என் மலர்
புதுச்சேரி
- தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் மாணவர் கூட்டமைப்பு தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது.
- விழாவிற்கு கல்லூரி முதல்வர் விஜயகிருஷ்ண ரபாகா தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
கிருமாம்பாக்கம் ராஜீவ்காந்தி என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் மாணவர் கூட்டமைப்பு தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் விஜயகிருஷ்ண ரபாகா தலைமை தாங்கினார். துணை முதல்வர் அய்யப்பன் முன்னிலை வகித்தார். துறை தலைவர் ஷோபா வரவேற்றார். கல்லூரியின் முன்னாள் மாணவரும், பேங்க் ஆப் இந்தியா மேலாளருமான பாக்கிய பிரியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
தொடர்ந்து கடந்த ஆண்டில் சிறந்து விளங்கிய மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. முடிவில் மாணவர் கூட்டமைப்பு தலைவர் புகழரசன் மற்றும் பகிமிதா நன்றி கூறினர். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.
- அரியூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில், இந்திய பள்ளி உளவியல் சங்கம் மற்றும் மொரிஷியஸ் ஆறுமுகம் பரசுராமன் நிறுவனம் கல்லூரியுடன் இணைந்து நம் முன்னோர்கள் பற்றிய ஆய்வு என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா கல்லூரியில் உள்ள சாய் அரங்கில் நடைபெற்றது.
- குழுமத்தின் மேலாண் இயக்குனர் ராஜூவ்கிருஷ்ணா,மவுஷ்மி ராஜுவ்கிருஷ்ணா ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
புதுச்சேரி:
அரியூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில், இந்திய பள்ளி உளவியல் சங்கம் மற்றும் மொரிஷியஸ் ஆறுமுகம் பரசுராமன் நிறுவனம் கல்லூரியுடன் இணைந்து நம் முன்னோர்கள் பற்றிய ஆய்வு என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா கல்லூரியில் உள்ள சாய் அரங்கில் நடைபெற்றது.
ராமச்சந்திரா கல்வி குழுமத்தின் தலைவர் ராமச்சந்திரன் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கல்வி குழுமத்தின் மேலாண் இயக்குனர் ராஜூவ்கிருஷ்ணா,மவுஷ்மி ராஜுவ்கிருஷ்ணா ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
கல்விக்குழுமத்தின் முதன்மை இயக்க அதிகாரி டாக்டர் வித்யா, பொது மேலாளர் சவுந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத்சிங் ஆராய்ச்சி புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
இப்புத்தகத்தின் ஆசிரியரான மொரிஷியஸ் முன்னாள் அமைச்சர் மற்றும் யுனெஸ்கோ முன்னாள் இயக்குனர் ஆறுமுகம் பரசுராமன், மற்றும் இணை ஆசிரியரான வரலாற்றாசிரியர் மற்றும் ஆய்வாளர் பேராசிரியர் சத்யேந்திர பீர்தம் ஆகியோர் வெளியிட்ட புத்தகங்களை விழா நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர்.
உளவியலாளர்களும், பேராசிரியர்களுமான விஜயகுமார் மற்றும் சந்தானம் ஆகியோர் கலந்து கொண்டு இந்த புத்தகத்தின் நினைவக நுட்பகங்கள் பற்றியும் கல்வி சாதனைகளை மேம்படுத்துதல் குறித்தும் விளக்கவுரை வழங்கினார்கள்.
புதுவை பல்கலைக்கழக பேராசிரியர் பாஞ். ராமலிங்கம் நோக்க உரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் டாக்டர். பிரதீப் தேவநேயன் அனைவரையும் வரவேற்று பேசினார். பொறியியல் கல்லூரியின் டீன் டாக்டர். ஜெயராமன் நன்றி கூறினார்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் வேலைவாய்ப்பு தலைவர் ஆனந்தராஜ் மற்றும் பேராசிரியர்கள் குழுவினர் ஒருங்கிணைத்திருந்தனர்
- தி .எஸ்.பி.பி.மில்லினியம் பள்ளியின் இரசன ரங்கம் 9-ம் ஆண்டு விழா வைப்ரேஷன் தி ஹீலர்ஸ் என்ற தலைப்புகளில் மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் ஜிப்மர் அரங்கத்தில் நடைபெற்றது.
- பள்ளி முதல்வர் மகாலட்சுமி தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
கடலூர் பெரிய காட்டுப்பாளையம். தி .எஸ்.பி.பி.மில்லினியம் பள்ளியின் இரசன ரங்கம் 9-ம் ஆண்டு விழா வைப்ரேஷன் தி ஹீலர்ஸ் என்ற தலைப்புகளில் மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் ஜிப்மர் அரங்கத்தில் நடைபெற்றது.
பள்ளி முதல்வர் மகாலட்சுமி தலைமை தாங்கினார். புதுவை ஸ்ரீபாலாஜி வித்யா பீத் இயக்குனர் மற்றும் பேராசிரியர் ஆனந்த பாலயோகி பாவானணி, புதுவை பாரதியார் பல்கலைக்கூட பேராசிரியரும் மிருதங்கம் மற்றும் அறுமுகனம் வித்துவானுமான கோப குமார், கிருகம்பாக்கம் பி.எஸ்.பி.பி. மில்லினியம் பள்ளி பவாணி பாஸ்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பள்ளி மாணவர்களின் ஆற்றலை வெளிப்படுத்தும் விதமான வகையில் அமைந்த கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்து பாராட்டி பேசினர்.
இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டினை பள்ளி தலைமை ஆசிரியர் கமலா முரளி முன்னிலையில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் செய்து இருந்தனர்.
- நெட்டப்பாக்கம் கிராம நலச்சங்கம் குடும்ப நல ஆலோசனை மையத்தை நடத்தி வருகிறது.
- இந்த மையத்தில் பல்வேறு வகையான பிரச்சினை களுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் கிராம நலச்சங்கம் குடும்ப நல ஆலோசனை மையத்தை நடத்தி வருகிறது. இந்த மையத்தில் பல்வேறு வகையான பிரச்சினை களுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் துண்புறுத்தல்களிலிருந்து அவர்களை பாதுகாத்து வருகிறது.
அதன்படி சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு தினம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நெட்டப்பா க்கம் கருணாலயம் கிராம நலச்சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கருணாலயம் கிராம நலச்சங்க இயக்குனர் அங்காளன் தலைமை தாங்கி பேசினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக புதுவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை பாதுகாப்பு அலுவலர் சவுந்தரராஜன் கலந்து கொண்டு பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் அதனை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து விளக்கினார். இந்த நிகழ்ச்சியில் கருணாலயம் கிராம நலச்சங்க இணை இயக்குனர் புஷ்பவள்ளி கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்.
கருணாலயம் கிராம நலச்சங்க குடும்பஆலோசகர் சித்ரா வரவேற்று பேசினார். கருணாலயம் கிராம நலச்சங்க குடும்ப ஆலோசகர் அபிராமி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் நெட்டப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
- மதுக்கடை திறக்கக்கூடாது எனக்கூறி காமராஜர் மணி மண்டபம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
- மற்றொரு பிரிவு பெண்கள் மதுகடை முன்பு திரண்டு கோஷம் எழுப்பினர்.
புதுச்சேரி:
புதுவை- தமிழக எல்லைப்பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் காமராஜர் மணி மண்டபம் அருகே புதிய மதுபானக்கடையை அமைக்க கலால்துறை அனுமதி அளித்துள்ளது.
இதற்கு அப்பகுதியான சாமிபிள்ளைத்தோட்டம் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புதிய மதுக்கடை வரும் பகுதியில் கருவடிக்குப்பம் சித்தானந்தர் கோவில், காமராஜர் மணிமண்டபம் மற்றும் குடியிருப்புகள் உள்ளதால் புதிதாக மதுபானக்கடை கொண்டு வரக்கூடாது என்று வலியுறுத்தி சாமிபிள்ளைத்தோட்டம் மக்கள் மதுபானக்கடை திறப்பு எதிர்ப்பு போராட்டக்குழு அமைத்தனர்.
இக்குழுவின் சார்பில் மதுக்கடை திறக்கக்கூடாது எனக்கூறி காமராஜர் மணி மண்டபம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.போராட்ட எதிர்ப்புக்குழு லெனின்துரை, பார்த்திபன் ஆகியோர் தலைமை தாங்கினர். போராட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர்ர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ., பா.ம.க. அமைப்பாளர் கணபதி, இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் சலீம், ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச்செயலர் சேதுசெல்வம், தமிழர் களம் அழகர் மற்றும் அப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் மதுபானக்கடை கொண்டு வரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துகோஷம் எழுப்பினர். அரசியல் தலைவர்கள கண்டன உரையாற்றினர்.ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது பெண்களின் ஒரு பிரிவினர் ஆர்ப்பாட்டத்தில் இருந்து வெளியெறி புதிய மதுபான கடை முன்பு திரண்டனர்.
அப்போது போலீசார் அவர்களை தடுத்தனர்.இதனால் போலீசாருக்கும் பெண்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மதுகடை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியில்லை என கூறி அப்புறப்படுத்த முயன்றனர். ஆனாலும், பெண்கள் தொடர்ந்து அங்கேயே நின்றனர்.
இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்களில் ஒருபிரிவினர் பெண்களுடன் இணைந்தனர். இதனையடுத்து அவர்கள் சாலையின் ஒரு பகுதியில் தரையில் அமர்ந்து மறியல் செய்தனர். மறியலில் ஈடுபட்டடவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். மற்றொரு பிரிவு பெண்கள் மதுகடை முன்பு திரண்டு கோஷம் எழுப்பினர். போலீசார் சமாதானபடுத்தியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
- கஞ்சாவை சிறுசிறு பொட்டலங்களாக கட்டி கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
- விக்னேசை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பாகூர்:
புதுவையில் கஞ்சாவை ஒழிக்க வேண்டி ஆபரேஷன் விடியல் என்ற பெயரில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கிருமாம்பாக்கம் போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, முள்ளோடை- குருவிநத்தம் சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிருமாம்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ், கிருமாம்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் லூர்துநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் சோதனையிட்டனர். மேலும் அவர் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிளில் சோதனை நடத்திய போது அதில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. கஞ்சாவை சிறுசிறு பொட்டலங்களாக கட்டி கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் கடலூர் புதுப்பாளையத்தைச் சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் (வயது 23) என்பதும், சென்னையில் இருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்து கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
மேலும் இவர் மீது கடலூர் போலீஸ் நிலையத்தில் கஞ்சா வழக்கு, அடிதடி வழக்கும் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கிருமாம்பாக்கம் போலீசார், விக்னேஷ் கைது செய்து அவரிடமிருந்த ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான 1.5 கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் விக்னேசை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்ட போலீசாரை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா, தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் ஆகியோர் பாராட்டினர்.
புதுச்சேரி:
மாணவர் சிறப்பு பஸ் இயக்க கோரி வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
காமராஜர் நகர் தொகுதி காங்கிரஸ் சார்பில் சாரம் அரசு தொடக்கப்பள்ளி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு வைத்திலிங்கம் எம்.பி. தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் காமராஜர் நகர் தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மாணவர்களுக்கான இலவச ஒரு ரூபாய் பஸ்சை இயக்க வேண்டும். பள்ளி சீருடை, மதிய உணவில் முட்டை, இலவச நோட்டு, புத்தகம், சைக்கிள், லேப்டாப், கல்வி உதவித்தொகை ஆகியவற்றை வழங்க வேண்டும். ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
- புதுவை அரசின் கல்வித்துறை சார்பில் மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சி காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று தொடங்கியது.
- பள்ளி மைதானத்தில் அரசு நிறுவனங்களின் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. இதனையும் அமைச்சர் நமச்சிவாயம் பார்வையிட்டார்.
புதுச்சேரி:
புதுவை அரசின் கல்வித்துறை சார்பில் மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சி காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று தொடங்கியது.
இதன் தொடக்கவிழா நடந்தது. அமைச்சர் நமச்சிவாயம் குத்துவிளக்கேற்றி, ரிப்பன்வெட்டி திறந்து வைத்து கண்காட்சியை பார்வையிட்டார். மாணவர்கள் காட்சிக்கு வைத்திருந்த படைப்புகளிடம் விளக்கம் கேட்டார்.
பள்ளி மைதானத்தில் அரசு நிறுவனங்களின் அரங்குகள் அமைக்கப்பட்டி ருந்தது. இதனையும் அமைச்சர் நமச்சிவாயம் பார்வையிட்டார். அறிவியல் கண்காட்சியில் புதுவை அரசு, தனியார் பள்ளி மாணவர்களின் 400-க்கும் மேற்பட்ட படைப்புகள் இடம்பெற்றிருந்தது.
விண்வெளி, நீர் சேமிப்பு, சோலார் சிஸ்டம், பேட்டரி வாகனம், தாவர வளர்ப்பு என பல படைப்புகள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது.
கண்காட்சியில் பங்கேற்ற மாணவர்களிடம் இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கலந்துரையாடினார். மாணவர்களின் சந்தேக ங்களுக்கு அவர் பதிலளி த்தார். மண்டல அளவிலான கண்காட்சி வருகிற 30-ந் தேதி நிறைவு பெறுகிறது. இதில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த படைப்புகள் மாநில கண்காட்சியில் இடம்பெறுகிறது. மாநில அறிவியல் கண்காட்சி வருகிற 2-ந் தேதி வரை நடக்கிறது.
- குஜராத்தில் நடைபெறும் பொது தேர்தலில் கடாதா தொகுதியில் பா.ஜனதா கட்சியின் பட்டியல் அணியின் தேசிய பொதுச் செயலாளர் சம்பு நாத் போட்டியிடுகிறார்.
- பா.ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்மாறன் தலைமையிலான குழுவினரை பா. ஜனதா கட்சி மாநில தலைவர் சாமிநாதன் வாழ்த்தி வழி அனுப்பினார்.
புதுச்சேரி:
குஜராத்தில் நடைபெறும் பொது தேர்தலில் கடாதா தொகுதியில் பா.ஜனதா கட்சியின் பட்டியல் அணியின் தேசிய பொதுச் செயலாளர் சம்பு நாத் போட்டியிடுகிறார்.
இந்த தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்று புதுவை பா. ஜனதா கட்சியின் பட்டியல் அணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து மாநில தலைவர் முக்கிய நிர்வாகிகள் 15-க்கும் மேற்பட்டோர் குஜராத் சென்றனர்.
பா.ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்மாறன் தலைமையிலான குழுவினரை பா. ஜனதா கட்சி மாநில தலைவர் சாமிநாதன் வாழ்த்தி வழி அனுப்பினார்.
நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார், துணை தலைவர் முருகன் கலந்து கொண்டனர். புதுவையில் இருந்து குஜராத் சென்ற குழுவில் பட்டியல் அணியின் பொதுச் செயலாளர் நாகராஜன், துணை தலைவர்கள் எஸ்.கே.சி. கஜேந்திரன், ராஜேஸ்வரி, சுப்ரமணி, சரவணன், செயலாளர் வீரப்பன் சமூக வலைதலைப் பிரிவு பொறுப்பாளர் அருள் குமார், செயற்குழு உறுப்பினர் காமாட்சி, சிறப்பு அழைப்பாளர் குணாளன் உள்ளிட்ட நிர்வாகிகள் இடம் பெற்றுள்ளனர்.
- உப்பளம் தொகுதி வம்பாகீரப்பாளையம் மற்றும் திப்புராயப்பேட்டை பகுதிகளி பாதாள வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டு அடிக்கடி கழிவுநீர் நிரம்பி வழிந்து வந்தது.
- இதனை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பார்வையிட்டு பணிகளை தூரிப்படுத்தினார்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதி வம்பாகீரப்பாளையம் மற்றும் திப்புராயப்பேட்டை பகுதிகளி பாதாள வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டு அடிக்கடி கழிவுநீர் நிரம்பி வழிந்து வந்தது.
இதையடுத்து, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன், அப்பகுதியில் ஆய்வு செய்து, ஆண்டுக்கு 2 முறை முழுமையாக நவீன எந்திரம் மூலம் தூர்வார வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
அதன்படி வம்பா–கீரப் பாளையம் திப்புராய பேட்டை ஆகிய இடங்களில் உள்ள அனைத்து பாதாள வடிகால்களை நவீன எந்திரம் மூலம் தூர்வாரும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இதனை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பார்வையிட்டு பணிகளை தூரிப்படுத்தினார். இதில் ெதாகுதி செயலாளர் சக்திவேல் அவைத் தலைவர் ரவி, மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராஜி, மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகம், தி.மு.க. பிரமுகர் நோயல் உடனிருந்தனர்.
- புதுவையில் காமராஜர் கல்வீடு கட்டும் திட்டம் சிறப்பாக செயல்பட்டது. என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணி அரசு காமராஜர் பெயரிலான இத்திட்டத்தை பிரதமரின் வீடு கட்டும் திட்டம் என்று பெயர் மாற்றம் செய்தது.
- மீண்டும் காமராஜர் கல் வீடு கட்டும் திட்டம் என்ற பெயரை கல்வீடு கட்டும் திட்டத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சித்தலைவருமான சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி–ருப்பதாவது:-
புதுவையில் காமராஜர் கல்வீடு கட்டும் திட்டம் சிறப்பாக செயல்பட்டது. என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணி அரசு காமராஜர் பெயரிலான இத்திட்டத்தை பிரதமரின் வீடு கட்டும் திட்டம் என்று பெயர் மாற்றம் செய்தது. இத்திட்டத்தில் மத்திய அரசு ரூ.1.5 லட்சம் மட்டுமே வழங்குகிறது. மாநில அரசை விட ரூ.2 லட்சமாக மத்திய அரசைவிட கூடுதலாக வழங்கி வருகிறது.
இத்திட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் முதல் விண்ணப்பித்து நிதியுதவி கேட்டு வருபவர்களுக்கு நிதி வழங்கப்படாமல் உள்ளது. சுமார் ஆயிரம் விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அரசிடம் மானியம் விரைவில் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் வீடுகட்டுவதற்காக மக்கள் சேமித்து வைத்திருந்த பணம் கரைந்துவிட்டது.
சிலர் வாங்கி வைத்திருந்த கடனையும் காலி செய்துவிட்டு, அதற்கு வட்டி கட்ட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இத்திட்டத்தில் நிதியுதவி வழங்காததால், விண்ணப்பித்துள்ள மக்கள் திட்டத்திற்கு காமராஜர் பெயரை மாற்றியதுதான் ராசியில்லையோ என்றும் புலம்பி வருகின்றனர்.
மீண்டும் காமராஜர் கல் வீடு கட்டும் திட்டம் என்ற பெயரை கல்வீடு கட்டும் திட்டத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும். விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் உடனடியாக முதல் தவணைத்தொகையை கொடுத்து பயனாளிகள் வீடுகட்டும் பணியை தொடங்கச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- புதுவை உருளையன்பேட்டை தொ குதிக்குட்பட்ட கண்டாக்டர் தோட்டம் பிரியதர்ஷினி நகர் பகுதியில் குடிசை மாற்று வாரிய அரசு குடியிருப்புகள் உள்ளது.
- பணிகளில் ஏதேனும் குறைகள் இருந்தால் உடனே தெரிவிக்கும்படி பொதுமக்களிடம் நேரு எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார்.
புதுச்சேரி:
புதுவை உருளையன்பேட்டை தொ குதிக்குட்பட்ட கண்டாக்டர் தோட்டம் பிரியதர்ஷினி நகர் பகுதியில் குடிசை மாற்று வாரிய அரசு குடியிருப்புகள் உள்ளது.
இங்கு புனரமைப்பு பணிகள், குடிநீர் மற்றும் கழிவு குழாய்களை மாற்றி புதிய குழாய்களாக அமைக்கும் பணிகள் ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதி உதவியுடன் நடத்தப்பட்டு வருகிறது.
பொதுப்பணித்துறை சிறப்பு கட்டிட பிரிவு மூலம் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. நேரு ஆய்வுசெய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பணிகளில் ஏதேனும் குறைகள் இருந்தால் உடனே தெரிவிக்கும்படி பொதுமக்களிடம் நேரு எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார். ஆய்வின்போது பொதுப்பணித்துறை சிறப்பு கட்டிடப் பிரிவு செயற்பொறியாளர் மாணிக்கவாசகம், ஸ்மார்ட் சிட்டி திட்ட தொழில்நுட்ப அதிகாரி திருஞானம், இளநிலை பொறியாளர் உதயகுமார், அதிகாரிகள், பொதுமக்கள், மனிதநேய மக்கள் சேவை இயக்கத்தை சேர்ந்த பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்.






