என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    நட்சத்திர  கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா
    X

    நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் சாம்பியன்ஷிப் வென்ற அணிக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் சந்திரபிரியங்கா, சுற்றுலாத்துறை செயலர் அருண் ஆகியோர் கோப்பை வழங்கிய காட்சி.

    நட்சத்திர கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா

    • தொலைக்காட்சி நடிகர்கள் பங்கேற்று 2 நாள் கிரிக்கெட் போட்டி நடந்து முடிந்தது,
    • 6 அணிகளாக பிரிந்து 9 போட்டிகள் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுவை துத்திப்பட்டு சி.ஏ.பி. கிரிக்கெட் மைதானத்தில் சினிமா மற்றும் தொலைக்காட்சி நடிகர்கள் பங்கேற்று 2 நாள் கிரிக்கெட் போட்டி நடந்து முடிந்தது. 6 அணிகளாக பிரிந்து 9 போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் நடிகர் ம.கா.பா.வின் அணியான சில்க் ஸ்மிதா அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றது. திரைப்பட நடிகர் மகேந்திரன் அணி ரன்னர் பட்டத்தை பெற்றது.

    வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா துத்திப்பட்டு சி.ஏ.பி. கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. பரிசளிப்பு விழாவில் நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் மேலாண் இயக்குனர் நடிகை நிரோஷா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக சபாநாயகர் ஏம்பலம் செல்வம், போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, சுற்றுலாத்துறை செயலர் அருண் மற்றும் மார்க் மேலாண் இயக்குனர் நந்தகுமார், ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கலந்து கொண்டு சாம்பியன் பட்டம் பெற்ற ம.கா.பா அணிக்கு கோப்பை மற்றும் பரிசு பொருட்களை வழங்கினர். கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட் மற்றும் அதிக ரன் எடுத்த வீரர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. ஒட்டு மொத்த ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

    Next Story
    ×