவ்வப்போது கட்டிட வேலைக்கு செல்லும் போது மேட்டுப்பாளையம் பகுதியில் சேகர் என்ற குணசேகரன் என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.

    குணசேகரன் மேட்டுப்பாளையம் பகுதி யில் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். அங்கு ஒரு அடிதடி வழக்கில் கைதாகி கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அதே சிறையில் மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட திருவண்ணாமலை செங்கம் பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் (21) என்ற வாலிபருடன் குணசேகரனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    பின்னர் 2 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.

    சம்பவத்தன்று ஊசுட்டேரி பகுதியில் பாலமுருகன் அர்ஜுனன் குணசேகரன் ஆகிய 3 பேரும் மது அருந்திக் கொண்டிருந்தனர்.

    அப்போது குணசேகரன் மீன்பிடித் தொழிலில் போதிய வருமானம் கிடைக்கவில்லை. அதனால் வேறு தொழில் செய்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்று பாலமுருகனிடம் கூறியுள்ளார். அதற்கு பாலமுருகன் தனியார் மருத்துவமனையில் வேலை பார்க்கும் டாக்டர்கள் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை எடுத்து வருவார்கள். அந்த மோட்டார் சைக்கிளை திருடி நல்ல விலைக்கு விற்று பணம் சம்பாதிக்கலாம் என்று குணசேகரன் கூறியுள்ளார்.

    இதையடுத்து குணசேகரன் தூண்டுதலின் பேரில் பாலமுருகன், அர்ஜுனன் உதவியுடன் தனியார் மருத்துவமனையில் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து பாலமுருகனையும், அர்ஜூனனையும் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அர்ஜுனன் வில்லியனூரை அடுத்த பொறையூர் பகுதியில் திருடி மறைத்து வைத்திருந்த மோட்டார் சைக்கிளையும் கிருமாம்பாக்கம் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய சேகர் என்ற குணசேகரனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • சேதராப்பட்டு மந்தகரையில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க வந்தனர்.
    • அப்போது சுந்தர்- அரவிந்தன் ஆகியோருக்கும் லிங்கேஸ்வரனுக்கும் இடையே முன்விரோதம் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    சேதராப்பட்டு புது காலனி பகுதியை சேர்ந்த வர்கள் சுந்தர் (வயது 25). அரவிந்தன் (27). இருவரும் இரவு சேதராப்பட்டு மந்தகரையில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க வந்தனர்.

    அப்போது கரசூர் காலனியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் லிங்கேஸ்வரன் (32) அதே கடைக்கு ஐஸ்கிரீம் வாங்க வந்ததாக கூறப்படுகிறது.

    அப்போது சுந்தர்- அரவிந்தன் ஆகியோருக்கும் லிங்கேஸ்வரனுக்கும் இடையே முன்விரோதம் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது.

    பின்னர் கைகலப்பாக மாறி ஒருவருக்கொருவர் தாக்கி கொண்ட நிலையில் லிங்கேஸ்வரன் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து சுந்தரையும், அரவிந்தனையும் ஓட, ஓட விரட்டி குத்தினார்.

    மேலும் அங்கிருந்த பீர் பாட்டிலால் தாக்கியதில் சுந்தருக்கு முகம், கைகளில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்ட, சொட்ட பழைய காலனி பகுதிக்குள் ஓடினார். அரவிந்தனும் படுகாயம் அடைந்தார்.பின்னர் லிங்கேஸ்வரன் தப்பி ஓடி விட்டார்.

    ரத்தம் சொட்ட சொட்ட ஊருக்குள் ஓடிய வாலிபர்களை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து சேதராப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவ நடந்த கடை வாசலில் இருந்து இடத்தில் இருந்து 20 அடி தூரத்திற்கு ரத்தக்கறைகள் படர்ந்து கிடந்ததால் இன்று காலை அதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். கொலை வெறி தாக்குதல் நடத்திய லிங்கேஸ்வரனை போலீசார் தேடிவரும் நிலையில், காலை சேதரப்பட்டு மற்றும் கரசூர் பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • கரையாம்புத்தூர் அருகே பெற்றோர் திருமணம் செய்து வைக்காத ஏக்கத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • கரையாம்புத்தூர் அருகே கடுவனூர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி. டிரைவர் வேலை செய்து வருகிறார்.

    புதுச்சேரி:

    கரையாம்புத்தூர் அருகே பெற்றோர் திருமணம் செய்து வைக்காத ஏக்கத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கரையாம்புத்தூர் அருகே கடுவனூர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி. டிரைவர் வேலை செய்து வருகிறார். இவரது மகன் ராம்குமார்(வயது26). ஐ.டி.ஐ. படித்த முடித்த இவர் திருவாண்டார்கோவிலில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். மது பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்ட ராம்குமார் தினமும் அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்தார். பெற்றோர் கண்டித்தும் மது பழக்கத்தை அவர் கைவிடவில்லை.

    குடியை மறக்க 2 முறை அவரை மறுவாழ்வு மையத்தில் அனுமதித்தும் மீண்டும், மீண்டும் ராம் குமார் மது குடித்து வந்தார்.

    இதற்கிடையே ராம்குமார் தனது பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்கும்படி வற்புறுத்தி வந்தார். அதற்கு மது பழக்கத்தை கைவிட்டால் திருமணம் செய்து வைப்ப தாக பெற்றோர் உறுதி அளித்தனர். ஆனாலும், ராம்குமார் இதனை ஏற்காமல் தொடர்ந்து மது குடித்து வந்தார்.

    இந்த நிலையில் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த ராம்குமாரை அவரது தாயார் சாப்பிட அழைத்தார். அதற்கு பின்னர் சாப்பிடுவதாக கூறி விட்டு ராம்குமார் சோகமாக படுத்துக்கொண்டார்.

    நள்ளிரவு திடீரென சந்தேகமடைந்து அவரது தாயார் படுக்கை அறைக்கு சென்று பார்த்தார். அப்போது ராம்குமார் மின் விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு திடுக்கிட்டார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ராம்குமாரை தூக்கில் இருந்து மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ராம்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது தந்தை ரவி கொடுத்த புகாரின் பேரில் காரையாம்புத்தூர் புறக்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×