search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மோட்டார் சைக்கிள் திருடிய- 2 பேர் கைது
    X

    மோட்டார் சைக்கிள் திருடியவர்களையும், அவர்களை கைது செய்த போலீசாரையும் படத்தில் காணலாம்.

    மோட்டார் சைக்கிள் திருடிய- 2 பேர் கைது

    • பாகூரை அடுத்த கிருமாம் பாக்கம் அருகே தனியார் மருத்துவமனை உள்ளது.
    • இங்கு சிகிச்சைக்காக புதுவை மட்டுமின்றி தமிழகத்திலிருந்து பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    புதுச்சேரி:

    பாகூரை அடுத்த கிருமாம் பாக்கம் அருகே தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு சிகிச்சைக்காக புதுவை மட்டுமின்றி தமிழகத்திலிருந்து பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    இந்த நிலையில் கடலூர் செல்லங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் குமார் (வயது 21). இங்கு மருத்துவ படிப்பை படித்துக் கொண்டே மருத்துவ மனை யில் பணி செய்து வந்தார்.

    சம்பவத்தன்று பணி முடிந்து வீடு திரும்ப மோட்டார் சைக்கிளை எடுக்க வந்த போது மோட்டார் சைக்கிள் திருடப்பட்டிருப்பதை கண்டு மனோஜ்குமார் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் மனோஜ்குமார் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் கிருமாம்

    பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினார்.

    விசாரணையில் மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது மருத்துவமனைக்கு ஒரே மோட்டார் சைக்கிளில் சந்தேகம் படும்படி நபர்கள் வருவதும் சிறிது நேரம் கழித்து மனோஜ் குமாரின் மோட்டார் சைக்கிளை திருடி செல்வது பதிவாகி இருந்தது.

    இதையடுத்து கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை வைத்து பாகூரை அடுத்த கரையாம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (46) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணை யில் பாலமுருகன் கூட்டாளியுடன் மோட்டார் சைக்கிள் திருடியதை ஒப்பு கொண்டார். தொடர்ந்து அவரிடம் விசாரணை செய்தபோது பாலமுருகன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அதே தனியார் மருத்துவமனையில் காவலாளியாக வேலை செய்து வந்ததும், அதன் பிறகு மற்றொரு மருத்துவ மனையில் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.

    அவ்வப்போது கட்டிட வேலைக்கு செல்லும் போது மேட்டுப்பாளையம் பகுதியில் சேகர் என்ற குணசேகரன் என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.

    குணசேகரன் மேட்டுப்பாளையம் பகுதி யில் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். அங்கு ஒரு அடிதடி வழக்கில் கைதாகி கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அதே சிறையில் மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட திருவண்ணாமலை செங்கம் பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் (21) என்ற வாலிபருடன் குணசேகரனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    பின்னர் 2 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.

    சம்பவத்தன்று ஊசுட்டேரி பகுதியில் பாலமுருகன் அர்ஜுனன் குணசேகரன் ஆகிய 3 பேரும் மது அருந்திக் கொண்டிருந்தனர்.

    அப்போது குணசேகரன் மீன்பிடித் தொழிலில் போதிய வருமானம் கிடைக்கவில்லை. அதனால் வேறு தொழில் செய்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்று பாலமுருகனிடம் கூறியுள்ளார். அதற்கு பாலமுருகன் தனியார் மருத்துவமனையில் வேலை பார்க்கும் டாக்டர்கள் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை எடுத்து வருவார்கள். அந்த மோட்டார் சைக்கிளை திருடி நல்ல விலைக்கு விற்று பணம் சம்பாதிக்கலாம் என்று குணசேகரன் கூறியுள்ளார்.

    இதையடுத்து குணசேகரன் தூண்டுதலின் பேரில் பாலமுருகன், அர்ஜுனன் உதவியுடன் தனியார் மருத்துவமனையில் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து பாலமுருகனையும், அர்ஜூனனையும் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அர்ஜுனன் வில்லியனூரை அடுத்த பொறையூர் பகுதியில் திருடி மறைத்து வைத்திருந்த மோட்டார் சைக்கிளையும் கிருமாம்பாக்கம் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய சேகர் என்ற குணசேகரனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×