என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PA Janata"

    • பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டம் காமராஜர் திருமண மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு அரியாங்குப்பம் தொகுதி தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார்.
    • நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் தொகுதியை சேர்ந்த மாநில, மாவட்ட தொகுதி கேந்திர மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் தொகுதி பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டம் காமராஜர் திருமண மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு அரியாங்குப்பம் தொகுதி தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார்.

    மாநில செயலாளர் நாகராஜ், மாவட்ட தலைவர் தெய்வசிகாமணி, மாநில மீனவர் பிரிவு தலைவர் பழனி, தொகுதி பொறுப்பாளர் வசந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய செயற்குழு உறுப்பினர் பாரதி மோகன் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினர்களாக பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான அருண் சிங் மற்றும் புதுவை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசினர்.

    நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் தொகுதியை சேர்ந்த மாநில, மாவட்ட தொகுதி கேந்திர மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    முடிவில் ெதாகுதி பொதுச்செயலாளர் பிச்சைமுத்து நன்றி கூறினார். 

    ×