என் மலர்
புதுச்சேரி

அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரியில் எலும்பு முறிவு சிகிச்சை குறித்த கருத்தரங்கு நடந்த போது எடுத்தபடம்.
எலும்பு முறிவு சிகிச்சை குறித்த கருத்தரங்கு
- அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் எலும்பு முறிவு குறித்த சிறப்பு கருத்தரங்கு கல்லூரி சாய் அரங்கில் நடந்தது.
- இந்த நிகழ்ச்சிக்கு கல்வி குழுமத்தின் முதன்மை இயக்க அதிகாரி டாக்டர் வித்யா தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் எலும்பு முறிவு குறித்த சிறப்பு கருத்தரங்கு கல்லூரி சாய் அரங்கில் நடந்தது. வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் தலைவர் ராமச் சந்திரன் வழிகாட்டுதலின்
பேரில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு கல்வி குழுமத்தின் முதன்மை இயக்க அதிகாரி டாக்டர் வித்யா தலைமை தாங்கினார். டீன்கள் ரத்தினசாமி, பிஜி மகாதேவன், மருத்துவ கண்காணிப்பாளர்கள் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர் விஜயராகவன், ஓயசிஸ் தலைவர் சீனிவாசரெட்டி, அனீன் குட்டி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
இந்த கருத்தரங்கில் தென்னிந்திய அளவில் உள்ள தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நவீன எலும்பு முறிவு சிகிச்சை முறைகள் குறித்து தங்களுடைய கருத்துகளையும், அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மருத்துவமனை முதுநிலை டாக்டர் குலாம் மோகதீன் தலைமையில் எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவ நிபுணர் பாலசுப்ரமணியன், மருத்துவ ஆராய்ச்சி குழு தலைவர்கள் கார்த்திக் ஆனந்த், மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.






