என் மலர்
புதுச்சேரி
- புதுவை மாநில அனைத்து கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் கலெக்டர் வல்லவனை சந்தித்து மனு அளித்தனர்.
- புதுவையில் பால் கொள்முதல் விலை ரூ.32 ஆக உள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநில அனைத்து கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் கலெக்டர் வல்லவனை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் பால் கொள்முதல் விலை ரூ.32 ஆக உள்ளது. இந்த விலையை ரூ.10 உயர்த்தி வழங்க வேண்டும். அரசு வழங்கும் தீவன மானியத்தை உறுப்பினர்களின் வங்கி கணக்கில் ரொக்கமாக செலுத்த வேண்டும். பிரதம பால் உற்பத்தியாளர் சங்கங்களின் பால் பண பட்டுவாடாவை 15 நாட்களுக்கு ஒருமுறை தவறாமல் வழங்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வருகிற 27-ந் தேதிக்குள் நிறைவேற்றாவிட்டால் 28-ந் தேதி பாகூர், 29-ந் தேதி கரிக்கலாம்பாக்கம், 30-ந் தேதி வில்லியனூர் சப்-கலெக்டர் அலுவலகம் ஆகியவற்றில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
- லாஸ்பேட்டை தாகூர் அரசு கல்லூரியில் நாளை சனிக்கிழமை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
- இதில் தமிழகம், புதுவையில் உள்ள பிரபல நிறுவனகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
புதுச்சேரி:
உழவர்கரை நகராட்சி கமிஷனர் சுரேஷ்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
லாஸ்பேட்டை தாகூர் அரசு கல்லூரியில் நாளை சனிக்கிழமை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் தமிழகம், புதுவையில் உள்ள பிரபல நிறுவனகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
முகாமில் 10, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ. மெக்கானிக்கல்ஆட்டோ மொபைல், ஓட்டல் நிர்வாகம், நர்சிங், பயோ டெக்னாலஜி, பயோ கெமிஸ்ட்ரி , அப்ளைய்டு மைக்ரோ பயாலஜி, லைப் சயின்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி, பயோ மெடிக்கல், உளவியல், கணிதம், புள்ளியியல், ஆங்கிலம் பட்டப்படிப்பு முடித்த 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் பகேற்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- இந்திய தணிக்கை நாளையொட்டி புதுவை மாநில முதன்மை தணிக்கை மற்றும் கணக்காய்வு துறை சார்பில் தணிக்கை குறித்த விழிப்புணர்வு நடை பயணம் புதுவை கடற்கரை சாலையில் நடைபெற்றது.
- இந்த விழிப்புணர்வு நடை பயணத்தை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
இந்திய தணிக்கை நாளையொட்டி புதுவை மாநில முதன்மை தணிக்கை மற்றும் கணக்காய்வு துறை சார்பில் தணிக்கை குறித்த விழிப்புணர்வு நடை பயணம் புதுவை கடற்கரை சாலையில் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நடை பயணத்தை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் புதுவை பொது கணக்கு குழு தலைவரான கே.எஸ். பி.ரமேஷ் எம்.எல்.ஏ., முதன்மை கணக்காய்வு தலைவர் ஆனந்த், முதுநிலை கணக்காய்வு தலைவர் வர்ஷினி அருண் போலீஸ் டி.ஜி.பி. மற்றும் அதிகாரிகள் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
- புதுவை கலிதீர்த்தாள்குப்பம் மணக்குளவிநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை எக்ஸ்ளோகாம் நிறுவனம் சார்பில் பொறியியல், மேலாண்மை துறை மாணவ-மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடத்தியது.
- கல்லூரி முதல்வர்மலர்க்கண் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் அனைத்து துறை சார்ந்த வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை கலிதீர்த்தாள்குப்பம் மணக்குளவிநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை எக்ஸ்ளோகாம் நிறுவனம் சார்பில் பொறியியல், மேலாண்மை துறை மாணவ-மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடத்தியது.
இந்த முகாமிற்கு வருகை புரிந்த அந்நிறுவன மனிதவளதுறை மேலாளர் வெங்கட் மற்றும் விக்னேஷ், அந்நிறுவனத்தின் விவரங்கள், நிறுவனத்தில் வேலைசெய்வதற்கு உண்டான சூழல், எதிர்கால குறிக்கோள்கள், சம்பளம் பற்றிய அனைத்து விவரங்களையும் விளக்கி கூறினர்.
நிகழ்ச்சிக்கு மணக்குளவிநாயகர் கல்வி குழுமதலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர்சுகுமாறன், மற்றும் செயலாளர் டாக்டர்.நாராயணசாமிகேசவன் ஆகி யோர் தலைமைதாங்கினர்.
கல்லூரி முதல்வர்மலர்க்கண் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் அனைத்து துறை சார்ந்த வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில், எம்.ஐ.டி. கல்லூரி மற்றும் புதுவையை சுற்றி உள்ள 15 என்ஜினீயரிங் கல்லூரிகளில் இருந்து 2023-ம் ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை மாணவ-மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு 20 மாணவர்கள் வேலைவாய்ப்பை பெற்று பயன் அடைந்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்பு துறை அதிகாரி மு ஜெயக்குமார் செய்து இருந்தார்.
- அரியூர் வெங்கடேஸ்வரா கல்விக் குழுமத்தின் கீழ் இயங்கும் வெங்கடேஸ்வரா பார்மசி கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ ர்கள் அறிமுக விழா மற்றும் தொடக்க விழா நடைபெற்றது.
- இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக புதுவை அரசு செயலர் டாக்டர் அருண் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினார்.
புதுச்சேரி:
அரியூர் வெங்கடேஸ்வரா கல்விக் குழுமத்தின் கீழ் இயங்கும் வெங்கடேஸ்வரா பார்மசி கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ ர்கள் அறிமுக விழா மற்றும் துவக்க விழா நடைபெற்றது. அரியூர் ராமச்சந்திரா கல்வி அறக்கட்டளையின் தலைவர் ராமச்சந்திரன் வழி காட்டலின் படி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கல்வி குழுமத்தின் மேலாண் இயக்குனர் ராஜீவ்கிருஷ்ணா, முதன்மை இயக்க அதிகாரி டாக்டர்.வித்யா, பொது மேலாளர் சௌந்தர்ராஜன், டீன் துரைவேல், முதல்வர் சரோஜினி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து விழாவினை தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக புதுவை அரசு செயலர் டாக்டர் அருண் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினார்.
புதுவை மதர்தெரேசா பார்மசி கல்லூரியின் முதல்வர் டாக்டர்.கோபால், சென்னை ரெகுலேட்டரி கார்ப்பரேஷன் டேப்லெட்ஸ் ஆப் இந்தியா என்ற நிறுவனத்தின் துணைத் தலைவர் டாக்டர்.சதீஷ் ஆகியோர் முதலாம் ஆண்டு மாணவர்களை பாராட்டி பேசினார்கள். வெங்கடேஸ்வரா பார்மசி கல்லூரி இணை பேராசிரியர் நிர்மலா அனைவரையும் வரவேற்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் முதலாம் ஆண்டு மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் இணை பேராசிரியர் சென்னியப்பன் நன்றி கூறினார்.
- புதுவை செல்லப் பொருமாள்பேட்டை-லாஸ்பேட்டையில், உள்ள விவேகானந்தா பள்ளியில் 2022-2023-ம் ஆண்டிற்கான கலை மற்றும் அறிவியல்- கைவினை பொருட்கள் கண்காட்சி தொடங்கியது.
- அறிவியல் மட்டுமின்றி மற்ற பாடங்களான தமிழ், கணிதம், சமூக அறிவியல், ஆங்கில படைப்புகளையும் மாணவ-மாணவியர்கள் செய்து இருந்தனர்.
புதுச்சேரி:
புதுவை செல்லப் பொருமாள்பேட்டை-லாஸ்பேட்டையில், உள்ள விவேகானந்தா பள்ளியில் 2022-2023-ம் ஆண்டிற்கான கலை மற்றும் அறிவியல்- கைவினை பொருட்கள் கண்காட்சி தொடங்கியது.
இக்கண்காட்சியினைப் பள்ளியின் தாளாளரும், எம்.பி.யுமான செல்வகணபதி பள்ளியின் முதன்மை முதல்வர் பத்மா பள்ளியின் முதல்வர் கீதா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி கண்காட்சியிைன தொடங்கி வைத்தனர்.
அறிவியல் கண்காட்சியில் 3-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவ-மாணவியரின் 150 அறிவியல் படைப்புகளும், 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மாணவ-மாணவியரின் 350 அறிவியல் படைப்புகளும் மொத்தம் 500-க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் இடம் பெற்றிருந்தன.
அறிவியல் மட்டுமின்றி மற்ற பாடங்களான தமிழ், கணிதம், சமூக அறிவியல், ஆங்கில படைப்புகளையும் மாணவ-மாணவியர்கள் செய்து இருந்தனர். பார்வையாளர்களுக்கு மாணவர்கள் தங்கள் மாதிரிப் படைப்புகளின் இயக்குமுறை பற்றியும் அவற்றை நடைமுறையில் பயன்படுத்திக் ெகாள்ளக்கூடிய விதம் பற்றியும் விளக்கிக் கூறினர்.
கண்காட்சியின் ஏற்பாடுகளை அனைத்து ஆசிரியர்களும் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.
- புதுவை பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
- மாணவர்களுக்கான ஒரு ரூபாய் பஸ்சை இலவசமாக இயக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். 36 பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு தலைமை வகித்தார். அமைச்சர்கள் நமச்சிவாயம், சந்திரபிரியங்கா பங்கேற்று ஊக்கத்தொகை ஆணை வழங்கினர். விழாவில் அமைச்ச்ர நமச்சிவாயம் பேசியதாவது:-
மத்திய அரசின் தூய்மை பள்ளி விருது புதுவையை சேர்ந்த 6 பள்ளிகளுக்கு கிடைத்துள்ளது. இதில் 5 அரசு பள்ளிகள். புதுவை அரசு கல்வித்துறைக்கு ரூ.ஆயிரம் கோடிக்கு மேல் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. சீருடை வழங்க டெண்டர் கோரப்பட்டு பணிகள் முடிந்துள்ளது. விரைவில் சீருடை வழங்கப்படும். இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் தொடங்கப்படும்.
மாணவர்களுக்கான ஒரு ரூபாய் பஸ்சை இலவசமாக இயக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். 36 பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய 39 பஸ்கள் சரி செய்யப்பட்டு விரைவில்இயக்கப்படும். புதுவையில் அனைத்து வகுப்பறைகளும் ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றப்படும். ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க காலி பணியிடம் நிரப்பப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- புதுவையில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மாணவர் சிறப்பு பஸ் நிறுத்தப்பட்டது. தற்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டும் சிறப்பு பஸ் இயக்கப்படவில்லை.
- கிராமப் பகுதியில் இருந்து நகரப் பகுதிக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் மாணவ- மாணவிகள் நாள்தோறும் தனியார் பஸ் கட்டணமாக ரூ.50 செலவு செய்யும் சூழல் உள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மாணவர் சிறப்பு பஸ் நிறுத்தப்பட்டது. தற்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டும் சிறப்பு பஸ் இயக்கப்படவில்லை.
இந்த நிலையில் நிறுத்தப்பட்ட இலவச சிறப்பு மாணவர் பேருந்தை உடனடியாக இயக்க வலியுறுத்தி லாஸ்பேட்டையில் உள்ள உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இயக்குனரக அலுவலகத்தை கல்லூரி மாணவர்கள் முற்றுகையிட்டு போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.
தாகூர் கலைக்கல்லூரி, காலாப்பட்டு அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, கதிர்காமம் மகாத்மா காந்தி அரசு கலைக் கல்லூரி, லாஸ்பேட்டை மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராமப் பகுதியில் இருந்து நகரப் பகுதிக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் மாணவ- மாணவிகள் நாள்தோறும் தனியார் பஸ் கட்டணமாக ரூ.50 செலவு செய்யும் சூழல் உள்ளது இதை கருத்தில் கொண்டு உடனடியாக நிறுத்தப்பட்ட மாணவர் இலவச சிறப்பு பஸ் உடனடியாக இயக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
தொழில்நுட்ப கல்வி இயக்குனரான தனி அதிகாரி சவுமியா, இன்னும் 20 நாட்களில் இலவச பஸ் செயல்படும் என உறுதி அளித்ததின் பேரில் மாணவர்கள் அங்கதிருந்து கலைந்து சென்றனர்.
- பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டம் காமராஜர் திருமண மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு அரியாங்குப்பம் தொகுதி தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார்.
- நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் தொகுதியை சேர்ந்த மாநில, மாவட்ட தொகுதி கேந்திர மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி:
அரியாங்குப்பம் தொகுதி பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டம் காமராஜர் திருமண மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு அரியாங்குப்பம் தொகுதி தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார்.
மாநில செயலாளர் நாகராஜ், மாவட்ட தலைவர் தெய்வசிகாமணி, மாநில மீனவர் பிரிவு தலைவர் பழனி, தொகுதி பொறுப்பாளர் வசந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய செயற்குழு உறுப்பினர் பாரதி மோகன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்களாக பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான அருண் சிங் மற்றும் புதுவை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசினர்.
நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் தொகுதியை சேர்ந்த மாநில, மாவட்ட தொகுதி கேந்திர மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
முடிவில் ெதாகுதி பொதுச்செயலாளர் பிச்சைமுத்து நன்றி கூறினார்.
- அரியூர் அருகே பங்கூரில் உள்ள நவாம்பிகை உடனுறை, நவகோல் லிங்கேஸ்வரர் சிவன் கோவிலில் உலக மக்கள் நன்மை வேண்டி மகா உருத்திர பெருவேள்வி பூஜை நடைபெற்றது.
- அதனை தொடர்ந்து மதியம் 2 மணிக்கு மேல் மகா உத்திர பெருவேள்வி நடைபெற்றது.
புதுச்சேரி:
அரியூர் அருகே பங்கூரில் உள்ள நவாம்பிகை உடனுறை, நவகோல் லிங்கேஸ்வரர் சிவன் கோவிலில் உலக மக்கள் நன்மை வேண்டி மகா உருத்திர பெருவேள்வி பூஜை நடைபெற்றது. திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், அமுது படையல், பேரொளி வழிபாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து 2 மணிக்கு மேல் மகா உத்திர பெருவேள்வி நடைபெற்றது. 5 மணிக்கு மகா வேள்வி, கலச புறப்பாடு, சிறப்பு கலச அபிஷேகம், அமுது படையல், பேரொளி வழிபாடு நடைபெற்றது.
இந்த மகா வேள்வி பூஜையில் பங்கூர், அரியூர், நவமாள்காப்பேரி, பள்ளித்தென்னல், சிவராந்தகம், கண்டமங்கலம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கவர்னர் தமிழிசை இன்று வாரணாசி புறப்பட்டார்.
- காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு தலைமை வகிக்கிறார்.
புதுச்சேரி:
மத்திய கல்வி அமைச்சகத்தின் சார்பில் காசியில் நடைபெறும் 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படி மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், புதுவை கவர்னர் தமிழிசைக்கு அழைப்பு விடுத்தார்.
இதையேற்று காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கவர்னர் தமிழிசை இன்று வாரணாசி புறப்பட்டார். நாளை 25-ந் தேதி வாரணாசியில் தங்கி அங்கு நடைபெறும் 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு தலைமை வகிக்கிறார்.
- சிறையில் இருந்த பாஸ்கருக்கு தனது மனைவி எழிலரசியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
- எழிலரசியின் உடலை புதைத்த இடத்துக்கு சென்று எலும்பு கூட்டை தோண்டி எடுத்து உழந்தை ஏரியில் வீசியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை முதலியார்பேட்டை பிரபல தாதா கருணா. ஆயுள் தண்டனை கைதியாக உள்ள இவரது தம்பி பாஸ்கர் (வயது 48) ரவுடி. இவர் ஒரு கொலை வழக்கில் கடந்த 2009-ம் ஆண்டு கைதாகி தண்டனை பெற்று வந்தார்.
இந்த நிலையில் 2016-ம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்தார். பாஸ்கர் மனைவி எழிலரசி. இவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானார். அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை இதுகுறித்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டிடம் உறவினர்கள் புகார் அளித்தனர்.
அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து எழிலரசியை தேடி வந்தனர். ஆனால் அவரை பற்றி கடந்த 9 ஆண்டுகளாக எந்த துப்பும் கிடைக்காமல் இருந்தது.
இந்த நிலையில் முதலியார் பேட்டை உழந்தை ஏரியில் எலும்பு கூட்டை கடந்த சில நாட்களுக்கு முன்பு யாரோ ஒருவர் வீசி சென்றுள்ளார். இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சிறப்பு அதிரடி படை இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த எலும்பு கூட்டை வீசியது ரவுடி பாஸ்கர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் அதிரடி விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.
சிறையில் இருந்த பாஸ்கருக்கு தனது மனைவி எழிலரசியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர் மனைவியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். கடந்த 2013-ம் ஆண்டு பாஸ்கர் பரோலில் வெளியே வந்தார். அப்போது மனைவி எழிலரசி கிருமாம்பாக்கத்தில் உள்ள அவரது தங்கை வீட்டில் இருந்தார். அங்கு தனது கூட்டாளிகளான ரவுடிகள் மனோகர், சரவணன் என்ற கருப்பு சரவணன், வேல் முருகன் என்ற தடிவேலு ஆகியோருடன் பாஸ்கர் சென்றார்.
பின்னர் மனைவி எழிலரசியை காரில் ஏற்றி வந்துள்ளார். அதன்பிறகு காரிலேயே சேலையால் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின்னர் உழந்தை ஏரி அருகே ஏற்கனவே தயாராக தோண்டி வைத்துள்ள குழியில் எழிலரசி உடலை புதைத்துள்ளார். உடல் சீக்கிரம் மக்குவதற்காக யூரியா உரம் தெளித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக உழந்தை ஏரியை சுற்றிலும் பாதுகாப்பு சுவர் கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. இதை அறிந்த பாஸ்கர் பள்ளம் தோண்டினால் எலும்பு கூடு கிடைத்து சிக்கிக்கொள்வோம் என பீதி அடைந்தார்.
இதனால் எழிலரசியின் உடலை புதைத்த இடத்துக்கு சென்று எலும்பு கூட்டை தோண்டி எடுத்து உழந்தை ஏரியில் வீசியுள்ளார். ஆனால் எலும்பு கூட்டின் ஒரு சில பகுதிகளை மட்டும் அவசரத்தில் எடுத்து தூக்கி வீசியுள்ளார். மீதி உள்ளதை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து அப்புறப்படுத்த திட்டமிட்டு இருந்தார். ஆனால் அதற்குள் போலீசாரின் பிடியில் சிக்கிக் கொண்டார். இதையடுத்து பாஸ்கர் அவரது கூட்டாளிகளான ரவுடிகள் மனோகர், சரவணன் என்ற கருப்பு சரவணன், வேல் முருகன் என்ற தடிவேலு ஆகிய 4 பேரையும் முதலியார் பேட்டை இன்ஸ்பெக்டர் இனியன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
மேலும் எழிலரசி புதைத்த இடத்தில் மீதமுள்ள எலும்பு கூட்டை தேடிவருகின்றனர். புதுவையில் 9 ஆண்டுகளுக்கு முன் பரோலில் வந்து மனைவியை கொன்று புதைத்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளதும், இது தொடர்பாக ரவுடி மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டு இருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






