என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கம் சிறுவர் பூங்கா அருகில் உள்ள குறுக்குத் தெருவில் குடிநீரில் மழை நீர் கலந்து பாதிக்கப்படுவதாகவும் சாலையை மேம்படுத்த வேண்டும்.
    • ரூ.7.15லட்சம் செலவில் சிமெண்டு சாலை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கம் சிறுவர் பூங்கா அருகில் உள்ள குறுக்குத் தெருவில் குடிநீரில் மழை நீர் கலந்து பாதிக்கப்படுவதாகவும் சாலையை மேம்படுத்த வேண்டும் என தொகுதி எம்.எல்.ஏ. லட்சுமி–காந்தனிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

    அதன்படி பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் ரூ.7.15லட்சம் செலவில் சிமெண்டு சாலை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். இதில் கிருமாம்பாக்கம் கிராம முக்கிய பிரமுகர்கள் என்.ஆர்‌காங்கிரஸ் கட்சி சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து கிருமாம்பாக்கம் வில்லிக குட்டை மயானத்திற்கு தார் சாலை மற்றும் குளியல் வசதிகளுடன் கூடிய ஈமச்சடங்கு மண்டபம் அமைக்க ரூ.8.72 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பூமி பூஜையை லட்சுமி காந்தன் எம்.எல்.ஏ செய்து தொடங்கி வைத்தார்.

    • மத்திய சுகாதார அமைச் சகம் அறிவுறுத்தலின் பேரில், தன்னார்வ ரத்த தான முகாம் கடந்த 17-ந் தேதி முதல் வருகிற 1-ந் தேதி வரை இந்தியா வில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட ரத்த வங்கி களில் நடக்கிறது.
    • கல்லுாரி மாணவர்கள், இளைஞர்களுக்கு தன்னார்வ ரத்த தானம் செய்யும் விழிப் புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான கருத்தரங்கம், புதுவை அண்ணாமலை ஓட்டலில் நடந்தது.

    புதுச்சேரி:

    மத்திய சுகாதார அமைச் சகம் அறிவுறுத்தலின் பேரில், தன்னார்வ ரத்த தான முகாம் கடந்த 17-ந் தேதி முதல் வருகிற 1-ந் தேதி வரை இந்தியாவில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட ரத்த வங்கிகளில் நடக்கிறது.

    அதனையொட்டி, புதுவை மாநிலத்தில் உள்ள 4 அரசு, 11 தனியார் மருத்துவ மனைகளில் ரத்ததான முகாம் நடைபெற்று வருகிறது. சுகாதார துறை, ரத்த மாற்று கழகம், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் இணைந்து தன்னார்வ ரத்ததானத்தை ஊக்குவிக்கும் வகையில் பல விழிப் புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

    இதையொட்டி, கல்லுாரி மாணவர்கள், இளைஞர் களுக்கு தன்னார்வ ரத்த தானம் செய்யும் விழிப் புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான கருத்தரங்கம், புதுவை அண்ணாமலை ஓட்டலில் நடந்தது.

    சுகாதார துறை செயலாளர் உதயகுமார் வாழ்த்துரை வழங்கினார். இயக்குனர் ஸ்ரீராமுலு வரவேற்றார். கருத்தரங்கை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசுகையில், புதுவை அரசு, சுகாதாரத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக் கிறது. சுகாதார வசதியை மேலும் மேம்படுத்துவதே அரசின் எண்ணமாகும்.

    தன்னார்வ ரத்ததானம் பற்றிய விழிப்புணர்வு இளைஞர்களுக்கு ஏற்படுத்துவது போல், பயிலும் மாணவர்களிடையே போதை பழக்கம் இல்லாமல் ஒழிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

    தொடர்ந்து கருத்தரங்கை யொட்டி நடந்த போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த மணக்குள விநாயகர் செவிலியர் கல்லுரி, மதர் தெரேசா பட்ட மேற்படிப்பு மைய செவிலியர் பள்ளி, ஈஸ்ட் கோஸ்ட் செவிலியர் கல்லுாரிகளுக்கு ரொக்கப்ப–ரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

    • புதுவை பிராணிகள் நலன் மற்றும் பாதுகாப்பு மையம் மற்றும் மத்திய விலங்குகள் நல வாரியம் சார்பில் உலக வெறிநாய் தடுப்பு தினத்தை முன்னிட்டு இலவச வெறிநாய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
    • தெரு நாய்களுக்கு பொதுமக்களை பாதுகாக்கும் வகையிலும் ரேபிஸ் நோய் தாக்காமல் தடுக்க 100-க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி போடப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை பிராணிகள் நலன் மற்றும் பாதுகாப்பு மையம் மற்றும் மத்திய விலங்குகள் நல வாரியம் சார்பில் உலக வெறிநாய் தடுப்பு தினத்தை முன்னிட்டு இலவச வெறிநாய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

    புதுவை உருளையான்பேட்டை ராஜாநகரில் முகாமை புதுவை பிராணிகள் நல மற்றும் பாதுகாப்பு இயக்கத் தலைவர் டாக்டர் செல்வமுத்து தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி தொடங்கி வைத்தார். அந்த பகுதியில் உள்ள தெரு நாய்களுக்கு பொதுமக்களை பாதுகாக்கும் வகையிலும் ரேபிஸ் நோய் தாக்காமல் தடுக்க 100-க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி போடப்பட்டது.

    மேலும் செல்லப்பி–ராணிகளை தோல் நோயிலிருந்து காப்பாற்ற சிகிச்சை மற்றும் அதற்கு தேவையான மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

    • உப்பளம் தொகுதி ராசு உடையார் தோட்டம்-கீழ்தோப்பு திடீர் நகர் பகுதியில் ரெயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஏழை மக்களை அரசு அப்புறப்படுத்தியதால் புதுவை நகராட்சி சமுதாய கூடத்தில் அவர்கள் தங்க வைக்க பட்டுள்ளனர்.
    • அவர்களுக்கு தண்ணீர், பால், ரொட்டி, தலையணை, பாய், போர்வை, போன்றவை தன்னார்வலர்கள் மூலம் கிடைத்ததா? என்று நேரில் சந்தித்து ஆய்வு மேற்கொண்டார்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதி ராசு உடையார் தோட்டம்-கீழ்தோப்பு திடீர் நகர் பகுதியில் ரெயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஏழை மக்களை அரசு அப்புறப்படுத்தியதால் புதுவை நகராட்சி சமுதாய கூடத்தில் அவர்கள் தங்க வைக்க பட்டுள்ளனர். அவர்களை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

    அவர்களுக்கு தண்ணீர், பால், ரொட்டி, தலையணை, பாய், போர்வை, போன்றவை தன்னார்வலர்கள் மூலம் கிடைத்ததா? என்று நேரில் சந்தித்து ஆய்வு மேற்கொண்டார்.

    பொதுமக்களுக்கான அடிப்படைத் தேவைகள் கிடைத்திட யுவர் பேக்கர்ஸ் நிறுவனர் கிருஷ்ணராஜூ ஏற்பாட்டில் உங்களுக்கு தயார் செய்துள்ளேன். மேலும் மளிகை பொருட்கள் அளித்திடவும் அறிவுறுத்தி இருக்கிறேன்,

    இவை போக அரசு சார்பில் ஆதிதிராவிட நலத்துறையிலும் உங்களுக்காக பேசி உணவுகள் வழங்க அறிவுறுத்தி இருக்கிறேன், எத்தகைய தேவையானாலும் அதனை பூர்த்தி செய்து கொடுப்பேன். என கென்னடி எம்.எல்.ஏ. உறுதி அளித்தார்.

    அப்போது தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, கலை மற்றும் இலக்கிய பகுத்தறிவு சந்துரு, மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகம், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜி, கிளைச் செயலாளர்கள் செல்வம் மற்றும் காலப்பன், செல்லப்பன், பீட்டர், பஸ்கள், கவி, அரவிந்த், மற்றும் கழக சகோதரர்கள் அனைவரும் உடன் இருந்தனர்.

    • விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொத்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது75) கூலி தொழிலாளி.
    • வைக்கோல் தீப்பற்றி எரிந்தது உடனே அக்கம் பக்கத்தினர் மற்றும் காசிநாதன் ஆகியோர் வைக்கோல் போரில் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

    புதுச்சேரி:

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொத்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது75) கூலி தொழிலாளி.

    இவர் சுமார் 30 வெள்ளாடுகளை வளர்த்து வந்தார். ஆடுகளை மேச்சலுக்கு அழைத்துச் சென்று மீண்டும் கொத்தம்பாக்கம் ஏரிக்கரை பகுதியில் உள்ள தனது ஆட்டுக்கொட்டகையில் 30 ஆடுகளை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

    இவருடைய ஆட்டு கொட்டகைக்கு அருகில் காசிநாதன் என்பவர் வைக்கோல் போர் வைத்துள்ளார். வைக்கோல் தீப்பற்றி எரிந்தது உடனே அக்கம் பக்கத்தினர் மற்றும் காசிநாதன் ஆகியோர் வைக்கோல் போரில் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

    பின்னர் அங்கிருந்து காசிநாதன் வீட்டுக்கு சென்று விட்டார் வைக்கோல் போரில் தீ சரிவர அணையாமல் இருந்துள்ளது.

    3 மணி அளவில் வைக்கோல் போரில் இருந்து தீ பரவி அருகில் உள்ள ஆட்டு கொட்டகைக்கு பரவியது.

    இதில் ஆட்டுக் கொட்டகை முற்றிலுமாக எரிந்து அங்கு அடைக்கப்பட்டு இருந்த 30 ஆடுகளும் தீயில் கருகி பலியானது.

    மீண்டும் ஆட்டுக் கொட்டகைக்கு வந்த பெரியசாமி 30 ஆடுகள் பலியாகி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும் அங்கு பற்றிக்கொண்டிருந்த தீயை அணைக்க விழுப்புரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார் 7 மணிக்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஆட்டுக்கொட்டகையில் எரிந்து கொண்டிருந்த மீதமுள்ள தீயை அணைத்தனர்.

    30 ஆடுகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெரியசாமிக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • முத்தியால்பேட்டையில் பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி நடந்த இலவச பொது மருத்துவ முகாமை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
    • முகாமை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் தொடங்கி வைத்தனர்.

    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டையில் பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி நடந்த இலவச பொது மருத்துவ முகாைம பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

    முத்தியால்பேட்டை தொகுதி பா.ஜனதா பிரமுகரும், மாநில செயற்குழு உறுப்பினருமான செந்தில்குமரன் ஏற்பாட்டின் பேரில் இலவச பொது மருத்துவ முகாம் முத்தியால்பேட்டை சோலை நகர் மருதம் வீதியில் உள்ள சிங்காரவேலர் சமுதாய நலக்கூடத்தில்  9 மணி முதல் 4 மணி வரை நடைபெற்றது.

    முகாமை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் தொடங்கி வைத்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், செல்வ கணபதி எம்.பி., மற்றும் நகர மாவட்டத்தலைவர் அசோக்பாபு எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மேலும் தொகுதி தலைவர் ஹரிதாஸ், நகர மாவட்ட பொதுச்செயலாளர் விமலா, நகர மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், ஓ.பி.சி. அணி என்ஜினீயர் சிவகுமார், விவசாய அணி நகர மாவட்ட பொதுசெயலாளர் ராம்குமார் , மகளிர் அணி தலைவி ஜெயலட்சுமி, இளைஞர் அணி, நகர மாவட்ட தலைவர் தமிழ்வாணன், இளைஞர் அணி மாநில துணை தலைவர் உமாசங்கர் மற்றும் ராக் பிரெட்ரிக், இளைஞர் அணி தொகுதி தலைவர் ராம்குமார், பசு பாதுகாப்பு மாநில தலைவர் கிருஷ்ணகாந்தன், வணிக பிரிவு சீனிவாசப்பெருமாள், கிளை தலைவர் கார்த்திக் , முன்னாள் நகர மாவட்ட தலைவர் மூர்த்தி, ஓ.பி.சி. அணி ரஞ்சித் எம்.ஆர்.சரவணன், ஆர்.சரவணன், கதிர், அர்ஜுன், அரவிந்த் ஆகியோர் பங்கேற்றனர்.

    பிம்ஸ் ஆஸ்பத்திரி சார்பில் நடந்த இந்த முகாமில் பொது மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், கண் சிகிச்சை, குழந்தைகள் மருத்துவம், அறுவை சிகிச்சை மருத்துவம், மகப்பேறு மருத்துவம், எலும்பு மருத்துவம், தோல் மருத்துவம் ஆகியவற்றிக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

    முகாமில் பங்கேற்றவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் நீரழிவு நோய், ரத்த கொதிப்பு ஆகியவற்றுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.மேலும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசியும் பலருக்கு செலுத்தப்பட்டது.

    மேலும் கண் பரிசோதனை செய்து கொண்டவர்களுக்கு இலவசமாக கண் கண்ணாடி யும் வழங்கப்பட்டது.

    • புதுவை முத்தியால்பேட்டை காந்தி வீதி எம்.எஸ்.அக்ரகாரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர்.
    • ரூ.2½ லட்சத்துக்கான காசோலையை முதல்- அமை ச்சர் ரங்கசாமி வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால்பேட்டை காந்தி வீதி எம்.எஸ்.அக்ரகாரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்துக்கு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதி உதவி வழங்க ெதாகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ்குமார் நடவடிக்கை எடுத்தார். அதன்பே ரில் மின்சாரம் தாக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2½ லட்சத்துக்கான காசோலையை முதல்- அமை ச்சர் ரங்கசாமி வழங்கினார். அப்போது அரசு கொறடா ஏ.கே .டி.ஆறுமுகம், பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் உடனிருந்தனர்.

    • உலக சுற்றுலா தினத்தையொட்டி புதுவை சுற்றுலா வளர்ச்சி கழகம் இந்திய சுற்றுலாத்துறை தெற்கு பிராந்தியத்துடன் இணைந்து இன்று புதுவை கடற்கரைச் சாலையில் மினி மராத்தான் போட்டியை நடத்தியது.
    • இப்போட்டியினை, புதுவை சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண் இயக்குநர் பாலாஜி கொடியசைத்து ெதாடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    உலக சுற்றுலா தினத்தையொட்டி புதுவை சுற்றுலா வளர்ச்சி கழகம் இந்திய சுற்றுலாத்துறை தெற்கு பிராந்தியத்துடன் இணைந்து இன்று புதுவை கடற்கரைச் சாலையில் மினி மராத்தான் போட்டியை நடத்தியது.

    புதுவை சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலகம் அருகில் தொடங்கி நகரைச் சுற்றி 4 கி.மீ. தூரம் வரை இப்போட்டி நடைபெற்றது.

    255 தன்னார்வலர்கள் இதில் பங்கேற்றனர். இப்போட்டியினை, புதுவை சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண் இயக்குநர் பாலாஜி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியின் போது இந்திய சுற்றுலாத் துறை தெற்கு பிராந்திய இயக்குநர்முகமது பாரூக் உடனிருந்தார்.

    • புதுவை உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி மூலம் செயல்படுத்த வேண்டிய பணிகள் குறித்து தொகுதி எம்.எல்.ஏ. நேரு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
    • புதுவை நகராட்சி வாய்க்கால்களை தூர்வாருதல் போன்ற பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதி–களில் நகராட்சி மூலம் செயல்படுத்த வேண்டிய பணிகள் குறித்து தொகுதி எம்.எல்.ஏ. நேரு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    உருளையன்பேட்டை தொகுதியில் நடைபெற வேண்டிய வேலைகள், பகத்சிங் வீதி மேம்படுத்துதல், சவரி ராயலு வீதியில் புதிய சிமெண்ட் சாலை அமைத்தல், போத்தீஸ் பக்கத்து வீதி மேம்படுத்தும் பணிகள், மழைக்காலத்திற்குள் புதுவை நகராட்சி வாய்க்கால்களை தூர்வா–ருதல் போன்ற பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தில் புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமார், நகராட்சி செயற்பொறியாளர் பிரபாகரன், உதவி பொறியாளர் நமச்சிவாயம், இளநிலை பொறியாளர் ஞானசேகர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • புதுவை மாநிலம் பளு தூக்கும் அசோசியேஷன் மற்றும் நியூ அர்னால்டு ஜிம் சார்பில் 29 -ம் ஆண்டு மாநில அளவிலான பளு தூக்கும் போட்டி நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கரன் மற்றும் நெட்டப்பாக்கம் வட்ட ஆய்வாளர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் பளு தூக்கும் அசோசியேஷன் மற்றும் நியூ அர்னால்டு ஜிம் சார்பில் 29 -ம் ஆண்டு மாநில அளவிலான பளு தூக்கும் போட்டி நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. போட்டியை துணை சபாநாயகர் ராஜவேலு தொடங்கி வைத்தார்.

    தொடர்ச்சியாக வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கரன் மற்றும் நெட்டப்பாக்கம் வட்ட ஆய்வாளர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரேசன், சப்-இன்ஸ்பெக்டர் வாழ் முனி, செயலாளர் பிரவீன் குமார் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் யுவராஜா மற்றும் அசோசியேஷன் குழுவினர் செய்திருந்தனர். பளு தூக்கும் போட்டியில் புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் உள்ளிட்ட உடற்பயிற்சி கழகத்திலிருந்து 120 ஆண்கள் 66பெண்கள் கலந்து கொண்டனர்.

    • பாகூர் அடுத்துள்ள பரிக்கல்பட்டு கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பூண்டி அம்மன் கோவில் பின்புறம் குளம் உள்ளது.
    • குளத்தை சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு நாளுக்கு நாள் நீர் பிடிப்பு பகுதி குறைந்து கொண்டே செல்கிறது.

    புதுச்சேரி:

    பாகூர் அடுத்துள்ள பரிக்கல்பட்டு கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பூண்டி அம்மன் கோவில் பின்புறம் குளம் உள்ளது.

    இந்த குளம் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் முழுவதும் இந்த குளத்தில் கலந்து கழிவுநீர் குளமாக மாறிவிட்டது.

    மேலும், குளத்தை சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு நாளுக்கு நாள் நீர் பிடிப்பு பகுதி குறைந்து கொண்டே செல்கிறது. ஆக்கிரமிப்பு தொடர்பாக அப்பகுதி மக்களிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு சீர்கெடும் நிலை ஏற்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக பல்வேறு புகார்கள் இருந்ததால் கடந்த 2 ஆண்டிற்கு முன்பு கவர்னராக இருந்த கிரண்பேடி நேரடியாக குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து குளத்தை தூர்வாரி பராமரிக்கவும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கழிவு நீர் கலக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    ஆனால் அவரது உத்தரவு இதுவரை செயல்படுத்தப்படவில்லை.தற்போது இந்த குளம் புதர் மண்டி விஷ ஜந்துகளின் புகலிடமாக மாறிவிட்டது. பாம்பு தேள் போன்ற விஷ பூச்சிகள் குடியிருப்பு பகுதிகள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்து வருகிறது.

    எனவே இந்த குளத்தை தூர்வாரி பராமரிக்கவும், நீதிமன்ற உத்தரவுபடி நீர் நிலையில் வசிக்கும் மக்களை வீடற்ற மக்களுக்கு மாற்று இடத்தில் மனைபட்டா வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மண்ணாடிப்பட்டு தொகுதி காட்டேரிக்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தனியார் பங்களிப்புடன் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா ந டந்தது.
    • அமைச்சர் நமச்சிவாயம் ஸ்மார்ட் வகுப்பறையை திறந்து வைத்தார்.

    புதுச்சேரி:

    மண்ணாடிப்பட்டு தொகுதி காட்டேரிக்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தனியார் பங்களிப்புடன் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா நடந்தது.

    அமைச்சர் நமச்சிவாயம் ஸ்மார்ட் வகுப்பறையை திறந்து வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ. அருள்முருகன், பா.ஜனதா நிர்வாகிகள் தமிழ்மணி, ராஜா, சுந்தரமூர்த்தி, கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி, முதன்மை கல்வி அலுவலகர் தனசெல்வன் நேரு, பள்ளி தலைமை ஆசிரியர் ரூபன் ஆகியோர் பங்கேற்றனர்.

    விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-

    புதுவையில் உள்ள அரசு பள்ளிகளில் 3 ஆயிரத்து 416 வகுப்பறைகள் உள்ளது. இதில் கடந்த காலங்களில் 216 மட்டுமே ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றப்பட்டது. மீதமுள்ள 3 ஆயிரத்து 200 வகுப் பறைகளும், ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு 1 ரூபாய் பஸ் இனி இலவசமாக இயக்கப் படும்.

    மாணவர்களுக்கு சீருடை வழங்கும் பணி விரைவில் தொடங்கப்படும். 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள், பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும். அரசு பள்ளியின் சுற்றுச்சூழல் தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அனைத்து மாணவர்களின் கல்வித்திறனை அலுவலகத்தில் இருந்தபடியே கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆசிரியர்களின் செயல்பாடுகள் குறித்தும் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே ஆசிரியர்கள் இனி பாடம் கற்பிக்காமல். நல்ல ரிசல்ட் கொடுக்காமல் இருக்க முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×