search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பா.ம.க. கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    ஜிப்மர் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து பா.ம.க.வினர் மாநில அமைப்பாளர் கணபதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.

    பா.ம.க. கண்டன ஆர்ப்பாட்டம்

    • ஜிப்மர் மருத்துவமனை நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும், மருந்து- மாத்திரைகள் தட்டுப்பாட்டை நீக்க கோரியும் பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிப்பதில்லை, இந்த நிலையை மாற்ற வேண்டும்.

    புதுச்சேரி:

    ஜிப்மர் மருத்துவமனை நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும், மருந்து- மாத்திரைகள் தட்டுப்பாட்டை நீக்க கோரியும் பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஜிப்மர் ஆஸ்பத்திரி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க. மாநில அமைப்பாளர் கணபதி தலைமை தாங்கினார். இளைஞர் சங்க செயலாளர் எல். ஜி. சேகர் முன்னிலை வகித்தார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் வன்னியர் சங்க தலைவர் துரை, துணை அமைப்பாளர் வடிவேல், மற்றும் நிர்வாகிகள் , பொதுமக்கள் என 500 மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. மாநில அமைப்பாளர் கணபதி பேசியதாவது:-

    அயல்நாட்டில் வசிப்பவர்களும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏழை நோயாளிகளும் பயன்படும் மருத்துவமனையாக சிறந்து விளங்கிய ஜிப்மர் மருத்துவமனை இன்றைக்கு நிதி நெருக்கடியில் சிக்கி இயக்குனரின் தவறான வழிகாட்டுதலில் இந்த மருத்துவமனை பாழ்படுள்ளது.

    உயிர் காக்கும் மருந்து மாத்திரைகளை இல்லை. 74 வகையான மாத்திரைகள் இல்லை. ஊசிகள் இல்லை. நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிப்பதில்லை, இந்த நிலையை மாற்ற வேண்டும்.

    மத்திய அரசும் மாநில அரசும் ஜிப்மர் அவல நிலையை கவனத்தில் கொள்ள வேண்டும் இல்லையென்றால் எங்களுடைய நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×