search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கிருமாம்பாக்கத்தில் திட்ட பணிகள்-லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    X

    கிருமாம்பாக்கத்தில் தார் சாலை அமைக்கும் பணியை லட்சுமி காந்தன் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த காட்சி. 

    கிருமாம்பாக்கத்தில் திட்ட பணிகள்-லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    • ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கம் சிறுவர் பூங்கா அருகில் உள்ள குறுக்குத் தெருவில் குடிநீரில் மழை நீர் கலந்து பாதிக்கப்படுவதாகவும் சாலையை மேம்படுத்த வேண்டும்.
    • ரூ.7.15லட்சம் செலவில் சிமெண்டு சாலை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கம் சிறுவர் பூங்கா அருகில் உள்ள குறுக்குத் தெருவில் குடிநீரில் மழை நீர் கலந்து பாதிக்கப்படுவதாகவும் சாலையை மேம்படுத்த வேண்டும் என தொகுதி எம்.எல்.ஏ. லட்சுமி–காந்தனிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

    அதன்படி பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் ரூ.7.15லட்சம் செலவில் சிமெண்டு சாலை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். இதில் கிருமாம்பாக்கம் கிராம முக்கிய பிரமுகர்கள் என்.ஆர்‌காங்கிரஸ் கட்சி சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து கிருமாம்பாக்கம் வில்லிக குட்டை மயானத்திற்கு தார் சாலை மற்றும் குளியல் வசதிகளுடன் கூடிய ஈமச்சடங்கு மண்டபம் அமைக்க ரூ.8.72 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பூமி பூஜையை லட்சுமி காந்தன் எம்.எல்.ஏ செய்து தொடங்கி வைத்தார்.

    Next Story
    ×