என் மலர்
புதுச்சேரி

பள்ளிக்கு கல்வி உபகரண பொருட்களை சிவா எம்.எல்.ஏ. வழங்கிய காட்சி.
மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவில் தரம் இல்லை - சிவா எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
- மதிய உணவில் சாதம், மாணவர்களின் தொண்டையில் இறங்காத வகையில் பெரிது, பெரிதாக உள்ளது.
- மேலும் உணவில் ருசியும் இல்லை. இதை எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, ஆளும் கட்சி உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி:
தனியார் நிறுவன அறக்கட்டளை மூலம் வில்லியனூர் தொகுதியில் உள்ள சுல்தான்பேட்டை தொடக்கப்பள்ளி, உத்திரவாணி பேட் மற்றும் பெரிய பேட் தொடக்கப் பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர், பிரிண்டர், தண்ணீர் சுத்திகரிப்பு எந்திரம், 50 சேர், ஸ்பீக்கர், மைக், பீரோ உள்ளிட்ட பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமை தாங்கி பொருட்களை பள்ளி நிர்வாகத்தினரிடம் வழங்கி பேசியதாவது:-
மதிய உணவில் சாதம், மாணவர்களின் தொண்டையில் இறங்காத வகையில் பெரிது, பெரிதாக உள்ளது. மேலும் உணவில் ருசியும் இல்லை. இதை எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, ஆளும் கட்சி உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர்.
கடந்த 5 மாதங்களாக மாணவர்களுக்கு முட்டை வழங்கப்படவில்லை. மாணவர்களுக்கான முட்டையை யார் சாப்பிடுகின்றார்கள் என்றும் தெரியவில்லை. உடனடியாக மாணவர் உணவுப் பிரச்சினையை கல்வித்துறை சரி செய்ய வேண்டும்.
ஒரு கால கட்டம் வரை பொறுப்போம். சரி செய்ய வில்லையென்றால், தரமின்றி வழங்கப்படும் மாணவர்களுக்கான மதிய உணவுப் பிரச்சினையை பெரிய அளவில் கொண்டு செல்வோம்.
இவ்வாறு சிவா பேசினார்.






