என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புதுவை ஈ.சி.ஆர் மெயின் ரோடு லாஸ்பேட்டையில் அமைந்துள்ள எம் வி ஆர் மருத்துவ மையத்தில் வருடம்தோறும் நவம்பர் 14-ம் தேதி உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு மாபெரும் உடல் நல பரிசோதனை முகாம் நடைபெறும்.
    • நரம்பு மற்றும் ரத்த ஓட்ட பரிசோதனைகள் அனைத்தும் ரூ.9 ஆயிரம் மதிப்புள்ள பரிசோதனைகள் சிறப்பு கட்டணச்சலுகையில் ரூ.4 ஆயிரம் கட்டண த்திற்கே செய்யப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை ஈ.சி.ஆர் மெயின் ரோடு லாஸ்பேட்டையில் அமைந்துள்ள எம்.வி.ஆர் மருத்துவ மையத்தில் வருடம்தோறும் நவம்பர் 14-ம் தேதி உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு மாபெரும் உடல் நல பரிசோதனை முகாம் நடைபெறும் அதனையொட்டி இந்த ஆண்டும் மருத்துவ முகாம் கடந்த 1-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இது குறித்து எம்.வி.ஆர். மருத்துவமைய மருத்துவ இயக்குனர் டாக்டர் எம்.ஆர்.வித்யா கூறியதாவது:-

    இம்முகாமில் ரத்த சர்க்கரை அளவு, ரத்த கொழுப்பு அளவு, ரத்த சோகை பரிசோதனை, ரத்தத்தில் வைட்டமின் டி அளவு, சிறுநீரக ரத்தப் பரிசோதனை, கல்லீரல் ரத்தப் பரிசோதனை, இருதய பரிசோதனை, மார்பு எக்ஸ் ரே, வயிற்றுப்பகுதிக்கான ஸ்கேன், கண் விழித்திரை புகைப்படம், பல், நரம்பு மற்றும் ரத்த ஓட்ட பரிசோதனைகள் அனைத்தும் ரூ.9 ஆயிரம் மதிப்புள்ள பரிசோதனைகள் சிறப்பு கட்டணச்சலுகையில் ரூ.4 ஆயிரம் கட்டண த்திற்கே செய்யப்படுகிறது.

    இம்முகாமில் பரிசோதனைகள் செய்துகொள்ளும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு முதுநிலை சர்க்கரை நோய் குறித்து ஆலோசனை இலவசமாக வழங்கப்படுகிறது. முகாமில் பரிசோதனைகள் கொள்பவர்களுக்கு காலை உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இம்முகாமிற்கான ஏற்பாட்டினை எம்.வி.ஆர் மருத்துவ மையத்தின் இணை மருத்துவ இயக்குனர் தேவநாதன் வாசு மற்றும் மேலாளர் தேவதாஸ் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • பாரத ரத்னா எம்ஜிஆர் மக்கள் நிலை இயக்கம் தொடக்க விழா மற்றும் இயக்கத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
    • மேலும் எம்.ஜி.ஆர். மக்கள் நல இயக்கத்தின் சார்பில் பொது மக்களுக்கு சேவைகள் மற்றும் பொது நலப் பணிகள் செய்து எம்.ஜி.ஆரின் புகழை பரப்ப வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    பாரத ரத்னா எம்ஜிஆர் மக்கள் நிலை இயக்கம் தொடக்க விழா மற்றும் இயக்கத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் கராத்தே வளவன், கருணாநிதி, அசோக சுப்பிர மணியன், சம்பத், மாசிலா குப்புசாமி, அண்ணா ஜெகன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    மேலும் எம்.ஜி.ஆர். மக்கள் நல இயக்கத்தின் சார்பில் பொது மக்களுக்கு சேவைகள் மற்றும் பொது நலப் பணிகள் செய்து எம்.ஜி.ஆரின் புகழை பரப்ப வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    மேலும் எம்.ஜி.ஆரின் பிறந்த தினம் மற்றும் நினைவு நாள் ஆகியவற்றை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    • பாகூர், ஏம்பலம், நெட்டப்பாக்கம் தொகுதிகளின் சார்பில் தி.மு.க இளைஞர் அணி திராவிட மாடல் பயிற்சிப் பாசறை நிகழ்ச்சி பாகூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • சிறப்பு விருந்தினர்களாக, தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி. மாநில மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி ஆகியோர் பங்கேற்று, இளைஞர்களுக்கு திராவிட மாடல் குறித்து பயிற்சி அளித்தனர்.

    புதுச்சேரி:

    பாகூர், ஏம்பலம், நெட்டப்பாக்கம் தொகுதிகளின் சார்பில் தி.மு.க இளைஞர் அணி திராவிட மாடல் பயிற்சிப் பாசறை நிகழ்ச்சி பாகூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு, மாநில தி.மு.க. அமைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தலைமை தாங்கினார்.

    செந்தில்குமார் எம்.எல்.ஏ., வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக, தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி. மாநில மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி ஆகியோர் பங்கேற்று, இளைஞர்களுக்கு திராவிட மாடல் குறித்து பயிற்சி அளித்தனர்.

    இந்நிகழ்ச்சியில், சம்பத் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் எஸ் .பி.சிவக்குமார், பாகூர் தொகுதி தி.மு.க., செயலாளர் பாண்டு அரிக்கிருஷ்ணன், ஏம்பலம் தொகுதி செயலாளர் ரவிச்சந்திரன், நெட்பப்பாக்கம் தொகுதி செயலாளர் வெங்கடாசலபதி, மணவெளி தொகுதி நிர்வாகி சன்.சண்முகம், மாநில இளைஞரணி செயலாளர் காந்தி, பாகூர் பாஸ்கரன், சேகர், ரவிந்திரன், அமிர்தலிங்கம், நெட்டப்பாக்கம் மதி, திருநாவுக்கரசு, ஏம்பலம் ஜெகநாதன், தனபால், பன்னீர், நடராஜன், அருண் உள்ளிட்ட நிர்வாகிகள், மற்றும் இளைஞரணியினர் பலர் கலந்து கொண்டனர்.

    • புதுவையைடுத்த தமிழக பகுதியான திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அருகே உள்ள புளிச்சம்பள்ளம் கிராமத்தில் ஒரு கும்பல் அந்த கிராமத்திற்கு நுழைந்து மூதாட்டியிடம் 3 பவுன் நகையை பறித்து சென்றது.
    • இது குறித்து வானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவையைடுத்த தமிழக பகுதியான திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அருகே உள்ள புளிச்சம்பள்ளம் கிராமத்தில் ஒரு கும்பல் அந்த கிராமத்திற்கு நுழைந்து மூதாட்டியிடம் 3 பவுன் நகையை பறித்து சென்றது.

    மேலும் அதே பகுதியில் 3-க்கும் மேற்பட்ட வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளையடித்து தப்பிச் சென்றது. இது குறித்து வானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

    இந்நிலையில், கோரிமேடு இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் சேதராப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் குற்ற தடுப்பு பிரிவு போலீசார்  சேதராப்பட்டு, கரசூர், துத்திப்பட்டு கிராமத்தில் முக்கிய பகுதிகளுக்கு சென்று திருட்டு, வழிப்பறி, கொள்ளை சம்பவங்களில் இருந்து பொதுமக்கள் எவ்வாறு உஷாராக தங்களை பாதுகாக்க வேண்டும், சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் ஊருக்கு வந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

    மேலும் அவசர உதவி எண் 100-க்கு போன் செய்து தகவலை தெரியப்படுத்தவும். வசதி வாய்ப்புடையோர் வீடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட பூட்டுகளை பூட்ட வேண்டும் நீண்ட நாள் வெளியூர் செல்வதாக இருந்தால் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து செல்ல வேண்டும் என அறிவுரை வழங்கினர்.

    தமிழகத்தில் நடந்த கொள்ளை சம்பவத்தையடுத்து புதுவை போலீசார் பொதுமக்கள் மத்தியில் கிராம மக்களிடையே விழிப்புணர்வு உஷார் படுத்தியது வரவேற்பு பெற்றுள்ளது.

    • பாண்டி மெரினா கடற்கரை பொழுது போக்கு மையத்தில் சோழர் தர்பார் என்ற நிகழ்ச்சி நடந்தது.
    • சில குழந்தைகளின் நடிப்பை மீண்டும் ஒருமுறை ஒன்ஸ்மோர் கேட்டு செய்ய சொல்லி கேட்டு பார்வையாளர்கள் ரசித்தனர்.

    புதுச்சேரி:

    பாண்டி மெரினா கடற்கரை பொழுது போக்கு மையத்தில் சோழர் தர்பார் என்ற நிகழ்ச்சி நடந்தது.

    சிறுவர்களை ஊக்குவிக்கும் வகையில் நடந்த தர்பார் நிகழ்ச்சியில் பள்ளிக் குழந்தைகள் பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களான பொன்னிய செல்வன், ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன், நந்தினி, குந்தவை, பூங்குழலி, வானதி, ஆழ்வார்க்கு அடியார், பழுவேட்டரையர் உள்ளிட்ட பல பாத்திரங்கள் ஒப்பனையில் தோன்றினர்.

    குழந்தைகள் மழலைத் தமிழில் பேசிநடித்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. சில குழந்தைகளின் நடிப்பை மீண்டும் ஒருமுறை ஒன்ஸ்மோர் கேட்டு செய்ய சொல்லி கேட்டு பார்வையாளர்கள் ரசித்தனர். 

    • தேசிய மாணவர் படை உதய நாளை முன்னிட்டு கண்டமங்கலம் அருகே உள்ள சின்ன பாபு சமுத்திரம் ஆதரவற்ற பெண் குழந்தைகள் விடுதியில் அவர்களுக்கு தேவையான உபயோக பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் ஆதரவற்றோர் பெண்கள் இல்ல விடுதியின் காப்பாளர்கள் எலிசபத் செலின்மற்றும் என்.சி.சி. மாணவர்கள் விடுதியின் மாணவிகள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    தேசிய மாணவர் படை உதய நாளை முன்னிட்டு கண்டமங்கலம் அருகே உள்ள சின்ன பாபு சமுத்திரம் ஆதரவற்ற பெண் குழந்தைகள் விடுதியில் அவர்களுக்கு தேவையான உபயோக பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கலித்தீ ர்த்தால் குப்பம் காமராஜர் கலைக்கல்லூரியின் சுற்றுலாத்துறை தலைவரும் தேசிய மாணவர் படை அலுவலருமான கதிர்வேல் வரவேற்று பேசினார்.

    விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தேசிய மாணவர் படை இளநிலை அதிகாரி சுனில்குமார் மற்றும் சந்தோஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவிகளுக்கு போர்வை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் உபயோக பொருட்கள் வழங்கி சிறப்புரையாற்றினர்.

    நிகழ்ச்சியில் ஆதரவற்றோர் பெண்கள் இல்ல விடுதியின் காப்பாளர்கள் எலிசபத் செலின்மற்றும் என்.சி.சி. மாணவர்கள் விடுதியின் மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியில் 25-வது முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுக விழா நடைபெற்றது.
    • இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் அனைத்து துறைத் தலைவர்களும், பேராசிரியர்களும் முதலா மாண்டு மாணவர்கள் அவர்தம் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியில் 25-வது முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுக விழா நடைபெற்றது.

    விழாவில் கல்லூரி தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்து உரையாற்றினார்.

    கல்லூரியின் துணைத் தலைவர் சுகுமாறன் மற்றும் செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் இயக்குனர் செந்தில் சிறப்புரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் ராஜப்பன் வரவேற்று பேசினார்.

    முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் விதமாக கல்லூரியில் இயங்கிவரும் அப்துல் கலாம் மாணவர் சங்கம் சார்பில் மரக்கன்றுகள் முதலாமாண்டு மாணவர்க ளுக்கு நடப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் அனைத்து துறைத் தலைவர்களும், பேராசிரியர்களும் முதலா மாண்டு மாணவர்கள் அவர்தம் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். முடியில் முதலாமாண்டு ஒருங்கிணைப்பாளர் ரகுராமன் நன்றி கூறினார்.

    பா.ஜனதா கட்சியின் இளைஞர் அணி 3 நாள் பயிற்சி முகாம் புதுவை முத்தியால்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் தொடங்கியது.

    புதுச்சேரி:

    பா.ஜனதா கட்சியின் இளைஞர் அணி 3 நாள் பயிற்சி முகாம் புதுவை முத்தியால்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் தொடங்கியது.

    பயிற்சி முகாமினை மாநில தலைவர் சாமிநாதன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இளைஞர் அணி மாநில தலைவர் கோவேந்தன் கோபதி தலைமை தாங்கினார்.மாநில துணைத்தலைவர் மற்றும் இளைஞர் அணியின் பொறுப்பாளருமான ரவிச்சந்திரன் மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார் இளைஞர் அணியின் தேசிய செயற்குழு உறுப்பினரும் புதுவை மாநில பொறுப்பாளருமான டாக்டர் பிரியதர்ஷினி மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர் ராகவேந்திரா கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில மாவட்ட தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை புதுவை இளைஞரணியின் மாநில கொள்கை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி பொறுப்பாளர் தமிழரசன் செய்திருந்தார்.

    • தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருது வழங்கும் விழா எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வளாக அரங்கில் நடைபெற்றது.
    • இந்நிகழ்ச்சியில் புதுவைத் தமிழ்ச் சங்க செயலாளர் சீனு.மோகன்தாசு, பொருளாளர் திருநாவுக்கரசு துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன் துணைச் செயலர் மு.அருள் செல்வம் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து தமிழறிஞர்கள் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருது வழங்கும் விழா எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வளாக அரங்கில் நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் பாரிவேந்தர் தலைமையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் தமிழருவி மணியன், நாகராசன், துணைவேந்தர் முத்தமிழ்ச்செல்வன், பதிவாளர் பொன்னுசாமி ஆகியோர் பங்கேற்ற விழாவில் 3000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

    மேலும் தமிழ் சார்ந்த கலை நிகழ்ச்சிகளுடன், தமிழ் இசை பாடல்களுடன் விழா நடைபெற்றது. இவ்விழாவில் இலக்கியம், இலக்கணம், மொழிபெயர்ப்பு,சமூக நீதி, இதழ், பைந்தமிழ், தொல்காப்பியர் விருது என பல்வேறு துறையில் சிறப்பாக செயல்பட்டு பணியாற்றி வருபவர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.

    அதுபோல் புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் சிறப்பான செயல்பாடுகளை பாராட்டி தொல்காப்பியர் தமிழ்ச் சங்க விருதினை புதுவை தமிழ்ச் சங்கத் தலைவர் வி.முத்துவுக்கு வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் புதுவைத் தமிழ்ச் சங்க செயலாளர் சீனு.மோகன்தாசு, பொருளாளர் திருநாவுக்கரசு துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன் துணைச் செயலர் மு.அருள் செல்வம் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து தமிழறிஞர்கள் பங்கேற்றனர்.

    முடிவில் பாரிவேந்தர் பைந்தமிழ் விருது பெற்ற கவிஞர் சிற்பி.பாலசுப்பிரமணியன் ஏற்புரை நிகழ்த்தினார்.

    • புதுவை நகரின் மையப் பகுதியில் ஆட்டுப்பட்டி உள்ளது. அங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • நிகழ்ச்சியில் புதுவை சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ்சூப்பிரண்டு தீபிகா மற்றும் கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சீதரெட்டி முன்னிலை வகித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை நகரின் மையப் பகுதியில் ஆட்டுப்பட்டி உள்ளது. அங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சிலர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. மேலும் பலரும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் புதுவை காவல்துறை சார்பில் ஆட்டுப்பட்டி பகுதியை தத்தெடுத்து அப்பகுதியில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு சுயதொழில் உள்ளிட்டவை பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி புதுவை காவல்துறை சார்பில் ஆட்டுப்பட்டி பகுதிதத்தெடுப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு அனிபால்கென்னடி எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.

    நிகழ்ச்சியில் புதுவை சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ்சூப்பிரண்டு தீபிகா மற்றும் கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சீதரெட்டி முன்னிலை வகித்தனர். உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா வேலைவாய்ப்பு பயிற்சி, மறுவாழ்வு ஆகியவற்றிற்கான அனைத்து ஏற்பாடுகளும் அளிக்கப்படும் என்று உறுதியளித்தார்.

    இதனை தொடர்ந்து பேசிய அனிபால்கென்னடி எம்.எல்.ஏ. அப்பகுதியில் வாழும் மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப அடுக்குமாடி குடியிருப்பு அல்லது பட்டா அளிக்கப்படும் என்றும் சுத்தமான குடிநீர் வழங்குவதற்கான பணி நடந்து வருவதால் கூடிய விரைவில் தண்ணீர் சுத்தமாகவும் உயர் அழுத்தத்துடன் கிடைக்கும் என்று உறுதியளித்தார்.

    நிகழ்ச்சியில் கென்னடி எம்.எல்.ஏ. பேசிய காட்சி.

    • இந்தியகம்யூனிஸ்டு கட்சியின் புதுவை மாநிலக்குழு கூட்டம் முதலியார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.
    • அரசு தனியார்மய ஏற்பாடுகளை தொடர்ந்து நடத்தி வருவதை மாநிலக்குழு கண்டிக்கிறது.

    புதுச்சேரி:

    இந்தியகம்யூனிஸ்டு கட்சியின் புதுவை மாநிலக்குழு கூட்டம் முதலியார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நட ந்தது.

    மாநில செயலாளர் சலீம் தலைமை வகித்தார். கட்சியின் தேசிய செயலாளர் அஜீஸ்பாஷா சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், மாநிலக்குழு உறுப்பினர்கள் அபிஷேகம், தினேஷ்பொன்னையா, சேதுசெல்வம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    மாநில தகுதி வழங்காத பா.ஜனதா கூட்டணியிலிருந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியேற வேண்டும். புதுவை மாநில அந்தஸ்து கோரிக்கையை வென்றெ டுக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாநில அந்தஸ்து நடவடிக்கைக்கு வலு சேர்க்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி முதல்-அமைச்சர் முடிவு எடுக்க வேண்டும்.

    மின்விநியோகத்தை தனியார்மயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும். அரசு தனியார்மய ஏற்பாடுகளை தொடர்ந்து நடத்தி வருவதை மாநிலக்குழு கண்டிக்கிறது.இந்த நடவடிக்கை தொடர்ந்தால் மாபெரும்போராட்டம் நடத்தப்படும். மின்துறை தனியார்மயத்தை முழுமையாக கைவிட வேண்டும்.

    சென்டாக் மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை தனியார் கல்வி நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்தும் என உத்திரவாதம் வழங்க வேண்டும். மாணவர்களை கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.

    25 ஆண்டாக கூட்டுறவுத்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்-அமைச்சர் கூட்டுறவு அமைப்புகளின் நஷ்டத்துக்கு ஊழியர்கள்தான் காரணம் என கூறியதை இந்தியகம்யூனிஸ்டு மறுக்கிறது. கூட்டுறவு சங்கங்கள் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட குழுவால் நடத்தப்பட வேண்டும்.

    எனவே சட்ட விதிகளின்படி கூட்டுறவு சங்கங்களுக்கு 3 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்த வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • இந்திய உழவர்கள் டெல்லியில் போராட்டம் நடத்திய தொடக்க நாளையொட்டி புதுவையில் எஸ்.கே.எம். ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பேரணி நடந்தது.
    • டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த 760-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    இந்திய உழவர்கள் டெல்லியில் போராட்டம் நடத்திய தொடக்க நாளையொட்டி புதுவையில் எஸ்.கே.எம். ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பேரணி நடந்தது.

    பழைய பஸ் நிலையத்திலிருந்து தொடங்கிய பேரணிக்கு விவசாயிகள் சங்க மாநில தலைவர் கீதநாதன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ரவி, காங்கிரஸ் விவசாய அணி செல்லகணபதி, தி.மு.க. செந்தில்குமார், மற்றும் ராமமூர்த்தி, சங்கர், புருஷோத்தமன், சாந்தகுமார் உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.

    பேரணி அண்ணாசாலை, நேருவீதி வழியாக கவர்னர் மாளிகை நோக்கி வந்தது. அவர்களை ஆம்பூர் சாலையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்குகோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த 760-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும். உயிரிழந்த விவசாயிகளுக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்.

    விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ்பெற வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை சட்டம் இயற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

    ×