என் மலர்
புதுச்சேரி

ஆட்டுப்பட்டி பகுதி மக்களுக்கு மனைப்பட்டா-கென்னடி எம்.எல்.ஏ. உறுதி
- புதுவை நகரின் மையப் பகுதியில் ஆட்டுப்பட்டி உள்ளது. அங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
- நிகழ்ச்சியில் புதுவை சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ்சூப்பிரண்டு தீபிகா மற்றும் கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சீதரெட்டி முன்னிலை வகித்தனர்.
புதுச்சேரி:
புதுவை நகரின் மையப் பகுதியில் ஆட்டுப்பட்டி உள்ளது. அங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சிலர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. மேலும் பலரும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் புதுவை காவல்துறை சார்பில் ஆட்டுப்பட்டி பகுதியை தத்தெடுத்து அப்பகுதியில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு சுயதொழில் உள்ளிட்டவை பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி புதுவை காவல்துறை சார்பில் ஆட்டுப்பட்டி பகுதிதத்தெடுப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு அனிபால்கென்னடி எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் புதுவை சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ்சூப்பிரண்டு தீபிகா மற்றும் கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சீதரெட்டி முன்னிலை வகித்தனர். உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா வேலைவாய்ப்பு பயிற்சி, மறுவாழ்வு ஆகியவற்றிற்கான அனைத்து ஏற்பாடுகளும் அளிக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இதனை தொடர்ந்து பேசிய அனிபால்கென்னடி எம்.எல்.ஏ. அப்பகுதியில் வாழும் மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப அடுக்குமாடி குடியிருப்பு அல்லது பட்டா அளிக்கப்படும் என்றும் சுத்தமான குடிநீர் வழங்குவதற்கான பணி நடந்து வருவதால் கூடிய விரைவில் தண்ணீர் சுத்தமாகவும் உயர் அழுத்தத்துடன் கிடைக்கும் என்று உறுதியளித்தார்.
நிகழ்ச்சியில் கென்னடி எம்.எல்.ஏ. பேசிய காட்சி.






