என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மக்கள் பணி செய்ய அறிவுரை தேவையில்லை-அசோக் பாபு எம்.எல்.ஏ. அறிக்கை
    X

    கோப்பு படம்.

    மக்கள் பணி செய்ய அறிவுரை தேவையில்லை-அசோக் பாபு எம்.எல்.ஏ. அறிக்கை

    • புதுவையில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சிறப்பாக செயல்பட்டு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
    • மேலும் புதுவை மாநிலத்தில் எங்களுடைய அரசு விரைவில் 100 அடி ரோடு ரெயில்வே சுரங்கம் இணைப்பு பாதை, சப்வே அமைக்கும் பணியினை விரைவில் தொடங்க உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ. அசோக் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    புதுவையில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சிறப்பாக செயல்பட்டு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசும் புதுவை மாநில வளர்ச்சிக்கென்று தனி கவனம் செலுத்தி பாரத பிரதமர் கூறிய பெஸ்ட் புதுவை உருவாக்கி வருகின்றது.

    நான் எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்றதிலிருந்து இன்று வரை மக்கள் பணிகளை எவ்வாறு செய்கிறேன் என்பது முதலியார்பேட்டை தொகுதியைச் சேர்ந்த மக்களுக்கு நன்றாக தெரியும். என்னுடைய மேம்பாட்டு நிதியிலிருந்து முதலியார்பேட்டை தொகுதியில் கிழக்கு வாசல் நகரில் 3-வது மற்றும் 4-வது தெருவிற்கு சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைத்தல்.

    ஜான்பால் நகர் விரிவாக்கத்திற்கு சாலை மற்றும் கழிவு நீர் வாய்க்கால் அமைத்தல், ஜோதி நகர் பிரதான சாலையில் கழிவு நீர் வாய்க்கால் அமைத்தல் போன்ற பணிகளுக்கு நிதி ஒதுக்கி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

    அதோடு என்னுடைய வேண்டுகோளை ஏற்று வெங்கடேசன் எம்.எல்.எ நிதியிலிருந்து முதலி யார்பேட்டை தியாகமுதலியார் நகரில் பிரதான சாலை அமைக்கும் பணி நடை பெற்று க்கொண்டு வருகிறது.

    மேலும் புதுவை மாநிலத்தில் எங்களுடைய அரசு விரைவில் 100 அடி ரோடு ரெயில்வே சுரங்கம் இணைப்பு பாதை, சப்வே அமைக்கும் பணியினை விரைவில் தொடங்க உள்ளது. அரும்பார்த்தபுரம் புறவழிச் சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.

    நான் மக்கள நலன் சார்ந்த பணிகள் செய்வதை பொறுக்க முடியாமல் தடுக்கும் நோக்கோடு தி.மு.க

    எம்.எல்.ஏ. சம்பத் அறிக்கை வெளி யிட்டுள்ளார். எங்களுக்கு விளம்பரம் தேட வேண்டிய அவசியமில்லை. நாங்கள் மக்களை ஏமாற்றவில்லை, யார் ஏமாற்றுகிறார்கள் என்பது புதுவை மக்களுக்கு நன்றாக தெரியும். பா.ஜனதாவினருக்கு மக்கள் பணிகள் செய்வதற்கு சம்பத் எம்.எல்.ஏ. அறிவுரை கூறுவதற்கு எவ்வித அவசியமும், அருகதையும் இல்லை. என்னுடைய மக்கள் பணி தொடரும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×