என் மலர்
புதுச்சேரி

புதுவை - கடலூர் சாலையில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் காட்சி.
புதுவை-கடலூர் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
- புதுவை ரெட்டியார் பாளையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவன் பஸ் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்து போனார்.
- சாலைகளை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் விபத்து ஏற்பட்டதாக கூறி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:
புதுவை ரெட்டியார் பாளையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவன் பஸ் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்து போனார்.
சாலைகளை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் விபத்து ஏற்பட்டதாக கூறி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து புதுவை கலெக்டர் வல்லவன் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உத்தரவிட்டார்.
அதன்படி காலை 9 மணிக்கு தாசில்தார் மகாதேவன் தலைமையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பார்த்தசாரதி, ஏழுமலை மற்றும் போலீசாருடன் இணைந்து புதுவை - கடலூர் சாலையில் வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை முதல் நைனார் மண்டபம் வரை சாலையில் அமைத்துள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கு சாலையோர சிறு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அதன்பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்று கலெக்டரிடம் முறையிடுவதற்காக சென்ற னர். இதுகுறித்து தாசில்தார் மகாதேவன் கூறியதாவது:-
புதுவையில் சாலையில் ஆக்கிரமித்துள்ள ஆக்கிர மிப்புகளை அகற்றுவது வழக்கம். அதுபோல் கலெக்டர் உத்தரவின் பேரில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடு பட்டோம்.
இந்த பணி தொடர்ந்து நடைபெறும். மேலும் சாலையோர வியாபாரிகள் தங்களது ஆக்கிரமிப்புகளை தாமாகவே முன்வந்து அகற்றிக் கொள்ள வேண்டு மென கூறினார்.






