என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    இலவச பஸ் இயக்கக் கோரி  கல்லூரி மாணவர்கள் முற்றுகை
    X

    தொழில்நுட்பக் கல்லூரி இயக்குனரக அலுவலகத்தை கல்லூரி மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    இலவச பஸ் இயக்கக் கோரி கல்லூரி மாணவர்கள் முற்றுகை

    • புதுவையில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மாணவர் சிறப்பு பஸ் நிறுத்தப்பட்டது. தற்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டும் சிறப்பு பஸ் இயக்கப்படவில்லை.
    • கிராமப் பகுதியில் இருந்து நகரப் பகுதிக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் மாணவ- மாணவிகள் நாள்தோறும் தனியார் பஸ் கட்டணமாக ரூ.50 செலவு செய்யும் சூழல் உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மாணவர் சிறப்பு பஸ் நிறுத்தப்பட்டது. தற்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டும் சிறப்பு பஸ் இயக்கப்படவில்லை.

    இந்த நிலையில் நிறுத்தப்பட்ட இலவச சிறப்பு மாணவர் பேருந்தை உடனடியாக இயக்க வலியுறுத்தி லாஸ்பேட்டையில் உள்ள உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இயக்குனரக அலுவலகத்தை கல்லூரி மாணவர்கள் முற்றுகையிட்டு போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    தாகூர் கலைக்கல்லூரி, காலாப்பட்டு அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, கதிர்காமம் மகாத்மா காந்தி அரசு கலைக் கல்லூரி, லாஸ்பேட்டை மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கிராமப் பகுதியில் இருந்து நகரப் பகுதிக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் மாணவ- மாணவிகள் நாள்தோறும் தனியார் பஸ் கட்டணமாக ரூ.50 செலவு செய்யும் சூழல் உள்ளது இதை கருத்தில் கொண்டு உடனடியாக நிறுத்தப்பட்ட மாணவர் இலவச சிறப்பு பஸ் உடனடியாக இயக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

    தொழில்நுட்ப கல்வி இயக்குனரான தனி அதிகாரி சவுமியா, இன்னும் 20 நாட்களில் இலவச பஸ் செயல்படும் என உறுதி அளித்ததின் பேரில் மாணவர்கள் அங்கதிருந்து கலைந்து சென்றனர்.

    Next Story
    ×