search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    முத்தியால்பேட்டையில் இலவச மருத்துவ முகாம்
    X

    மருத்துவ முகாமில் பங்கேற்று கண்பரிசோதனை செய்து கொண்ட ஒரு பெண்ணுக்கு அமைச்சர் நமச்சிவாயம் கண் கண்ணாடி வழங்கிய காட்சி.

    முத்தியால்பேட்டையில் இலவச மருத்துவ முகாம்

    • முத்தியால்பேட்டையில் பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி நடந்த இலவச பொது மருத்துவ முகாமை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
    • முகாமை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் தொடங்கி வைத்தனர்.

    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டையில் பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி நடந்த இலவச பொது மருத்துவ முகாைம பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

    முத்தியால்பேட்டை தொகுதி பா.ஜனதா பிரமுகரும், மாநில செயற்குழு உறுப்பினருமான செந்தில்குமரன் ஏற்பாட்டின் பேரில் இலவச பொது மருத்துவ முகாம் முத்தியால்பேட்டை சோலை நகர் மருதம் வீதியில் உள்ள சிங்காரவேலர் சமுதாய நலக்கூடத்தில் 9 மணி முதல் 4 மணி வரை நடைபெற்றது.

    முகாமை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் தொடங்கி வைத்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், செல்வ கணபதி எம்.பி., மற்றும் நகர மாவட்டத்தலைவர் அசோக்பாபு எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மேலும் தொகுதி தலைவர் ஹரிதாஸ், நகர மாவட்ட பொதுச்செயலாளர் விமலா, நகர மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், ஓ.பி.சி. அணி என்ஜினீயர் சிவகுமார், விவசாய அணி நகர மாவட்ட பொதுசெயலாளர் ராம்குமார் , மகளிர் அணி தலைவி ஜெயலட்சுமி, இளைஞர் அணி, நகர மாவட்ட தலைவர் தமிழ்வாணன், இளைஞர் அணி மாநில துணை தலைவர் உமாசங்கர் மற்றும் ராக் பிரெட்ரிக், இளைஞர் அணி தொகுதி தலைவர் ராம்குமார், பசு பாதுகாப்பு மாநில தலைவர் கிருஷ்ணகாந்தன், வணிக பிரிவு சீனிவாசப்பெருமாள், கிளை தலைவர் கார்த்திக் , முன்னாள் நகர மாவட்ட தலைவர் மூர்த்தி, ஓ.பி.சி. அணி ரஞ்சித் எம்.ஆர்.சரவணன், ஆர்.சரவணன், கதிர், அர்ஜுன், அரவிந்த் ஆகியோர் பங்கேற்றனர்.

    பிம்ஸ் ஆஸ்பத்திரி சார்பில் நடந்த இந்த முகாமில் பொது மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், கண் சிகிச்சை, குழந்தைகள் மருத்துவம், அறுவை சிகிச்சை மருத்துவம், மகப்பேறு மருத்துவம், எலும்பு மருத்துவம், தோல் மருத்துவம் ஆகியவற்றிக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

    முகாமில் பங்கேற்றவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் நீரழிவு நோய், ரத்த கொதிப்பு ஆகியவற்றுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.மேலும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசியும் பலருக்கு செலுத்தப்பட்டது.

    மேலும் கண் பரிசோதனை செய்து கொண்டவர்களுக்கு இலவசமாக கண் கண்ணாடி யும் வழங்கப்பட்டது.

    Next Story
    ×