என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வேலைவாய்ப்பு முகாம்
    X

    கோப்பு படம்.

    வேலைவாய்ப்பு முகாம்

    • லாஸ்பேட்டை தாகூர் அரசு கல்லூரியில் நாளை சனிக்கிழமை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
    • இதில் தமிழகம், புதுவையில் உள்ள பிரபல நிறுவனகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

    புதுச்சேரி:

    உழவர்கரை நகராட்சி கமிஷனர் சுரேஷ்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    லாஸ்பேட்டை தாகூர் அரசு கல்லூரியில் நாளை சனிக்கிழமை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் தமிழகம், புதுவையில் உள்ள பிரபல நிறுவனகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

    முகாமில் 10, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ. மெக்கானிக்கல்ஆட்டோ மொபைல், ஓட்டல் நிர்வாகம், நர்சிங், பயோ டெக்னாலஜி, பயோ கெமிஸ்ட்ரி , அப்ளைய்டு மைக்ரோ பயாலஜி, லைப் சயின்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி, பயோ மெடிக்கல், உளவியல், கணிதம், புள்ளியியல், ஆங்கிலம் பட்டப்படிப்பு முடித்த 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் பகேற்கலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×