என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • கடலூர்-புதுவை தேசிய நெடுஞ்சாலை கடந்த காலங்களில் பெய்த பலத்த மழையினால் கடுமையாக சேதம் அடைந்தது.
    • பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை கோட்டம் சார்பில் ரூ.17.98 கோடியில் சாலை வசதி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    கடலூர்-புதுவை தேசிய நெடுஞ்சாலை கடந்த காலங்களில் பெய்த பலத்த மழையினால் கடுமையாக சேதம் அடைந்தது.

    இதனால் போக்குவரத்து இடையூறுகளும் அவ்வப்போது விபத்துகளும் ஏற்பட்டு வந்தது. இது சம்பந்தமாக பொது மக்களும், சமூக ஆர்வலர்களும், போக்குவரத்து போலீசாரும் புதிய தார் சாலை அமைக்க கோரிக்கை வைத்து வந்தனர்.

    இந்த நிலையில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் முதலியார் பேட்டை, அரியாங்குப்பம், ஏம்பலம், பாகூர் தொகுதி எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து அரசுக்கு வலியுறுத்திவந்தனர்.

    அதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை கோட்டம் சார்பில் ரூ.17.98 கோடியில் சாலை வசதி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான ஒப்புதலை மத்திய சாலை மற்றும் தரைவழிப் போக்குவரத்து அமைச்சகம் வழங்கி உள்ளது.

    இந்தத் திட்டத்தில் தற்போது உள்ள பழுதடைந்தை சாலையை வலுப்படுத்துவது, தேவையான இடங்களில் வாய்க்கால் கட்டுவது, தடுப்பு சுவர் கட்டுவது, சாலை பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்துவது, சாலை மார்க்கிங் பெயிண்ட் அடிப்பது, பிளிங்கர் வைப்பது, எச்சரிக்கை பலகைகள் நடுவது ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. 14கி.மீ தூரத்திற்கு இந்த சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பூமி பூஜை இன்று காலை கடலூர்-புதுவை ரோடு தவளக்குப்பம் அடுத்த கொருக்குமேடு பகுதியில் நடைபெற்றது.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார். சிறப்பு விருந்தினர்களாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிகாந்தன், கே.எஸ்.பி ரமேஷ், சம்பத், பாஸ்கரன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, தேசிய நெடுஞ்சாலை கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி பொறியாளர் ஆறுமுகம், ஒப்பந்ததாரர் கதிரேசன், பா.ஜனதா ராமு, என்‌.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா முக்கிய கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ. 50 லட்சம் செலவில் பொதுப்பணித்துறை சிறப்பு கட்டிடப் பிரிவு மூலம் கல்வி மையம் மற்றும் சமுதாய நலக்கூடம் கட்டப்பட உள்ளது.
    • நேரு எம்.எல்.ஏ. பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை கோவிந்தசாலை பிரியதர்ஷினி நகர் கண்டாக்டர் தோட்டம் பகுதியில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 50 லட்சம் செலவில் பொதுப்பணித்துறை சிறப்பு கட்டிடப் பிரிவு மூலம் கல்வி மையம் மற்றும் சமுதாய நலக்கூடம் கட்டப்பட உள்ளது.

    இதற்கான பூமி பூஜை விழா கண்டக்டர் தோட்டம் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் அருகில் நடந்தது.நேரு எம்.எல்.ஏ. பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    விழாவில் பொதுப்பணித்துறை கட்டிடங்கள் சிறப்பு பிரிவு செயற்பொறியாளர் மாணிக்கவாசகம், உதவி பொறியாளர் ரவிச்சந்திரன், இளநிலை பொறியாளர் உதயகுமார் மற்றும் மனிதநேய மக்கள் சேவை இயக்க நிர்வாகிககள் பங்கேற்றனர்.

    • புதுவை தமிழக எல்லையான ஆரோவில், பட்டானூர், பூத்துறை திருச்சிற்றம்பலம் கூட்ரோடு ஆகிய பகுதிகளில் ரவுடிகளின் நடமாட்டம், கஞ்சா விற்பனை, வழிப்பறிக் கொள்ளையர்கள் நட மாட்டத்தை கண்காணிக்கும் படி விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவிட்டார்.
    • வாகன சோதனையில் 3 திருட்டு மோட்டார் சைக்கிள்களை ஆரோவில் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை தமிழக எல்லையான ஆரோவில், பட்டானூர், பூத்துறை திருச்சிற்றம்பலம் கூட்ரோடு ஆகிய பகுதிகளில் ரவுடிகளின் நடமாட்டம், கஞ்சா விற்பனை, வழிப்பறிக் கொள்ளையர்கள் நட மாட்டத்தை கண்காணிக்கும் படி விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவிட்டார்.

    அதன்படி ஆரோவில் இன்ஸ்பெக்டர் அன்பரசு மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் சத்யானந்தன் தலைமை யிலான போலீசார் கடந்த ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் மோட்டார் சைக்கிள்களுக்கு உரிய ஆவணங்கள் இன்றி வருபவர்களை கண்காணித்து அவர்களுக்கு அபராதம் செலுத்தி வருகின்றனர்.

    இந்த வாகன சோதனையில் 3 திருட்டு மோட்டார் சைக்கிள்களை ஆரோவில் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வாகனத்தை ஓட்டி வந்தவர்கள் தலை மறைவான நிலையில் அவர்களை பிடிக்கவும் திருட்டு போன மோட்டார் சைக்கிள்கள் யாருடையது? எங்கு திருடப்பட்டது? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஜிப்மர் மருத்துவமனை நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும், மருந்து- மாத்திரைகள் தட்டுப்பாட்டை நீக்க கோரியும் பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிப்பதில்லை, இந்த நிலையை மாற்ற வேண்டும்.

    புதுச்சேரி:

    ஜிப்மர் மருத்துவமனை நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும், மருந்து- மாத்திரைகள் தட்டுப்பாட்டை நீக்க கோரியும் பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஜிப்மர் ஆஸ்பத்திரி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க. மாநில அமைப்பாளர் கணபதி தலைமை தாங்கினார். இளைஞர் சங்க செயலாளர் எல். ஜி. சேகர் முன்னிலை வகித்தார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் வன்னியர் சங்க தலைவர் துரை, துணை அமைப்பாளர் வடிவேல், மற்றும் நிர்வாகிகள் , பொதுமக்கள் என 500 மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. மாநில அமைப்பாளர் கணபதி பேசியதாவது:-

    அயல்நாட்டில் வசிப்பவர்களும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏழை நோயாளிகளும் பயன்படும் மருத்துவமனையாக சிறந்து விளங்கிய ஜிப்மர் மருத்துவமனை இன்றைக்கு நிதி நெருக்கடியில் சிக்கி இயக்குனரின் தவறான வழிகாட்டுதலில் இந்த மருத்துவமனை பாழ்படுள்ளது.

    உயிர் காக்கும் மருந்து மாத்திரைகளை இல்லை. 74 வகையான மாத்திரைகள் இல்லை. ஊசிகள் இல்லை. நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிப்பதில்லை, இந்த நிலையை மாற்ற வேண்டும்.

    மத்திய அரசும் மாநில அரசும் ஜிப்மர் அவல நிலையை கவனத்தில் கொள்ள வேண்டும் இல்லையென்றால் எங்களுடைய நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் அதனைச் சார்ந்த 26 கிராமங்களில் சிறப்பு துப்புரவு முகாம் நடைபெற்று வருகிறது.
    • சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தவளக்குப்பம் அரவிந்தர் கண் மருத்துவமனை அருகே கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் அதனைச் சார்ந்த 26 கிராமங்களில் சிறப்பு துப்புரவு முகாம் நடைபெற்று வருகிறது.

    அதில் ஒரு நிகழ்வாக மாணவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்ட சுற்றுபுற தூய்மை விழிப்புணர்வு பேரணியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தவளக்குப்பம் அரவிந்தர் கண் மருத்துவமனை அருகே கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் மற்றும் பா.ஜனதா விவசாய அணி பொறுப்பாளர் ராமு, மாநில செயலாளர் ரத்தினவேல், தொகுதி தலைவர் லட்சுமி காந்தன், கிருஷ்ணமூர்த்தி, கூட்டுறவு சங்கத் தலைவர் தட்சிணாமூர்த்தி, ஆறுமுகம் , மோகன், மாயகிருஷ்ணன், ஹேமமாலினி, விஜி, செல்வி, உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் பேரணியில் கலந்து கொண்டனர்.

    • புதுவை மாநிலத்தில் ஆயிரத்து 80 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
    • ஜிப்மரில் ஒருவர், கோவிட் கேர் சென்டரில் 4 பேர் என 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் ஆயிரத்து 80 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    இதில் புதுவையில் 34 பேர், காரைக்காலில் 6 பேர், ஏனாமில் 4 பேர் என மொத்தம் 44 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    மாகியில் புதிதாக யாரும் தொற்றால் பாதிக்கப்படவில்லை. தற்போது புதுவை மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 329 ஆக உயர்ந்துள்ளது.

    ஜிப்மரில் ஒருவர், கோவிட் கேர் சென்டரில் 4 பேர் என 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீட்டில் 324 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அதே நேரத்தில் இன்று 83 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

    மேலும், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என முதல் டோஸ் 9,93,147 பேருக்கும், 2-வது டோஸ் 8,51,468 பேருக்கும், பூஸ்டர் டோஸ் 3,76,530 பேருக்கும் என மொத்தம் 22,21,145 கொரோனா தடுப்பூசிகள் இதுவரை போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 3,978 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

    • புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட கீழ்தோப்பு பகுதியில் ரெயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக இருந்து வந்த குடியிருப்புகள் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.
    • இதனையறிந்து, யுவர் பேக்கர்ஸ் நிறுவனர் கிருஷ்ண ராஜூ, தனது நிர்வாக குழுவினரை அனுப்பி பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக உணவு வழங்க ஏற்பாடு செய்தார்.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட கீழ்தோப்பு பகுதியில் ரெயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக இருந்து வந்த குடியிருப்புகள் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.

    இதனால், அங்கு வசித்து வந்த 18 குடும்பத்தினர் வீடு மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்த நிலையில் அவர்கள் தற்காலிகமாக சமுதாய நலக்கூடத்தில் தங்கியுள்ளனர்.

    இதனையறிந்து, யுவர் பேக்கர்ஸ் நிறுவனர் கிருஷ்ண ராஜூ, தனது நிர்வாக குழுவினரை அனுப்பி பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக உணவு வழங்க ஏற்பாடு செய்தார்.

    அதன்படி 18 குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் உட்பட 70 பேர்களுக்கு இரவு உணவு, பால், பிஸ்கட், தண்ணீர், பாய் மற்றும் தலையனை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக அவர்களுக்கு யுவர் பேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் 3 வேளை உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது.

    மேலும் இதுகுறித்து நிறுவனர் கிருஷ்ணராஜூ முதலியார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. சம்பத்தை சந்தித்து பேசியதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட 18 குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் 1 லட்சத்து 80 ஆயிரத்திற்கான காசோலையை, யுவர் பேக்கர்ஸ் நிறுவனர் கிருஷ்ணராஜூ முன்னிலை யில் சம்பத் எம்.எல்.ஏ. பாதிக்கப்பட்ட குடும்ப ங்களுக்கு வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் யுவர் பேக்கர்ஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • புதுவை அரசின் மின்துறை தனது விநியோக கம்பெனியின் 100 சதவீத பங்குகளை ரூ.27 கோடிக்கு தனியாருக்கு விற்பதற்கான ஒப்பந்தப் புள்ளியைக் கோரியுள்ளது.
    • தற்போதாவது மின் துறை தனியார் மயமாவதால் புதுவை மக்களுக்கும் மின் ஊழியர்களுக்கும் பொருளாதாரத்திற்கும், சமு தாயத்திற்கும் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று முதல்- அமைச்சர் விளக்குவாரா?

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசின் மின்துறை தனது விநியோக கம்பெனியின் 100 சதவீத பங்குகளை ரூ.27 கோடிக்கு தனியாருக்கு விற்பதற்கான ஒப்பந்தப் புள்ளியைக் கோரியுள்ளது.இதன் மூலம் அரசின் மின்சாரத்துறை. தனியார் மயமாக அரசு பச்சைக் கொடியை காட்டி இருக்கிறது.

    தற்போதாவது மின் துறை தனியார் மயமாவதால் புதுவை மக்களுக்கும் மின் ஊழியர்களுக்கும் பொருளாதாரத்திற்கும், சமு தாயத்திற்கும் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று முதல்- அமைச்சர் விளக்குவாரா?

    டெண்டரில், கொடுக்கப்பட்டுள்ள ரூ. 27 கோடி அரசுக்கு கிடைத்து விட்டால் நிதி நெருக்கடி தீர்ந்து விடுமா? டெண்டரில் கொடுக்கப்பட்டுள்ள ரூ. 27 கோடி எதன் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது? அது விநியோக கம்பெனியின் பங்குகளின் மதிப்பு மட்டுமா அல்லது மின் துறையின் ஒட்டுமொத்த சொத்துக்களின் மதிப்பா?

    பல ஆயிரம் கோடி மதிப்புள்ளபொது மக்களின் வைப்புத்தொகைக்கு யார் பொறுப்பு? மின் ஊழியர்களின் பணிப்பாதுகாப்பை யார் உறுதி செய்வது?

    மின்துறை ஊழியர்கள் தனியார் மயத்தை எதிர்த்து காலவரையற்ற போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் மின் சேவை பராமரிக்கப் படாவிட்டாலோ அல்லது. ஏதாவது அசம்பாவிதம் அல்லது விபரீதம் ஏற்பட்டாலோ அதற்கு அரசு பொறுப்பேற்குமா? சமீபத்தில் மின் துறை லாபம் ஈட்டி வருகிறது என்பது உண்மை. 2017-18- ல் இருந்து 2019-20 வரை 3 ஆண்டுகளில் மின்துறை 49.18 கோடியை லாபமாக ஈட்டி தந்துள்ளது.

    இது அரசின் ஒப்பந்த புள்ளியான ரூ.27 கோடியை விட அதிகம். அரசுக்கு வருவாய் ஈட்டும் ஒரு துறையை தனியாருக்கு தாரை வார்க்க வேண்டுமா?

    மின்துறையை தனியார் மயமாக்குவது தேவையற்றது. அது பொது நலனுக்கு எதிரானது. எனவே அரசு விடுத்துள்ள இந்த டெண்டரை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். அப்படி செய்ய தவறினால் நீதிமன்றத்தின் மூலம் தடுத்து நிறுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • புதுவையில் ஆளும் கூட்டணி கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதாவினர் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
    • புதுவையில் பா.ஜனதா ஆட்சி அமைய வேண்டும் என்றும், முதல்-அமைச்சரை மாற்ற வேண்டும் என்றும் பகிரங்கமாக கூறினார்.

    புதுச்சேரி:

    புதுவையில் ஆளும் கூட்டணி கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதாவினர் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

    கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் இந்த மோதல் பகிரங்கமாக வெளிப்பட்டது. பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் புதிய மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கியதில் ஊழலும் முறைகேடும் நடந்ததாக சட்டசபையில் பகிரங்கமாக புகார் செய்தார்.

    அதோடு பா.ஜனதா விற்கு ஆதரவு அளிக்கும் சுயேட்சை எம்.எல்.ஏ. அங்காளன், கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக் ஆகியோரும் தங்களது தொகுதியில் கோவில் அறங்காவலர் குழு, வளர்ச்சி பணிகள் உள்ளிட்டவற்றில் தாங்கள் புறக்கணிப்பதாக புகார் அளித்தனர்.

    இந்த நிலையில், கடந்த வாரம் பா.ஜனதாஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ. அங்காளன் தனது தொகுதி புறக்கணிக்கப்படுவதாக கூறி சட்டசபையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அப்போது தான் பா.ஜனதாவை ஆதரிப்பதால் முதல்-அமைச்சர் ரங்கசாமி வேண்டுமென்றே தன்னை புறக்கணிப்பதாகவும், புதுவையில் பா.ஜனதா வளர்ச்சியடைய கூடாது என ரங்கசாமி கருதுவதாகவும் புகார் கூறினார்.

    மேலும் புதுவையில் பா.ஜனதா ஆட்சி அமைய வேண்டும் என்றும், முதல்-அமைச்சரை மாற்ற வேண்டும் என்றும் பகிரங்கமாக கூறினார். அங்காளன் போராட்டம் நடத்தியபோது அவருக்கு ஆதரவாக பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரமும் போராட்டத்தில் ஈடுபட்டார். முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரும் விமர்சனம் செய்தார்.

    இந்த நிலையில், முதல்-அமைச்சர் ரங்கசாமி மீது ஊழல் மற்றும் முறைகேடு புகார்களை வெளிப்படையாக கூறியது என்.ஆர் காங்கிரஸ் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் அதிருப்தியும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

    இதனையடுத்து அவர்கள் அமைச்சர் லட்சுமிநாராயணன் அறையில் ஒன்று திரண்டனர். பின்னர் முதல்-அமைச்சர் ரங்கசாமியையும் சந்தித்து சுயேட்சை எம்.எல்.ஏ.க்கு ஆதரவாக பா.ஜனதா எம்.எல்.ஏ. பேசுவதா என அவர்கள் கேள்வி எழுப்பினர்.

    சுயேட்சை எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். மேலும் டெல்லி சென்றுள்ள சபாநாயகர் ஏம்பலம் செல்வம் புதுவை திரும்பியவுடன் அவரையும் பா.ஜனதா அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார் ஆகியோரிடம் இதுகுறித்து முறையிட போவதாக தெரிவித்தனர்.

    இந்த நிலையில், புதுவை திரும்பிய சபாநாயகர் ஏம்பலம் செல்வத்தை சட்டசபையில் உள்ள அவரது அறையில் அமைச்சர்கள் லட்சுமி நாராயனன், தேனீ ஜெயக்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், திருமுருகன், லட்சுமிகாந்தன், பாஸ்கர், கே.எஸ்.பி ரமேஷ் ஆகியோர் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார் ஆகியோரும் உடனிருந்தனர்.

    அப்போது என்.ஆர் காங்கிரஸ் தரப்பினர் கூட்டணி ஆட்சி நடைபெறும் போது முதல்-அமைச்சரை பகிரங்கமாக விமர்சிப்பது சரியா, அதுவும் சுயேட்சை

    எம்.எல்.ஏ. விமர்சிக்கும்போது பா.ஜனதா எம்.எல்.ஏ. அவருடன் இணைந்து குற்றம் சாட்டலாமா என கேள்வி எழுப்பினர்.

    அப்போது பா.ஜனதா தரப்பில் என்.ஆர் காங்கிரஸ், அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து, தேர்தலில் நிற்கட்டும் என கூறியது சரியா என்றும், இருதரப்பிலும் ஒருமித்த கருத்துடன் கூட்டணி வைத்துவிட்டு வெற்றி பெற்ற பிறகு எங்களால் தான் நீங்கள் வெற்றி பெற்றீர்கள் என கூறியது சரியா என்றும் கேட்டனர்.

    இருப்பினும் கூட்டணி கட்சிகள் ஒன்றுக்கொண்டு மோதிக்கொள்வது புதுவை மக்களிடம் அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதால் ஏதேனும் குறைகள் இருந்தால் தலைமையிடம் முறையிட்டு தீர்வு காண வேண்டும் என முடிவெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    • புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட 7 நாள் சிறப்பு முகாம் தொடக்க விழா பள்ளி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
    • சிறப்பு விருந்தினராக பள்ளி அளவிலான நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் கலந்து கொண்டு நாட்டு நலப்பணித்திட்டம் குறித்து மாணவர்களுக்கு விளக்க உரையாற்றினார்.

    புதுச்சேரி:

    புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட 7 நாள் சிறப்பு முகாம் தொடக்க விழா பள்ளி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

    விழாவுக்கு பள்ளி தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். தலைமை விருந்தினராக வடக்கு மற்றும் கிழக்கு போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் மற்றும் உள்ளாட்சித் துறை கண்காணிப்பாளர் சவுந்தர்ராஜன் மற்றும் அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக துறை நிபுணர் டாக்டர் ரத்தினவேல் காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

    சிறப்பு விருந்தினராக பள்ளி அளவிலான நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் கலந்து கொண்டு நாட்டு நலப்பணித்திட்டம் குறித்து மாணவர்களுக்கு விளக்க உரையாற்றினார்.

    புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநிலச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். பள்ளியின் மருத்துவ அதிகாரி டாக்டர் ரங்கநாயகிவளவன், பள்ளியின் முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், பள்ளியின் ஆலோசகர் ரத்னப்பிரியா, அருண்குமார், பள்ளியின் மூத்த அலுவலக அதிகாரி மரிய ஸ்டெல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கு நாட்டு நலப்பணித் திட்ட சீருடை மற்றும் குறிப்பேடு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் விரிவுரையாளர் ஜெயந்தி மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் செய்தி ருந்தனர்.

    • பிரதமர் மோடியின் 72-வது பிறந்த தினத்தை முன்னிட்டு புதுவையில் பா.ஜனதா சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
    • கருத்தரங்கில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் செல்வகணபதி எம்.பி. பா.ஜனதா மாநில துணைத்தலைவர் ரவிச்சந்திரன் உழவர்கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன், மாநில செயலாளர் லதா, ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதுச்சேரி:

    பிரதமர் மோடியின் 72-வது பிறந்த தினத்தை முன்னிட்டு புதுவையில் பா.ஜனதா சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

    இதன் ஒரு கட்டமாக லாஸ்பேட்டை தனியார் ஓட்டலில் பிரதமரின் வாழ்க்கை தொலைநோக்கு கொள்கை மற்றும் சாதனைகள் குறித்து அனைத்து துறை அறிவு சார் வல்லுநர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கு நடந்தது.

    பாரதீய ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஓ.பி.சி. அணி மாநில பொதுச் செயலாளர் வீர திருநாவுக்கரசு கலந்து கொண்டார்.

    கருத்தரங்கில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் செல்வகணபதி எம்.பி. பா.ஜனதா மாநில துணைத்தலைவர் ரவிச்சந்திரன் உழவர்கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன், மாநில செயலாளர் லதா, ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கருத்தரங்கு நிகழ்ச்சியினை அறிவு சார் பிரிவு மாநில அமைப்பாளர் முருகன், தொழில்துறை பிரிவு மாநில அமைப்பாளர் ராஜகணபதி, பொருளாதாரப் பிரிவு மாநில இணை அமைப்பாளர் ரமேஷ், தொழில் துறை பிரிவு மாநில இணை அமைப்பாளர் திருமால், அமைப்புசாரா பிரிவு மாநில இணை அமைப்பாளர் கமலன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • மின்துறையை தனியார் மயமாக்க அமைச்சரவை பரிந்துரை செய்ததாக தகவல் வெளியானதை தொடர்ந்து மீண்டும் மின் ஊழியர்கள் போராட்டத்தை தொடங்கினர்.
    • விதிப்படி வேலை, புதிய மின் இணைப்பு அளிப்பதில்லை, மின் கட்டணம் கணக்கிட்டு ரசீது வழங்குவதில்லை என அறிவித்து போராட்டம் நடத்தினர்.

    புதுச்சேரி:

    யூனியன் பிரதேசங்களுக்கான மின்துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    புதுவை மாநிலத்தில் அரசின் மின்துறையை தனியார் மயமாக்கும் பூர்வாங்க நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியது. இதை கண்டித்து புதுவை மின்துறை பொறியாளர்கள், ஊழியர்கள் இணைந்து தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழு என்ற அமைப்பை உருவாக்கி போராட்டம் நடத்த தொடங்கினர்.

    கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்கு அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அதோடு சட்டமன்றத்தில் மின்துறையை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கும் அனுப்பப்பட்டது.

    இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. புதிதாக பொறுப்பேற்ற என்ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணி அரசின் அமைச்சரவை கூட்டத்தில் மின்துறையை தனியார் மயமாக்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மேலும், தனியார்மயம் தொடர்பான வரைவு அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது.

    இதையடுத்து மின்துறை போராட்ட குழுவினர் பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்தத்தை கடந்த பிப்ரவரியில் தொடங்கினர்.

    இதனால் மின்துறை பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது. இதனிடையே தொழிற்சங்கத்தை கலந்து ஆலோசிக்காமல் எவ்வித முடிவும் எடுக்க மாட்டோம் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி வாக்குறுதி அளித்தார். இதனை ஏற்று மின்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை திரும்ப பெற்றனர்.

    இந்த நிலையில் மின்துறையை தனியார் மயமாக்க அமைச்சரவை பரிந்துரை செய்ததாக தகவல் வெளியானதை தொடர்ந்து மீண்டும் மின் ஊழியர்கள் போராட்டத்தை தொடங்கினர்.

    விதிப்படி வேலை, புதிய மின் இணைப்பு அளிப்பதில்லை, மின் கட்டணம் கணக்கிட்டு ரசீது வழங்குவதில்லை என அறிவித்து போராட்டம் நடத்தினர். மீண்டும் அரசு தரப்பில் வாக்குறுதி அளித்ததால் போராட்டத்தை கைவிட்டனர்.

    இந்த நிலையில் மின்துறை தனியார் மயத்துக்கான டெண்டர் நேற்று வெளியிடப்பட்டது.

    இதில். முன்மொழிவுக்கான கோரிக்கை வருகிற 30-ந் தேதி தொடங்கும். நவம்பர் 25-ந் தேதி விண்ணப்பிக்க இறுதிநாள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து மின் ஊழியர்கள் மீண்டும் இன்று (புதன்கிழமை) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர். புதுவை முழுவதும் மின்துறை அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து வம்பாகீரப்பாளையத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் திரண்டனர்.

    அங்கு அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு போராட்ட குழு தலைவர் அருள்மொழி தலைமை தாங்கினார். பொதுசெயலாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார்.

    போராட்டக்காரர்கள் தலைமை அலுவலகத்தின் நுழைவு வாயில் கதவை மூடினர். மாநிலம் முழுவதும் ஒட்டு மொத்தமாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் மின் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது. மின் கட்டண வசூல் மையங்களும் மூடப்படாததால் கட்டணம் செலுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

    ×