search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வீடுகளை இழந்த மக்களுக்கு  அடிப்படை வசதிகள்-கென்னடி எம்.எல்.ஏ. உறுதி
    X

    வீடுகளை இழந்த பொதுமக்களை கென்னடி எம்.எல்.ஏ. சந்தித்து குறைகளை கேட்டு அறிந்த காட்சி.

    வீடுகளை இழந்த மக்களுக்கு அடிப்படை வசதிகள்-கென்னடி எம்.எல்.ஏ. உறுதி

    • உப்பளம் தொகுதி ராசு உடையார் தோட்டம்-கீழ்தோப்பு திடீர் நகர் பகுதியில் ரெயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஏழை மக்களை அரசு அப்புறப்படுத்தியதால் புதுவை நகராட்சி சமுதாய கூடத்தில் அவர்கள் தங்க வைக்க பட்டுள்ளனர்.
    • அவர்களுக்கு தண்ணீர், பால், ரொட்டி, தலையணை, பாய், போர்வை, போன்றவை தன்னார்வலர்கள் மூலம் கிடைத்ததா? என்று நேரில் சந்தித்து ஆய்வு மேற்கொண்டார்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதி ராசு உடையார் தோட்டம்-கீழ்தோப்பு திடீர் நகர் பகுதியில் ரெயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஏழை மக்களை அரசு அப்புறப்படுத்தியதால் புதுவை நகராட்சி சமுதாய கூடத்தில் அவர்கள் தங்க வைக்க பட்டுள்ளனர். அவர்களை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

    அவர்களுக்கு தண்ணீர், பால், ரொட்டி, தலையணை, பாய், போர்வை, போன்றவை தன்னார்வலர்கள் மூலம் கிடைத்ததா? என்று நேரில் சந்தித்து ஆய்வு மேற்கொண்டார்.

    பொதுமக்களுக்கான அடிப்படைத் தேவைகள் கிடைத்திட யுவர் பேக்கர்ஸ் நிறுவனர் கிருஷ்ணராஜூ ஏற்பாட்டில் உங்களுக்கு தயார் செய்துள்ளேன். மேலும் மளிகை பொருட்கள் அளித்திடவும் அறிவுறுத்தி இருக்கிறேன்,

    இவை போக அரசு சார்பில் ஆதிதிராவிட நலத்துறையிலும் உங்களுக்காக பேசி உணவுகள் வழங்க அறிவுறுத்தி இருக்கிறேன், எத்தகைய தேவையானாலும் அதனை பூர்த்தி செய்து கொடுப்பேன். என கென்னடி எம்.எல்.ஏ. உறுதி அளித்தார்.

    அப்போது தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, கலை மற்றும் இலக்கிய பகுத்தறிவு சந்துரு, மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகம், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜி, கிளைச் செயலாளர்கள் செல்வம் மற்றும் காலப்பன், செல்லப்பன், பீட்டர், பஸ்கள், கவி, அரவிந்த், மற்றும் கழக சகோதரர்கள் அனைவரும் உடன் இருந்தனர்.

    Next Story
    ×