என் மலர்
புதுச்சேரி

வேலைவாய்ப்பு முகாமில் எக்ஸ்ளோகாம் நிறுவன மனிதவள துறை மேலாளர் வெங்கட் மற்றும் விக்னேஷ், கல்லூரி வேலைவாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார், வேலைவாய்ப்புதுறை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும்வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்கள் பங்கேற்ற காட்சி.
தனியார் நிறுவனத்தின் பொது வேலைவாய்ப்பு முகாம்
- புதுவை கலிதீர்த்தாள்குப்பம் மணக்குளவிநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை எக்ஸ்ளோகாம் நிறுவனம் சார்பில் பொறியியல், மேலாண்மை துறை மாணவ-மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடத்தியது.
- கல்லூரி முதல்வர்மலர்க்கண் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் அனைத்து துறை சார்ந்த வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை கலிதீர்த்தாள்குப்பம் மணக்குளவிநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை எக்ஸ்ளோகாம் நிறுவனம் சார்பில் பொறியியல், மேலாண்மை துறை மாணவ-மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடத்தியது.
இந்த முகாமிற்கு வருகை புரிந்த அந்நிறுவன மனிதவளதுறை மேலாளர் வெங்கட் மற்றும் விக்னேஷ், அந்நிறுவனத்தின் விவரங்கள், நிறுவனத்தில் வேலைசெய்வதற்கு உண்டான சூழல், எதிர்கால குறிக்கோள்கள், சம்பளம் பற்றிய அனைத்து விவரங்களையும் விளக்கி கூறினர்.
நிகழ்ச்சிக்கு மணக்குளவிநாயகர் கல்வி குழுமதலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர்சுகுமாறன், மற்றும் செயலாளர் டாக்டர்.நாராயணசாமிகேசவன் ஆகி யோர் தலைமைதாங்கினர்.
கல்லூரி முதல்வர்மலர்க்கண் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் அனைத்து துறை சார்ந்த வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில், எம்.ஐ.டி. கல்லூரி மற்றும் புதுவையை சுற்றி உள்ள 15 என்ஜினீயரிங் கல்லூரிகளில் இருந்து 2023-ம் ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை மாணவ-மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு 20 மாணவர்கள் வேலைவாய்ப்பை பெற்று பயன் அடைந்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்பு துறை அதிகாரி மு ஜெயக்குமார் செய்து இருந்தார்.






