என் மலர்
புதுச்சேரி
- புதுவை லாஸ்பேட்டை யில் உள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் 2022-23-ம் ஆண்டுக்கான கலை மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
- இக்கண்காட்சியினை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கண் வியந்து மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட்டை யில் உள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் 2022-23-ம் ஆண்டுக்கான கலை மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. அறிவியல் கண்காட்சியினை பள்ளியின் தாளாளரும், எம்.பி.யுமான செல்வகணபதி தொடங்கி வைத்தார். பள்ளியின் முதன்மை முதல்வர் பத்மா குத்துவிளக்கேற்றி வைத்தார். இணை முதல்வர் கீதா சிறப்புரையாற்றினார்.
பள்ளி முதல்வர் மீனாட்சி மேற்பார்வையில் நடைபெற்ற இந்த கண்காட்சியில் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர். இதில் சுற்று சூழல் பாதுகாப்பு அரங்கம், எதிர்கால இந்தியா அரங்கம், விண்வெளியில் புரட்சி அரங்கம், மாயாஜாலம் நிறைந்த விளையாட்டு அரங்கம், கணிதம் மற்றும் இலக்கிய அரங்கம், கண்ணை கவரும் ஓவிய அரங்கம் என பல அரங்குகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.
இக்கண்காட்சியினை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கண் வியந்து மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
- புதுவை அரசின் காவல்துறையில் சப்-இன்பெக்டர் பணிக்கு தேர்வு செய்வதற்கு அறிவிப்பு அரசு சார்பில் வெளியிட ப்பட்டுள்ளது.
- அப்படி இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், எங்கள் கட்சித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்று பா.ம.க. போராட்டத்தில் இறங்கும்.
புதுச்சேரி:
புதுவை மாநில பா.ம.க அமைப்பாளர் கணபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசின் காவல்துறையில் சப்-இன்பெக்டர் பணிக்கு தேர்வு செய்வதற்கு அறிவிப்பு அரசு சார்பில் வெளியிட ப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக் கான இட ஒதுக்கீடு இல்லாமல் இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. இதே பதவிக்கு கடந்த 2010-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டர் பணி நியமனத்தில் இதே பதவிக்கு எம்.பி.சி. இட ஒதுக்கீடு விதிமுறை பின்பற்றி நியமனம் செய்யப்பட்டது.
ஆனால் இன்றைய அறிவிப்பில் அத்தகைய எம்.பி.சி. இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது ஜனநாயக படு கொலையாகும்.
2012-ம் ஆண்டு அரசாணை யை காரணம் காட்டிபி கிரேடு இட ஒதுக்கீடு இல்லை என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
பெரும்பான்மை சமுதாய மக்கள் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்துவிட்டு இப்படி வஞ்சிக்கபடுவது ஏற்க முடியாது.
உடனடியாக அமைச்சர வையை கூட்டி 2012 அரசாணையை ரத்து செய்துவிட்டு மீண்டும் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு (எம்.பி.சி.) இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
அப்படி இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், எங்கள் கட்சித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்று பா.ம.க. போராட்டத்தில் இறங்கும்.
தேவைபட்டால் நீதிமன்றத்தை அணுகி தடையான பெறவும் தயங்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- புதுவைக்கு புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
- கண்டெய்னர் லாரி மற்றும் இரு சக்கர வாகனத்தில் 8 டன் புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.
புதுச்சேரி:
புதுவையில் சமீப காலமாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. சென்னை ஆந்திரா-ஒடிசா மாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தி வரப்பட்டு புதுவையில் இளைஞர்கள், கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்று வருகிறார்கள். போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி போதை பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள். இது தொடர்பாக ஒரு சிலரை கைது செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் 2 கண்டெய்னர் லாரி மற்றும் 2 இருசக்கர வாகனத்தில் புதுவைக்கு புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதைதொடர்ந்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுவைக்கு கண்டெய்னர் மற்றும் இரு சக்கர வாகனத்தில் புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
கண்டெய்னர் லாரி மற்றும் இரு சக்கர வாகனத்தில் 8 டன் புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.1 கோடியாகும். அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- புதுவை பல்கலைக்கழகத்தில் 30 ஆண்டுக்கு முன் பி.எஸ்.சி. பட்டப்படிப்பு தொடங்கப்பட்டது.
- இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு உடற்கல்வி ஆசிரியர் சிவராஜ் சீருடை தயார் செய்து வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவை பல்கலைக்கழகத்தில் 30 ஆண்டுக்கு முன் பி.எஸ்.சி. பட்டப்படிப்பு தொடங்கப்பட்டது. இதில் 2-வது பேச் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நோணாங்குப்பத்தில் உள்ள ஒரு ஓட்டலில் உடற்கல்வி இயக்குனர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட உடற்கல்வி பல்கலை கழக முன்னாள் துணை வேந்தர் வைத்தியநாதன், புதுவை பல்கலைக் கழக உடற்கல்வி துறை பேராசிரியர்கள் சக்திஞானவேல், சுல்தானா, வசந்தி, சந்திரசேகரன் ஆகியோரை சீனியர் ஹாக்கி பயிற்சியாளர் மூர்த்தி வரவேற்றார்.
இந்த சந்திப்பு நிகழ்ச்சியை டாக்டர் பழனி தொகுத்து வழங்கினார். துணை இயக்குனர் (விளையாட்டுதுறை) சிவகுமார் சிறப்பு ரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு உடற்கல்வி ஆசிரியர் சிவராஜ் சீருடை தயார் செய்து வழங்கினார்.
இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் நகைச்சுவை பேச்சுகளாலும் கலை நிகழ்ச்சிகளாலும் ஒவ்வொருவரும் தனது கருத்துகளை பரிமாற்றம் செய்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி விரிவுரையாளர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களான அமல்ராஜ் ஜார்ஜ், பெருமாள் சீனுவாசன், ஜவஹர் பத்மநாபன், திமோத், பிரகாஷ், ரஷித் அகமது, மணி, நாராயணசாமி மற்றும் வக்கீல் ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
முடிவில் சிவகுமார் (பிரான்ஸ்) நன்றி கூறினார்.
- உலக கிக் பாக்சிங் போட்டியில் பதக்கம் வென்று சாதனை புரிந்த புதுவை வீரர்களுக்கு ரெயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- இந்தியா சார்பில் பங்கேற்ற புதுவையில் காவல் துறையில் போலீஸ் ஏட்டாக பணிபுரியும் மோகன் சீனியர் 84 கிலோ எடைப் பிரிவு மற்றும் ஓபன் ஹெவி வெயிட் பிரிவில் 2 தங்கப்பதக்கம் வென்றார்.
புதுச்சேரி:
உலக கிக் பாக்சிங் போட்டியில் பதக்கம் வென்று சாதனை புரிந்த புதுவை வீரர்களுக்கு ரெயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சர்வதேச கிக் பாக்சிங் பெடரேஷன் மற்றும் இந்திய கிக் பாக்சிங் பெடரேஷன் சார்பில், டெல்லியில் உள்ள சர்வதேச உள்விளையாட்டரங்கில் கடந்த 2-ம்தேதி முதல் 6-ம் தேதிவரை உலக கிக் பாக்சிங் போட்டி நடந்தது.
இப்போட்டியில் 33 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில், இந்தியா சார்பில் தகுதி பெற்ற வீரர்கள், பயிற்சியாளரான புதுவை மாநில கிக் பாக்சிங் சங்க தலைவர் இளகோவன் தலைமையில் பங்கேற்றனர்.
இந்தியா சார்பில் பங்கேற்ற புதுவையில் காவல் துறையில் போலீஸ் ஏட்டாக பணிபுரியும் மோகன் சீனியர் 84 கிலோ எடைப் பிரிவு மற்றும் ஓபன் ஹெவி வெயிட் பிரிவில் 2 தங்கப்பதக்கம் வென்றார்.
சப்-ஜூனியர் 27 கிலோ எடை பிரிவில் பவித்ரன், பெண்கள் ஜூனியர் பிரிவில் 63 கிலோ எடை பிரிவில் ஜனனி, 73 கிலோ எடை பிரிவில் கவுசல்யா, சப் ஜூனியர் பெண்கள் 53 கிலோ எடைப் பிரிவில் சங்கவி ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றார்.
உலக கிக் பாக்சிங் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று பதக்கம் வென்ற புதுவை வீரர்கள் டெல்லியில் இருந்து ரெயில் மூலம் நேற்று புதுவைக்கு வந்தனர்.
அவர்களுக்கு, புதுவை மாநில ஒருங்கிணைந்த விளையாட்டு வீரர்கள் நலச் சங்க சேர்மன் ஆளவந்தார், புதுவை மாநிலகிக் பாக்சிங் சங்க தலைவர் இளங்கோவன், சங்க நிர்வாகிகள் அமிர்தராஜ், அய்யனார், விநாயகம், அபிலாஷ், பிரவீன்குமார், செப ஸ்தியன், சந்தோஷ்குமார், ராகுல் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- உப்பளம் தொகுதி திப்புராயப்பேட்டை ஆரோக்கிய மாதா கோவில் தெருவில் பாதாள வடிக்கால் கழிவு நீருடன் மழை நீர் கலந்து நீச்சல் குளம் போல் காட்சியளிக்கும் கழிவு நீரில் அப்பகுதி குழந்தைகள் குளித்து வரும் சுகாதார குறைவு ஏற்பட்டது.
- பாதாள வடிகால் மாதா கோவிலில் இருந்து தெப்பக்குளத்தில் இணைகிறது.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதி திப்புராயப்பேட்டை ஆரோக்கிய மாதா கோவில் தெருவில் பாதாள வடிக்கால் கழிவு நீருடன் மழை நீர் கலந்து நீச்சல் குளம் போல் காட்சியளிக்கும் கழிவு நீரில் அப்பகுதி குழந்தைகள் குளித்து வரும் சுகாதார குறைவு ஏற்பட்டது.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.விடம் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு அவர் நேரில் சென்று பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
இது குறித்து பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் வைத்தியநாதனிடம் தெரிவித்துவிட்டு இளநிலை பொறியாளருடன் அப்பகுதி முழுவதும் ஆய்வு மேற்கொண்டார்.
பாதாள வடிகால் மாதா கோவிலில் இருந்து தெப்பக்குளத்தில் இணைகிறது. அதனை அதற்கு மாறாக மாதா கோவிலில் இருந்து லெசார் கோவிலில் இணைத்து விட்டால் வடிகால் மழை நீரில் கலந்து தேங்கி நிற்காது என்று ஆய்வின் போது தெரிந்து கொண்டனர்.
இப்பணியை விரைவாக முடிக்குமாறு அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பொதுப்பணித்துறை அதி காரியிடம் அறிவுறுத்தினார்.
மேலும் ஸ்மார்ட் சிட்டி மூலம் எல்-வடிவ வடிகாலை அப்பகுதியில் அமைத்து கொடுப்பதாக பொதுமக்களிடம் தெரிவித்தார்.
அப்பணி நகராட்சி மூலம் மேற்கொள்ளப்படும். என்று தெரிவித்தார் இது குறித்து உதவி பொறியாளர் பிரபாகரனுடன் ஆலோ சனை மேற்கொண்டார்.
- மதகடிப்பட்டு அருகே உள்ள கலிதீர்த்தாள் குப்பம் அரசு தொடக்கப் பள்ளியில் மாணவ-மாணவிகளின் அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது.
- இதில் பள்ளி மாணவிகள்-மாணவர்கள் தங்களின் ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் முயற்சியோடு தங்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்காட்சியில் வைத்திருந்தனர்.
புதுச்சேரி:
மதகடிப்பட்டு அருகே உள்ள கலிதீர்த்தாள் குப்பம் அரசு தொடக்கப் பள்ளியில் மாணவ-மாணவிகளின் அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஐந்தாம் வட்ட பள்ளி துணை ஆய்வாளர் ராபர்ட் கென்னடி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் நவமணி அனைவரையும் வரவேற்று வாழ்த்துரை வழங்கினார். பள்ளியின் ஆசிரியர் சசிரேகா தொகுப்புரை வழங்கினார். பி.எஸ். பாளையம் பாவேந்தர் பாரதிதாசன் மேல்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் செல்வம் கலந்துகொண்டு அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
இதில் பள்ளி மாணவிகள்-மாணவர்கள் தங்களின் ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் முயற்சியோடு தங்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்காட்சியில் வைத்திருந்தனர்.
இந்த கண்காட்சியை பள்ளி மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் பொதுமக்கள் மற்றும் மாற்றுப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் பாராட்டினர்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் சீனிவாசன், கலைவாணி, சுப்பிரமணியன், மாதவி, இந்திரா, பிரியதர்ஷினி, சுகந்தி, சவுமியா, சுகன்யா, அருணா, கலையரசி, கிருஷ்ணகுமாரி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
- ரூ.5 லட்சம் கடன் தருவதாக கூறி டிரைவரிடம் ரூ.98 ஆயிரம் அபேஸ் செய்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
பாகூர் அருகே செலிமேடு டி.என்.பாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் சீத்தாராமன். இவர் மினிவேன் ஓட்டி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது செல்போன் நம்பரில் ஒருவர் பேசினார்.
ஒரு தனியார் நிதி நிறுவனம் பெயரை சொல்லி பேசிய ஒரு வாலிபர் தான் வேலை பார்க்கும் நிதி நிறுவனத்தில் இருந்து ரூ.5 லட்சம் கடன் தருவதாகவும், அதற்கு ரூ.5 ஆயிரத்து 500 கட்டினால் கடன் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
அதன்படி சீத்தாராமன் தனது வங்கி கணக்கில் இருந்து கூகுல் பே மூலம் ரூ.5 ஆயிரத்து 500 அனுப்பி வைத்தார். பின்னர் மீண்டும் ரூ.10 ஆயிரம் செலுத்துமாறு அந்த வாலிபர் கூறியதால் அந்த பணத்தையும் சீத்தாராமன் அனுப்பி வைத்தார்.
அதன்பிறகு அந்த வாலிபர் நீங்கள் செலுத்தும் தொகை மீண்டும் திருப்பி தரப்படும் என்று கூறியதின் அடிப்படையில் சீத்தாராமன் தொடர்ந்து ரூ.98 ஆயிரம் வரை கூகுல் பே மூலம் அனுப்பி வைத்தார்.
அதன் பிறகு அந்த வாலிபர் போனில் பேசவில்லை. இதனால் சந்தேகமடைந்த சீத்தாராமன் அந்த வாலிபரின் செல்போனில் தொடர்ந்து தொடர்பு கொண்டார். ஆனால் அவர் போனை எடுத்து பேசவில்லை.
இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த சீத்தாராமன் தற்போது மோசடி குறித்து (சைபர் கிரைம்) போலீஸ் நிலையங்களிலும் புகார் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து பாகூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- புதுவையில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சிறப்பாக செயல்பட்டு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
- மேலும் புதுவை மாநிலத்தில் எங்களுடைய அரசு விரைவில் 100 அடி ரோடு ரெயில்வே சுரங்கம் இணைப்பு பாதை, சப்வே அமைக்கும் பணியினை விரைவில் தொடங்க உள்ளது.
புதுச்சேரி:
புதுவை பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ. அசோக் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-
புதுவையில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சிறப்பாக செயல்பட்டு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசும் புதுவை மாநில வளர்ச்சிக்கென்று தனி கவனம் செலுத்தி பாரத பிரதமர் கூறிய பெஸ்ட் புதுவை உருவாக்கி வருகின்றது.
நான் எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்றதிலிருந்து இன்று வரை மக்கள் பணிகளை எவ்வாறு செய்கிறேன் என்பது முதலியார்பேட்டை தொகுதியைச் சேர்ந்த மக்களுக்கு நன்றாக தெரியும். என்னுடைய மேம்பாட்டு நிதியிலிருந்து முதலியார்பேட்டை தொகுதியில் கிழக்கு வாசல் நகரில் 3-வது மற்றும் 4-வது தெருவிற்கு சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைத்தல்.
ஜான்பால் நகர் விரிவாக்கத்திற்கு சாலை மற்றும் கழிவு நீர் வாய்க்கால் அமைத்தல், ஜோதி நகர் பிரதான சாலையில் கழிவு நீர் வாய்க்கால் அமைத்தல் போன்ற பணிகளுக்கு நிதி ஒதுக்கி வேலைகள் நடைபெற்று வருகின்றன.
அதோடு என்னுடைய வேண்டுகோளை ஏற்று வெங்கடேசன் எம்.எல்.எ நிதியிலிருந்து முதலி யார்பேட்டை தியாகமுதலியார் நகரில் பிரதான சாலை அமைக்கும் பணி நடை பெற்று க்கொண்டு வருகிறது.
மேலும் புதுவை மாநிலத்தில் எங்களுடைய அரசு விரைவில் 100 அடி ரோடு ரெயில்வே சுரங்கம் இணைப்பு பாதை, சப்வே அமைக்கும் பணியினை விரைவில் தொடங்க உள்ளது. அரும்பார்த்தபுரம் புறவழிச் சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.
நான் மக்கள நலன் சார்ந்த பணிகள் செய்வதை பொறுக்க முடியாமல் தடுக்கும் நோக்கோடு தி.மு.க
எம்.எல்.ஏ. சம்பத் அறிக்கை வெளி யிட்டுள்ளார். எங்களுக்கு விளம்பரம் தேட வேண்டிய அவசியமில்லை. நாங்கள் மக்களை ஏமாற்றவில்லை, யார் ஏமாற்றுகிறார்கள் என்பது புதுவை மக்களுக்கு நன்றாக தெரியும். பா.ஜனதாவினருக்கு மக்கள் பணிகள் செய்வதற்கு சம்பத் எம்.எல்.ஏ. அறிவுரை கூறுவதற்கு எவ்வித அவசியமும், அருகதையும் இல்லை. என்னுடைய மக்கள் பணி தொடரும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- திருக்கனூர் கடை வீதியில் ஒருபுறம் புதுவை பகுதியும், மறுபுறம் தமிழகப் பகுதியான சித்தலம்பட்டு கடை வீதியும் உள்ளது.
- அதன் பின்பு கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்றது.
புதுச்சேரி:
திருக்கனூர் கடை வீதியில் ஒருபுறம் புதுவை பகுதியும், மறுபுறம் தமிழகப் பகுதியான சித்தலம்பட்டு கடை வீதியும் உள்ளது.
3 மாதங்களுக்கு முன்பு தமிழகப் பகுதியான சித்தலம்பட்டு கடைவீதியில் தமிழக அரசின் நெடுஞ்சாலை துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. அதன் பின்பு கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்றது.
புதிதாக அமைக்கப்படும் கழிவு நீர் வாய்க்கால் சித்தலம்பட்டு, தி. புதுக்குப்பம் வழியாக திருமங்கலம் பாதை வரை செல்கிறது. வாய்க்காலில் செல்லக்கூடிய கழிவுநீர் தி.புதுக்குப்பம் பொம்மிரெட்டி குளத்தில் சென்று சேரும் என கூறப்பட்டது.
இதனால் தி.புதுக்குப்பம் கிராம பொதுமக்கள் தங்கள் ஊர் குளத்தில் கழிவுநீர் கலந்தால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது.
சுமார் 30-க்கும் மேற்பட்ட கடைகளின் எதிரே ஆளுயர அளவிற்கு பள்ளங்கள் தோண்டப்பட்டு கம்பிகள் கட்டப்பட்டு கால்வாய் அமைக்காமல் பாதியில் நிறுத்தப்பட்டதால் 3 மாதங்களாக கடை வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் பெரிய பள்ளத்தில் தவறி விழுந்து அடிபட்டதாலும், கடைகளில் வியாபாரம் இன்றியும் கடைக்காரர்கள் பாதிக்கப்பட்டனர்.
இதனால் இன்று காலை 30-க்கும் மேற்பட்ட சித்தலம்பட்டு கடை வியாபாரிகள் தங்கள் கடைகளை அடைத்து திடீரென ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் திருக்கனூரில் இருந்து புதுவை செல்லக்கூடிய பஸ் போக்குவரத்து ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கண்டமங்கலம் போலீசாரும் தமிழக நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும் விரைந்து வந்து வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இதில் உடனடியாக கால்வாய் அமைக்கும் பணியினை விரைந்து செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டனர் இதனால் திருக்கனூர் கடைவீதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் எலும்பு முறிவு குறித்த சிறப்பு கருத்தரங்கு கல்லூரி சாய் அரங்கில் நடந்தது.
- இந்த நிகழ்ச்சிக்கு கல்வி குழுமத்தின் முதன்மை இயக்க அதிகாரி டாக்டர் வித்யா தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் எலும்பு முறிவு குறித்த சிறப்பு கருத்தரங்கு கல்லூரி சாய் அரங்கில் நடந்தது. வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் தலைவர் ராமச் சந்திரன் வழிகாட்டுதலின்
பேரில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு கல்வி குழுமத்தின் முதன்மை இயக்க அதிகாரி டாக்டர் வித்யா தலைமை தாங்கினார். டீன்கள் ரத்தினசாமி, பிஜி மகாதேவன், மருத்துவ கண்காணிப்பாளர்கள் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர் விஜயராகவன், ஓயசிஸ் தலைவர் சீனிவாசரெட்டி, அனீன் குட்டி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
இந்த கருத்தரங்கில் தென்னிந்திய அளவில் உள்ள தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நவீன எலும்பு முறிவு சிகிச்சை முறைகள் குறித்து தங்களுடைய கருத்துகளையும், அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மருத்துவமனை முதுநிலை டாக்டர் குலாம் மோகதீன் தலைமையில் எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவ நிபுணர் பாலசுப்ரமணியன், மருத்துவ ஆராய்ச்சி குழு தலைவர்கள் கார்த்திக் ஆனந்த், மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.
- பாதாள வடிகால் வாய்க்கால் அமைத்து கொடுக்கும் படி பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.
- பாதாள வடிகால் வாய்க்கால் அமைத்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட திப்புராயப்பேட்டையில் பாதாள வடிகால் வாய்க்கால் அமைத்து கொடுக்கும் படி பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.
அதனை தொடர்ந்து கென்னடி எம்.எல்.ஏ. பொதுப்பணித்துறை அதிகாரிகளை அணுகி, விடுபட்ட லேசர் கோவில் வீதியில் பாதாள வடிகால் வாய்க்கால் அமைத்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்.
அதன்படி அப்பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் பாதாள வடிகால் வாய்க்கால் அமைப்பத ற்கான தொடக்கவிழா நடந்தது. இதில் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இதில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் வைத்தியநாதன், இளநிலை பொறியாளர் சங்கர், தொகுதி தி.மு.க. செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேல் இளைஞர் அணி ராஜி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.






