என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "30 goats"

    • விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொத்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது75) கூலி தொழிலாளி.
    • வைக்கோல் தீப்பற்றி எரிந்தது உடனே அக்கம் பக்கத்தினர் மற்றும் காசிநாதன் ஆகியோர் வைக்கோல் போரில் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

    புதுச்சேரி:

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொத்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது75) கூலி தொழிலாளி.

    இவர் சுமார் 30 வெள்ளாடுகளை வளர்த்து வந்தார். ஆடுகளை மேச்சலுக்கு அழைத்துச் சென்று மீண்டும் கொத்தம்பாக்கம் ஏரிக்கரை பகுதியில் உள்ள தனது ஆட்டுக்கொட்டகையில் 30 ஆடுகளை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

    இவருடைய ஆட்டு கொட்டகைக்கு அருகில் காசிநாதன் என்பவர் வைக்கோல் போர் வைத்துள்ளார். வைக்கோல் தீப்பற்றி எரிந்தது உடனே அக்கம் பக்கத்தினர் மற்றும் காசிநாதன் ஆகியோர் வைக்கோல் போரில் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

    பின்னர் அங்கிருந்து காசிநாதன் வீட்டுக்கு சென்று விட்டார் வைக்கோல் போரில் தீ சரிவர அணையாமல் இருந்துள்ளது.

    3 மணி அளவில் வைக்கோல் போரில் இருந்து தீ பரவி அருகில் உள்ள ஆட்டு கொட்டகைக்கு பரவியது.

    இதில் ஆட்டுக் கொட்டகை முற்றிலுமாக எரிந்து அங்கு அடைக்கப்பட்டு இருந்த 30 ஆடுகளும் தீயில் கருகி பலியானது.

    மீண்டும் ஆட்டுக் கொட்டகைக்கு வந்த பெரியசாமி 30 ஆடுகள் பலியாகி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும் அங்கு பற்றிக்கொண்டிருந்த தீயை அணைக்க விழுப்புரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார் 7 மணிக்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஆட்டுக்கொட்டகையில் எரிந்து கொண்டிருந்த மீதமுள்ள தீயை அணைத்தனர்.

    30 ஆடுகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெரியசாமிக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×