என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • உப்பளம் தொகுதிக்குட்பட்ட ஆட்டுப்பட்டி அம்பேத்கர்நகர், ரோடியர்பேட், அங்கன்நாயக்கன்தோப்பு, வாணரப்பேட்டை, தமிழ்தாய் நகர், தாமரை நகர் ஆகிய பகுதிகளில் குடிநீர் பிரச்சினை இருந்து வந்தது.
    • இந்த சந்திப்பின் போது தொகுதி தி.மு.க. செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜி ஆகியோர் உடன் இருந்தனர்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்குட்பட்ட ஆட்டுப்பட்டி அம்பேத்கர்நகர், ரோடியர்பேட், அங்கன்நாயக்கன்தோப்பு, வாணரப்பேட்டை, தமிழ்தாய் நகர், தாமரை நகர் ஆகிய பகுதிகளில் குடிநீர் பிரச்சினை இருந்து வந்தது.

    இதையடுத்து தொகுதி எம்.எல்.ஏ.வான அனிபால் கென்னடி பொதுப்பணித்துறை அதிகாரிகளை நேரில் வரவழைத்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுத்ததின் பேரில் தற்போது பொட்டானிக்கல்கார்டன், தாமரை நகர் ஆகிய பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படுகிறது. இப்பணிகள் தாமதமாக நடப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் கென்னடி எம்.எல்.ஏ. நிலத்தடி நீர் ஆணையர் துறை செயலாளர் குமாரை சந்தித்து பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களுக்கு தூய்மையான குடிநீர் கிடைக்க விரைவாக ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்கொண்டார்.

    இந்த சந்திப்பின் போது தொகுதி தி.மு.க. செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ராமேசுவரத்திற்கு வந்த பின் காசிக்கு சென்று வணங்க வேண்டும் என்ற இணைப்பை, கலாசார, ஆன்மிக பிணைப்பை பிரதமர் மோடி ஏற்படுத்தி தந்து இருக்கிறார்.
    • இந்தியா ஒற்றுமையாக இருப்பதற்கு காசி தமிழ் சங்கமம் மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்தி தந்திருக்கிறது.

    புதுச்சேரி:

    காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இருக்கும் பிணைப்பை பிரதமர் மோடி புதுப்பித்து இருப்பதாக புதுவை-தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

    காசியில் நடைபெற்று வரும் தமிழ் சங்கமத்தில், புதுவை மற்றும் தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார். அங்கு நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் இருந்து காசிக்கு வருகை தந்து வணக்கம் சொல்லும் வாய்ப்பை அளித்த பிரதமருக்கு நன்றியை தெரிவிக்கிறேன். தமிழகத்தில் யாத்திரை செய்யும் எல்லோரும் காசி-ராமேசுவரம் என்ற சொற்றொடரை பயன்படுத்துவது மிகவும் பிரபலமானது.

    ராமேசுவரத்திற்கு வந்த பின் காசிக்கு சென்று வணங்க வேண்டும் என்ற இணைப்பை, கலாசார, ஆன்மிக பிணைப்பை பிரதமர் மோடி ஏற்படுத்தி தந்து இருக்கிறார்.

    காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையேயான பிணைப்பு இன்று, நேற்றல்ல காலம் காலமாக இருந்து வருவது ஆகும். இந்த இணைப்பை பிரதமர் தற்போது புதுப்பித்து தந்து இருக்கிறார்.

    இங்கு நடைபெறும் கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், நாதஸ்வரம் போன்ற கலாசார நிகழ்வுகளை பார்க்கும் போது கலை வடிவிலும்கூட தமிழ்நாட்டுக்கும், காசிக்கும் பிணைப்பு இருப்பது தெரிய வருகிறது.

    பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பிரதமர், தமிழ் இருக்கை அமைத்து இருக்கிறார். கங்கையை தூய்மைப்படுத்த தமக்கு கிடைக்கும் பரிசுப் பொருட்களின் விற்பனையின் மூலம் பெறப்படும் தொகை செலவிடப்படுகிறது.

    இந்தியா ஒற்றுமையாக இருப்பதற்கு காசி தமிழ் சங்கமம் மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்தி தந்திருக்கிறது. மகாகவி பாரதியின் பேரனை காசியில் சந்தித்தேன். காசி தமிழ் சங்கமம் குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அங்குள்ள பாரதி சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

    • கடன் தொல்லையால் கூரியர் நிறுவன உரிமையாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இந்தநிலையில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த அருள்ராஜ் மனைவி வெளியே சென்றிருந்த நிலையில் வீட்டின் அறையில் மின்விசிறியில் மனைவியின் சேலையால் தூக்கு போட்டு தொங்கினார்.

    புதுச்சேரி:

    கடன் தொல்லையால் கூரியர் நிறுவன உரிமையாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுவை நையினார்மண்டபம் சுகாதார ஊழியர்கள் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அருள்ராஜ் (வயது27). இவர் சொந்தமாக கூரியர் நிறுவனம் வைத்து தொழில் செய்து வந்தார். இவருக்கு ஜாய்ஸ்மேரி என்ற மனைவி உள்ளார்.

    தொழில் சம்பந்தமாக அருள்ராஜ் பலரிடம் பணம் கடன் வாங்கியிருந்தாக கூறப்படுகிறது. ஆனால் தொழிலில் நஷ்டம் காரணமாக அருள்ராஜ் கடனை திருப்பி கொடுக்கமுடியாமல் திண்டாடி வந்தார்.

    ஆனால் பணம் கடன் கொடுத்தவர்கள் திரும்ப கேட்டு அருள்ராஜை தொல்லை கொடுத்து வந்தனர். இதனால் அருள்ராஜ் விரக்தியில் இருந்து வந்தார்.

    இந்தநிலையில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த அருள்ராஜ் மனைவி வெளியே சென்றிருந்த நிலையில் வீட்டின் அறையில் மின்விசிறியில் மனைவியின் சேலையால் தூக்கு போட்டு தொங்கினார்.

    வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்த ஜாய்ஸ்மேரி கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு திடுக்கிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அருள்ராஜை தூக்கில் இருந்து மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அருள்ராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது மனைவி ஜாய்ஸ்மேரி கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புதுவை முதலியார்பேட்டை தொகுதிகுட்பட்ட நைனார்மண்டபம் சுதானாநகரை சேர்ந்தவர் மாணிக்க வாசகம். இவரது மகள் பூங்குழலி. மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளியான இவர் பரத கலையில் ஆர்வம் கொண்டு பயிற்சி பெற்று வந்தார்.
    • பரதகலை மாணவி பூங்குழலிக்கு அசோக்பாபு எம்.எல்.ஏ. சால்வை அணிவித்து வாழ்த்தினார்.

    புதுச்சேரி:

    புதுவை முதலியார்பேட்டை தொகுதிகுட்பட்ட நைனார்மண்டபம் சுதானாநகரை சேர்ந்தவர் மாணிக்க வாசகம். இவரது மகள் பூங்குழலி. மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளியான இவர் பரத கலையில் ஆர்வம் கொண்டு பயிற்சி பெற்று வந்தார்.

    இந்தநிலையில் பரத கலையில் தனிநபர் திறமையில் மாற்றுத்திறனாளி களுக்கான மத்திய அரசின் தேசிய விருதுக்கு பூங்குழலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து பூங்குழலி தனது பெற்றோருடன் அசோக்பாபு எம்.எல்.ஏ.வை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    பரதகலை மாணவி பூங்குழலிக்கு அசோக்பாபு எம்.எல்.ஏ. சால்வை அணிவித்து வாழ்த்தினார்.

    இந்நிகழ்ச்சியின் போது முத்தமிழன், பா.ஜனதா நகர மாவட்ட துணை தலைவர் குமார், விஜயரங்கம், மாவட்ட விவசாய அணி தலைவர் அய்யனாரப்பன், கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • மத்திய பட்ஜெட் விவாதத்தில் புதுவை அரசு சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் பங்கேற்றார்.
    • மத்திய அரசு வழங்கும் நிதி 35.3 சதவீத நிதியிலிருந்து 17 சதவீதமாக குறைந்துள்ளது.

    புதுச்சேரி:

    மத்திய பட்ஜெட் விவாதத்தில் புதுவை அரசு சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாரா யணன் பங்கேற்றார். கூட்டத்தில் அமைச்சர் லட்சுமிநாராயணன் பேசியதாவது:-

    புதுவை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பொருளாதார வளர்ச்சி, இளைஞர்கள் வாழ்வாதார மேம்பாட்டு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. ஜி.எஸ்.டி. அமலான பின் புதுவையின் வருவாய் திரட்டும் வழிகள் குறைந்துள்ளது.

    தேர்தல் வாக்குறுதிப்படி பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பால் மாநில நிதி வருவாய் குறைந்துள்ளது.ஜி.எஸ்.டி இழப்பீடு நிறுத்தம் நித பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது. 2022-23-ம் ஆண்டு புதுவை வருவாய் இடைவெளி ரூ.ஆயிரத்து 710 கோடியாகும்.

    மத்திய அரசு சிறப்பு மத்திய உதவியை நீட்டிக்கா விட்டால் ஒவ்வொரு ஆண்டும் இந்த இடைவெளி அதிகரிக்கும். பணவீக்கத்தை குறைக்க மத்திய அரசு வழங்கும் நிதி ஆதாரத்தை ஆண்டுதோறும் 10 சதவீதம் அதிகரிக்க வேண்டும்.

    மத்திய அரசு வழங்கும் நிதி 35.3 சதவீத நிதியிலிருந்து 17 சதவீதமாக குறை ந்துள்ளது. இதனால் மத்திய நிதி உதவியை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. புதுவை அரசு 2 ஆயிரத்து 748 காலி பணியிடங்களை நிரப்பும் இயக்கத்தை தொடங்கியுள்ளது.

    இந்த பதவிகளை நிரப்ப குறைந்தபட்சமாக ரூ.254 கோடி கூடுதலாக வழங்க வேண்டும். மற்ற மாநிலங்கள்போல புதுவைக்கு நிதி பகிர்வு கிடைக்கவில்லை.

    7-வது சம்பளக்குழு பரிந்துரை நிலுவைத்தொகை வழங்க ரூ.186.50 கோடி நிதி தேவை.புதுவையில் மூலதன உள்கட்டமைப்பு வசதிகளான விமானநிலைய விரிவாக்கம், சட்டசபை வளாகம், சுகாதார உள்கட்டமைப்பு, மருத்துவம், சட்ட பல்கலைக்கழகம் போன்ற திட்டங்களுக்கு ரூ.2 ஆயிரத்து 147 கோடியை சிறப்பு நிதியாக மத்திய அரசு வழங்க வேண்டும்.

    புதுவையின் திட்டக்கடன் ரூ.104.24 கோடி, திட்டமில்லா கடன் ரூ.210 கோடியை தள்ளுபடி செய்ய வேண்டும். மத்திய நிதி, உள்துறை அமைச்சகம் நிதி ஆதரவு அளிக்கும் என்ற எதிர்பார்ப்புடன் புதுவை அரசு நீண்ட காலத்துக்கு பிறகு 2023-ம் ஆண்டு பட்ஜெட்டை மார்ச் மாதம் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. எனவே காலத்தோடு மத்திய அரசு நிதி உதவியை சிறப்பு தொகுப்போடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் லட்சுமிநாராயணன் பேசினார்.

    • பெங்களூருவில் நடந்த அனைத்து மாநில வேளாண் அமைச்சர்கள் மாநாடு, சிம்லாவில் நடந்த தலைமை செயலர்கள் மாநாட்டில் பல்வேறு விவாதங்கள் நடந்தது.
    • இதற்கான பட்டா வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை வேளாண் துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்கு––றிப்பில் கூறியிருப்பதாவது:-

    பெங்களூருவில் நடந்த அனைத்து மாநில வேளாண் அமைச்சர்கள் மாநாடு, சிம்லாவில் நடந்த தலைமை செயலர்கள் மாநாட்டில் பல்வேறு விவாதங்கள் நடந்தது. இதில் விவசாயிகள் பற்றிய இணையத்தகவல் தொகுப்பு, மென்பொருள் மூலம் அவர்களின் நில உரிமை பற்றிய தகவல்களை இணைக்க முடிவு செய்யப்பட்டது.

    இதற்கு நிலப்பட்டா அவசியம். இதற்கான பட்டா வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. கிராமங்கள் வாரியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் உழவர் உதவியகத்தில் பட்டா மாற்ற விண்ணப்பம் பெற்று ஆவணங்களுடன் சமர்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • புதுவை மதகடிப்பட்டில் உள்ள மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் அங்கமான கலை மற்றும் அறிவியல் வேதியியல் துறையும் தருமபுரி பெட்ரோ கெமிக்கல் நிறுவனமான லக் பெயிண்ட்ஸ் இணைந்து நடத்து வேதியியல் துறையில் பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் தொழில் துறை பயிற்சி நடைபெற்றது.
    • கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வர் வெங்கடாசலபதி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழத்திட்டு உறுதிப்படுத்தினார்.

    புதுச்சேரி:

    புதுவை மதகடிப்பட்டில் உள்ள மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் அங்கமான கலை மற்றும் அறிவியல் வேதியியல் துறையும் தருமபுரி பெட்ரோ கெமிக்கல் நிறுவனமான லக் பெயிண்ட்ஸ் இணைந்து நடத்து வேதியியல் துறையில் பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் தொழில் துறை பயிற்சி நடைபெற்றது.

    இதில் மணக்குள விநாயகா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றம் மேலான் இயக்குனர் தனசேகரன், துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், கல்லூரி இயக்குனர் வெங்கடாசலபதி, பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், கல்லூரியின் தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார் மற்றும் துறை தலைவர்கள் கல்லூரியின் வேலைவாய்ப்பு அதிகாரி கைலாசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    வேதியியல் துறையின் தலைவர் பேராசிரியை சாவித்திரி வரவேற்புரையாற்றினர். கலை மற்றும் அறிவியல் துறை தலைவர் டீன் முத்துலட்சுமி வாழ்த்துரை வங்கினார். வேலை வாய்ப்பு குறித்து தகவல்களை தொழில் துறை பயிற்சியாளர் சீனிவாசன் எடுத்துரைத்தார்.

    கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வர் வெங்கடாசலபதி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழத்திட்டு உறுதிப்படுத்தினார். முன்தாக வேதியியல் துறை பேராசிரியர் ராஜப்பா வரவேற்புரையாற்றினர். முடிவில் உதவி பேராசிரியை சரோஜ்பூரணி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் கார்த்திகேயன் மற்றும் உதவி பேராசிரியர் சிவராஜ் செய்திருந்தனர்.

    • ஆன்லைன் விளை யாட்டில் பரிசு விழுந்ததாக கூறி வாலிபரிடம் ரூ.50 ஆயிரம் மோசடி செய்தது குறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
    • இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்போனில் ஆன்லைன் விளைாயாட்டில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

    புதுச்சேரி:

    ஆன்லைன் விளை யாட்டில் பரிசு விழுந்ததாக கூறி வாலிபரிடம் ரூ.50 ஆயிரம் மோசடி செய்தது குறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவை தவளக்குப்பம் பூரணாங்குப்பம் ரோடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது35). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்போனில் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

    அப்போது அந்த விளையாட்டில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சுரேஷ் ஆன்லைன் மூலம் பதில் அளித்தார். சில நாட்கள் கழித்து அவருக்கு கூரியர் மூலம் ஒரு பார்சல் வந்தது. அந்த பார்சலில் ஒரு கார்டும், ஒரு விண்ணப்பமும் இருந்தது. அந்த கார்டை சர்ச் செய்து பார்த்ததில் ஆன்லைன் விளையாட்டு மூலம் ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள கார் பரிசு விழுந்துள்ளதாகவும், அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்புமாறு கூறப்பட்டிருந்தது.

    அதன்படி அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சுரேஷ் அனுப்பி வைத்தார். அதன் பிறகு அவருக்கு செல்போனில் மெசேஜ் வந்தது. அதில் கார் பரிசை பெற வேண்டுமானால் சர்வீஸ் கட்டணமாக ரூ.6 ஆயிரத்து 250 செலுத்த வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    அதன்படி சுரேஷ் அந்த தொகையை ஆன்லைன் மூலம் அனுப்பி வைத்தார். அன்றைய தினமே சுரேசுக்கு செல்போனில் மேலும் ஒரு மெசேஜ் வந்தது. அதில் ஜி.எஸ்.டி. கட்டணமாக ரூ.18 ஆயிரத்து 750 கட்டணம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    அந்த தொகையையும் சுரேஷ் ஆன் லைன் மூலம் செலுத்தினார். இதனை தொடர்ந்து டி.டி.எஸ். வரிக்கு ரூ.31 ஆயிரத்து 718 கட்ட வேண்டும் என்று மெசேஜ் வந்ததின் அடிப்படையில் அந்த தொகைகையும் சுரேஷ் அனுப்பி வைத்தார்.

    பின்னர் அதே நாளில் ரூ.49 ஆயிரத்து 500 கட்ட வேண்டும் என்று செல்போனில் மெசேஜ் வந்தால் சுரேஷ் அதிர்ச்சியடைந்தார். பணம் மோசடி செய்யப்படுவதை அறிந்து சுதாரித்துக்கொண்ட சுரேஷ் மேசேஜ் அனுப்பிய எண்ணில் தொடர்பு கொண்ட போது கார் பரிசுக்கான 98 சதவீத பணிகள் முடிந்து விட்டது என கூறி அந்த செல்போன் எண் இணைப்பை துண்டித்து விட்டார்.

    அதன்பிறகு அந்த எண்ணில் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதால் ஏமாற்றமடைந்த சுரேஷ் இதுகுறித்து தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புதுவை ரெட்டியார்பாளையம் மரியாள் நகரை சேர்ந்தவர் பிரமிளா.
    • இவரது ஒரு மகன் மற்றும் ஒரு மகள் ஆகியோர் பிரான்சில் வசித்து வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை ரெட்டியார்பாளையம் மரியாள் நகரை சேர்ந்தவர் பிரமிளா. இவரது பெரியம்மா சாரா ஜோஸ்பின் (வயது82). பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர். இவரது ஒரு மகன் மற்றும் ஒரு மகள் ஆகியோர் பிரான்சில் வசித்து வருகிறார்கள். மற்றொரு மகள் புதுவை பாக்கமுடையான்பட்டில் வசித்து வருகிறார்.

    பிரமிளா பராமரிப்பில் சாராஜோஸ்பின் இருந்து வந்தார். இதற்கிடையே சாராஜோஸ்பினுக்கு சிறுநீரக பிரச்சினை மற்றும் ரத்த அழுத்த பிரச்சினை காரணமாக அடிக்கடி மயங்கி கீழே விழுந்து விடுவார். அவ்வப்போது அவரை பிரமிளா மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிப்பார்.

    இந்தநிலையில் சம்பவத்தன்று சாராஜோஸ்பின் வீட்டின் கழிவறைக்கு சென்றார். அப்போது தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு நெற்றி மற்றும் வயிற்றில் காயம் ஏற்பட்டது. உடனே அவரை பிரமிளா மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சாராஜோஸ்பின் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து பிரமிளா கொடுத்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் ஆய்வகம் திறப்பு விழா நடைபெற்றது.
    • பொறுப்பாசிரியை வெரோனஸ் விஜயலட்சுமி தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    பாகூர் அரசு நடுநிலைப் பள்ளியில் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் ஆய்வகம் திறப்பு விழா நடைபெற்றது.

    பொறுப்பாசிரியை வெரோனஸ் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். இவ்விழாவில் கல்வித்துறையின் முதன்மை கல்வி அதிகாரி தனசெல்வம் நேரு கலந்து கொண்டு தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் ஆய்வகத்தை திறந்து வைத்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். விழாவில் அனைத்து ஆசிரியர்களும் ஊழியர்களும கலந்து கொண்டனர்.

    • ராஜீவ்காந்தி என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுடப கல்லூரியில் புதிதாக அைமக்கப் பட்ட கணினி ஆய்வகத்தின் திறப்பு விழா நடந்கது.
    • வேலைவாய்ப்பு பெற்ற மாணவா்களுக்கு பணி ஆணை வழங்கும் விழா நடந்தது.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கதில் உள்ள ராஜீவ்காந்தி என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுடப கல்லூரியில் புதிதாக அைமக்கப் பட்ட கணினி ஆய்வகத்தின் திறப்பு விழா மற்றும் முன் கணினி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்ற மாணவா்களுக்கு பணி ஆணை வழங்கும் விழா நடந்தது. கல்லூரி முதல்வர் விஜயகிருஷ்ணன் ரபா்டா, துணை முதல்வர் அய்யப்பன் ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். புதுவை பல்கலைக்கழகத்தின் கலாச்சாரம் மற்றும் கலாச்சார உறவுகளுக்கான இயக்குனர் ராஜீவ் ஜெயின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கணினி ஆய்வகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் கணினி ஆய்வகத்தின் பயன்பாடு குறித்து மாணவர்களி்டம் எடுத்துரைத்தார். தொடர்ந்து முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்ற 58 மாணவர்களுக்கு பணி ஆைண வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி மக்கள் தொ ா்டர்பு அதிகாரி ஜெரார்டு மற்றும் கணக்கு மேலாளர் ராஜேஷ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    • பா.ஜனதா தேசிய பொது செயலாளர் அருண்சிங் எம்.பி. 2 நாட்கள் பயணமாக புதுவை வந்திருந்தார்.
    • இந்த நிலையில் அவர் தவளக்குப்பம் அருகே பூரணாங்குப்பத்தில் உள்ள ஜோதி சிலம்பம் சத்திரிய குருகுலத்திற்கு சென்றார்.

    புதுச்சேரி:

    பா.ஜனதா தேசிய பொது செயலாளர் அருண்சிங் எம்.பி. 2 நாட்கள் பயணமாக புதுவை வந்திருந்தார். இந்த நிலையில் அவர் தவளக்குப்பம் அருகே பூரணாங்குப்பத்தில் உள்ள ஜோதி சிலம்பம் சத்திரிய குருகுலத்திற்கு சென்றார். அங்கு அருண்சிங் எம்.பி.யை குருகுல நிறுவனர் ஜோதி செந்தில் கண்ணன் கர்லாகட்டை வழங்கி வரேவற்றார்.மேலும் அவரிடம் கர்லாகட்டை தினத்தை முன்னிட்டு 100 பேர் கர்லாகட்டை சுற்றும் சாதனை நிகழ்ச்சி நடத்தப்போவதாகவும் தெரிவித்தார்.

    இந்த சந்திப்பின் போது சபாநாயகர் ஏம்பலம் செல்வம், சாய்.ஜெ.சரவணன், பாஜனதா மாநில தலைவர் சாமிநாதன், கூட்டுறவு பிரிவு மாநில அமைப்பாளர் வெற்றிச்செல்வன் மற்றும் தொகுதி நிர்வாகிகள், கர்லாகட்டை பயிற்சியாளர்கள் பெரியசாமி, ஆனந்தராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    ×