என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • மதிய உணவில் சாதம், மாணவர்களின் தொண்டையில் இறங்காத வகையில் பெரிது, பெரிதாக உள்ளது.
    • மேலும் உணவில் ருசியும் இல்லை. இதை எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, ஆளும் கட்சி உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர்.

    புதுச்சேரி:

    தனியார் நிறுவன அறக்கட்டளை மூலம் வில்லியனூர் தொகுதியில் உள்ள சுல்தான்பேட்டை தொடக்கப்பள்ளி, உத்திரவாணி பேட் மற்றும் பெரிய பேட் தொடக்கப் பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர், பிரிண்டர், தண்ணீர் சுத்திகரிப்பு எந்திரம், 50 சேர், ஸ்பீக்கர், மைக், பீரோ உள்ளிட்ட பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமை தாங்கி பொருட்களை பள்ளி நிர்வாகத்தினரிடம் வழங்கி பேசியதாவது:-

    மதிய உணவில் சாதம், மாணவர்களின் தொண்டையில் இறங்காத வகையில் பெரிது, பெரிதாக உள்ளது. மேலும் உணவில் ருசியும் இல்லை. இதை எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, ஆளும் கட்சி உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர்.

    கடந்த 5 மாதங்களாக மாணவர்களுக்கு முட்டை வழங்கப்படவில்லை. மாணவர்களுக்கான முட்டையை யார் சாப்பிடுகின்றார்கள் என்றும் தெரியவில்லை. உடனடியாக மாணவர் உணவுப் பிரச்சினையை கல்வித்துறை சரி செய்ய வேண்டும்.

    ஒரு கால கட்டம் வரை பொறுப்போம். சரி செய்ய வில்லையென்றால், தரமின்றி வழங்கப்படும் மாணவர்களுக்கான மதிய உணவுப் பிரச்சினையை பெரிய அளவில் கொண்டு செல்வோம்.

    இவ்வாறு சிவா பேசினார்.

    • தனியார் மருத்துவ கல்லூரி பேராசிரியரிடம் கிரெடிட் கார்டு மூலம் ரூ.1லட்சம் மோசடி செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • இவர் அங்குள்ள விடுதியிலேயே தங்கி பணி செய்து வருகிறார்.

    புதுச்சேரி:

    தனியார் மருத்துவ கல்லூரி பேராசிரியரிடம் கிரெடிட் கார்டு மூலம் ரூ.1லட்சம் மோசடி செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருபுவனை அருகே உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் டாக்டர் பாரத்(வயது26). இவர் அங்குள்ள விடுதியிலேயே தங்கி பணி செய்து வருகிறார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் தான் வைத்திருந்த தனியார் வங்கி கிரெடிட் கார்டு மூலம் ரூ.1500-க்கு பொருட்கள் வாங்கினார். ஆனால் அதன் பின்னர் அவரது செல்போனில் ரூ.1 லட்சத்து 7 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டதாக தகவல் வந்தது.

    இதனை பார்த்து டாக்டர் பாரத் அதிர்ச்சியடைந்தார். அப்போது இதுகுறித்து புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    தற்போது அனைத்து போலீஸ் நிலையங்களிலும் சைபர் கிரைம் வழக்குகள் பதிவு செய்யப்படலாம் என போலீஸ் தலைமையகம் அறிவித்ததின் பேரில் டாக்டர் பாரத் இதுபற்றி திருபுவனை போலீசில் புகார் செய்தார்.

    இப்புகாரை ஏற்று திருபுவனை போலீசார் முதன்முறையாக சைபர் கிரைம் வழக்காக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மது குடிப்பதை தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • புதுவை பிச்சைவீரன்பேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருணாகரன்.

    புதுச்சேரி:

    மது குடிப்பதை தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுவை பிச்சைவீரன்பேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருணாகரன். இவரது மனைவி கம்சலா. இவரது மகன் கதிரவன் (வயது26).

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருணாகரன் இறந்து விட்டார். இதனால் கம்சலா அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் உதவியாளராக வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். கதிரவன் அவ்வப்போது சுமை தூக்கும் வேலை மற்றும் டைல்ஸ் வேலைக்கு செல்வார்.

    இதற்கிடையே கதிரவனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. சம்பாதிக்கும் பணத்தை இவர் மது குடித்து செலவழித்து வந்தார். இதனை அவரது தாய் கம்சலா கண்டித்து வந்தார்.

    இதுபோல் தினமும் மது குடித்தால் திருமணம் செய்ய யார் பெண் கொடுப்பார்கள் என அறிவுரை கூறி வந்தார். ஆனால் அதனை கதிரவன் ஏற்காமல் தொடர்ந்து மது குடித்து வந்தார்.

    கடந்த தீபாவளி முதல் கதிரவன் வேலைக்கு செல்லாமல் தினமும் மது குடித்து வீட்டில் இருந்து வந்தார். நேற்றும் இவர் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனை அவரது தாய் கண்டித்து விட்டு பூமியான்பேட்டையில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றார்.

    பின்னர் பிச்சைவீரன்பேட்டில் உறவினர் வீட்டில் நடந்த பூமுடிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு கம்சலா வீடு திரும்பினார். அப்போது வீட்டில் மின் விசிறியில் கதிரவன் சேலையால் தூக்கு போட்டு தொங்குவதை கண்டு திடுக்கிட்டு அலறினார்.

    பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதிரவனை தூக்கில் இருந்து மீட்டு தான் வேலை பார்க்கும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கதிரவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கம்சலா கொடுத்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
    • புதுவையில் உள்ள முக்கிய சாலைக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் அரசு சூட்ட வேண்டும்.

    புதுச்சேரி:

    பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் மன்னர் மன்னனின் மகனான கவிஞர் கோ.பாரதி தலைமையில் தமிழறிஞர்கள் படைப்பாளி பைரவி, சரஸ்வதி வைத்தியநாதன், நெடுமாறன், தென்றல், இசை அமைப்பாளர் கிருஷ்ணகுமார், பிரித்திவிராஜ், செயலாளர் வள்ளி, கீர்த்திகா, லட்சுமி ஆகியோர் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.

    அந்த மனுவில் புரட்சிகவிஞர் பாரதிதாசனின் மைந்தரும், முதுபெரும் தமிழறிஞருமான கவிஞர் மன்னர் மன்னன் பெயரை புதுவையில் உள்ள முக்கிய சாலைக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் அரசு சூட்ட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

    • தேசிய அளவிலான 24 மணி நேர ஹேக்கத்தான் போட்டி எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆப் டெ க்னாலஜியில் நடந்தது.
    • இந்த போட்டியில் ஆன்லைன் மூலம் பெ றப்பட்ட 400-க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகள் மற்றும் திட்டங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டது.

    புதுச்சேரி:

    தேசிய அளவிலான 24 மணி நேர ஹேக்கத்தான் போட்டி எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆப் டெ க்னாலஜியில் நடந்தது. இந்த போட்டியில் ஆன்லைன் மூலம் பெ றப்பட்ட 400-க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகள் மற்றும் திட்டங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டது. அதில்

    தேர்வு செய்யப்பட்ட 50 குழுக்களுக்கு 24 மணி நேரத்தில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற விதிமுறையின் அடிப்படையில் இறுதி சுற்றுக்கு 6 குழுக்கள்

    தேர்வு செய்யப்பட்டன 15 நிபுணர்கள் குழுவினர் சிறந்த திட்டங்களையும், கண்டுபிடிப்புகளையும் சமர்ப்பித்த மாணவர்களை தேர்வு செய்தனர்.

    இதில் மணக்குள விநாயகர் என்ஜினீயர் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் வணிக அமைப்புகள் துறை யில் 2-ம் ஆண்டு பயிலும் மாணவர் சுபாஷ்ராஜ் 2-ம் இடம் பிடித்தார். இவருக்கு ரூ.50 ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.

    சாதனை படைத்த மாணவருக்கு கல்லூரி வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது. இதில் மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவரும், மேலாண் இயக்குனருமான தனசேகரன், துணை தலைவர் சுகுமாரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வர் வெ ங்கடாசலபதி, பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், அகாடமி டீன்கள் அன்புமலர், அறிவழகர், சி.எஸ்.பி.எஸ். துறை தலைவர் தனபாக்கியம், தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், ஆராய்ச்சி மற்றும்

    மேம்பாட்டுதுறையின் டீன் வேல்முருகன், வேலை வாய்ப்பு துறை அதிகாரி கைலாசம் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர் சுபாஷ்ராஜை பாராட்டினர்.

    • வங்கி மேலாளர் பேசுவது போல் நடித்து கூலித்தொழிலாளியிடம் நூதன முறையில் ரூ.1 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
    • மேட்டுப்பாளையம் போலீசில் கூலித்தொழிலாளி அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை குரும்பாபேட் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 44). கூலித்தொழிலாளி. இவரது செல்போன் எண்ணுக்கு தேசிய மாயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து மானேஜர் பேசுவதாக ஒருவர் கூறினார்.

    அவர், ஏ.டி.எம். கார்டு காலாவதியாகி விட்டதாகவும், அதை புதுப்பிக்க அண்ணாதுரை செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. வரும். அதை தெரிவிக்கும் படியும் கூறியுள்ளார்.

    அதை நம்பி அண்ணாதுரை அவரது செல்போன் எண்ணுக்கு பலமுறை வந்த ஓ.டி.பி.யை அந்த நபரிடம் கூறினார்.

    அடுத்தடுத்து அவரது வங்கி கணக்கில் இருந்து மொத்தம் ரூ.96 ஆயிரத்து 250 எடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அண்ணாதுரை, தனது வங்கிகணக்கில் இருந்து மோசடியாக பணம் எடுத்ததை அறிந்தார்.

    இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் அண்ணாதுரை அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து கடிதம் அளித்தார்.
    • ஆட்டோ பெர்மிட்டை புதுப்பிக்க உரிமையாளர்கள் ஆட்டோ ஓட்டுநரிடம் அதிக பணம் கேட்டு தொந்தரவு கொடுத்து வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து கடிதம் அளித்தார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டோ ஒட்டும் தொழிலாளர்களுக்கு பெர்மிட் வழங்கப்பட்டது. பிறகு ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்கப்படவில்லை. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆட்டோ பெர்மிட் கிடைக்காமல் மிகுந்த சிரமத்துடன் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள்.

    ஆட்டோ பெர்மிட்டை புதுப்பிக்க உரிமையாளர்கள் ஆட்டோ ஓட்டுநரிடம் அதிக பணம் கேட்டு தொந்தரவு கொடுத்து வருகிறார்கள். ஆண்டுக்கு ஒரு முறை ஆட்டோவை புதுப்பிக்கும் போது ஏற்படும் கால தாமதத்திற்கு தினசரி ரூ.50அபராதம் விதிக்கின்றனர்.

    ஆட்டோ எப்.சி. எடுக்கும் போது 2 மாத காலம் அபராதம் இல்லாத அனுமதி வழங்க வேண்டும்.

    முதல்-அமைச்சர் உண்மை நிலைய உணர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக வழங்கப்படாத ஆட்டோ பெர்மிட்டை, தற்போது வழங்கி ஆட்டோ ஓட்டுநர்களின் துயர் துடைக்க வேண்டும்

    இவ்வாறு அன்பழகன் கடிதத்தில் கூறியுள்ளார்.

    • ஒரு நாட்டில் அல்லது மாநிலத்தில் விவசாயிகள் சேற்றில் கால் வைக்கவில்லை ன்றால் நாம் அனைவரும் சோற்றில் கை வைக்க முடியாது என்ற நிலைபாடே உள்ளது.
    • எனவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மக்கள் நலனை உயர்வாக நினைத்து செயல்படும் புதுவை அரசு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.ம.மு.க. வடக்கு மாநில ஆலோசனை கூட்டம் மாநில செயலாளர் சேகர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அ.ம.மு.க. வடக்கு மாநில இணை செயலாளர் லாவண்யா பேசியதாவது:-

    ஒரு நாட்டில் அல்லது மாநிலத்தில் விவசாயிகள் சேற்றில் கால் வைக்கவில்லை ன்றால் நாம் அனைவரும் சோற்றில் கை வைக்க முடியாது என்ற நிலைபாடே உள்ளது.

    இவ்வாறு இருக்கையில் விவசாயிகள் மற்றும் ஏழை எளிய மக்களின் அன்றாட வாழ்வாதாரம் இழக்கும் தருணத்தில் தற்போது புதுவையில் தொடர் மழை பெய்து வருகிறது.

    இதனால் நடவு செய்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகி கொண்டு இருக்கின்றன.

    எனவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மக்கள் நலனை உயர்வாக நினைத்து செயல்படும் புதுவை அரசு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மங்கலம் தொகுதி ஆச்சார்யாபுரம் அன்புநகர், மங்கலம் உள்ளிட் பகுதிகளில் சரிவர குடிநீர் வரவில்லை எனவும், அசுத்தம் கலந்த குடிநீர் வருகிறது எனவும் அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான தேனீ.ஜெயக்குமாரிடம் கோரிக்கை விடுத்தனர்.
    • வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்க ஏற்பாடு செய்தார்.

    புதுச்சேரி:

    மங்கலம் தொகுதி ஆச்சார்யாபுரம் அன்புநகர், மங்கலம் உள்ளிட் பகுதிகளில் சரிவர குடிநீர் வரவில்லை எனவும், அசுத்தம் கலந்த குடிநீர் வருகிறது எனவும் அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான தேனீ.ஜெயக்குமாரிடம் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ரூ.22 லட்சம் செலவில் அப்பகுதிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்க ஏற்பாடு செய்தார்.

    இதற்காகான பணி தொடக்க விழா நடந்தது. அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம், இளநிலைபொறியாளர் ரங்கமன்னார் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ஆன்லைன் சூதாட்டத்திற்காக பல்வேறு இடங்களில் கடனாக பணத்தை வாங்கியிருந்தார்.
    • தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    திருக்கனூர் அருகே சோம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார்.

    இவர் நகரப் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் சமையல் வல்லுனராக 5 வருடங்களாக பணியாற்றி வந்தார். இவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ஆன்லைன் சூதாட்டத்திற்காக பல்வேறு இடங்களில் கடனாக பணத்தை வாங்கியிருந்தார். ஆனால் அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் திண்டாடினார். அது மட்டுமில்லாமல் அதனை ஈடு செய்வதற்காக ஆன்லைன் ஆப் மூலமும் கடனை பெற்றுள்ளார்.

    இதனால் கடும் நெருக்கடிக்கு உள்ளான அவர் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில் புதுவை மீலாது வீதியில் அவர் தங்கியிருந்த விடுதியில் ஆடியோ பதிவிட்டு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அந்த ஆடியோவில், சில மாதங்களுக்கு முன்பு வெளிநாடு சென்று வேலை பார்த்து கடனை அடைத்து விடலாம் என நினைத்தேன். அங்கும் சரியான வேலை கிடைக்காததால் மீண்டும் திரும்பி வந்து, ஏற்கனவே வேலை செய்த ஒட்டலில் வேலை செய்தேன். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக ரூ.50 ஆயிரம் ஆன்லைன் விளையாட்டில் இழந்துள்ளேன் என குறிப்பிட்டு தற்கொலை செய்துள்ளார்.

    ஒதியஞ்சாலை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விஸ்வ இந்து பரிஷத்தில் இணைத்துக்கொள்ள பொதுமக்களுக்கு அகில இந்திய விஸ்வ இந்து பரிஷத்தின் பொதுச்செயலாளர் மிலிந்த் பரண்டே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • நிகழ்ச்சிக்கு நகர மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    விஸ்வ இந்து பரிஷத்தில் இணைத்துக்கொள்ள பொதுமக்களுக்கு அகில இந்திய விஸ்வ இந்து பரிஷத்தின் பொதுச்செயலாளர் மிலிந்த் பரண்டே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    அதன்படி நாடு முழுவதும் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ஆதரவாளர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமான இந்துக்களை இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    புதுவையில் 8 ஆயிரம் பேர் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா புதுவை ஈஸ்வன் கோவில் அருகே நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். புதுவை மாநில தலைவர் ரவிக்குமார் மற்றும் மாநில செயலாளர் ரவிவர்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில மேலிட பொறுப்பாளர் வேல்முருகன் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் துணைத்தலைவர் இளங்கோ, இணை செயலாளர் தினகரன், பொருளாளர் கோவிந்தன், பஜ்ரங்தள் பொறுப்பாளர் சதீஷ், சம்பர்க் பிரமுகர் கார்த்திக்ராஜா, துர்கா வாகினி பொறுப்பாளர் சரஸ்வதி, இணை பொறுப்பா ளர் கோமலவள்ளி, மத மாற்ற தடுப்பு பிரிவு பொறுப்பாளர் சக்தி, கோரக்‌ஷா பொறுப்பாளர் சரவணக்குமார், புனித யாத்திரைகள் பொறுப்பாளர் ஜவகர் உள்பட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி, வில்லியனூர் திருக்கா மீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.
    • 108 குட பால் அபிஷேகம் ஆகியவற்றில் அமைச்சர் நமச்சிவாயம் தனது மனைவி வசந்தியுடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

    புதுச்சேரி:

    ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி, வில்லியனூர் திருக்கா மீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இதனையொட்டி, கோவிலில் நடந்த கோ பூஜை, 108 குட பால் அபிஷேகம் ஆகியவற்றில் அமைச்சர் நமச்சிவாயம் தனது மனைவி வசந்தியுடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

    தொடர்ந்து கோவில் பிரகாரத்தில் அமைச்சர் நமச்சிவாயம் பக்தர்களுக்கு அன்னதானமும், 500. பெண்களுக்கு சேலையும் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அதிகாரி திருவரசன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ஏகாம்பரம், தேவராசு, ஜெயமூர்த்தி, ராமதாஸ், ரமேஷ், பழனி, கதிரவன் காட்டேரிக்குப்பம் அன்பரசன், வைஷ்ணவி தேவி, ஐடியல் முகுந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×