என் மலர்
புதுச்சேரி
- யானை லட்சுமி காலில் வெள்ளி கொலுசுடன் கோவில் வாயிலில் நின்று பக்தர்களுக்கு ஆசி வழங்குவது வழக்கம்
- யானைக்கு மாலை அணிவித்தும், பூக்கள் தூவியும் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
புதுச்சேரி:
புதுவையில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி இன்று மரணம் அடைந்தது. இன்று காலை 6.15 மணியளவில் வழக்கமான நடைபயிற்சிக்கு யானையை பாகன் அழைத்துச்சென்றார். கல்வே பள்ளி அருகே வந்தபோது திடீரென யானை லட்சுமி மயங்கி சரிந்தது. இதையடுத்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. அப்போது யானை லட்சுமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். யானைக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் இறந்திருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
யானை இறந்த தகவல் பொதுமக்களிடம் பரவ தொடங்கியது. அந்த சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். அங்கேயே யானைக்கு மாலை அணிவித்தும், பூக்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர். பக்தர்கள் பலரும் கண்ணீர்விட்டு அழுதனர். பின்னர் யானை லட்சுமியின் உடல், கிரேன் மூலம் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
அதன்பின் யானை லட்சுமியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் ஜெயக்குமார், லட்சுமி நாராயணன் மற்றும் எம்எல்ஏக்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். இறுதிச்சடங்கிற்கு பிறகு யானையின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு, பின்பு அடக்கம் செய்யப்பட்டது.

இறந்த யானை லட்சுமிக்கு 31 வயதாகிறது. 5 வயதாக இருந்தபோது, 1996ல் தொழிலதிபர் ஒருவர் கோவிலுக்கு யானையை பரிசாக அளித்தார். வழக்கமாக ஆண் யானைக்கு தான் தந்தம் இருக்கும். இந்த யானை லட்சுமிக்கு ஆண் யானைபோல் தந்தம் இருந்தது. இந்த யானை கோவிலுக்கு வருகிற பக்தர்களிடம் அன்பாக பழகிவந்தது. காலில் வெள்ளி கொலுசுடன் கோவில் வாயிலில் நின்று பக்தர்களுக்கு ஆசி வழங்குவது வழக்கம். யானையைப் பார்க்க சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் பேர் வருவார்கள். யானை லட்சுமியின் மறைவு பக்தர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
- புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் ஆகியோர் மணக்குள விநாயகர் கோவிலுக்கு வந்து யானை லட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
- ஆயிரக்கணக்கில் மக்கள் இங்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் ஆகியோர் மணக்குள விநாயகர் கோவிலுக்கு வந்து யானை லட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் நாராயணசாமி நிருபர்க ளிடம் கூறியதாவது:-
யானை லட்சுமி முறையாக பராமரிக்கப்பட்டது. இருப்பினும் பீட்டா அமைப்பினர் யானையை காட்டில் விட வேண்டும் என்று கூறிய போது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து யானையை முறையாக பராமரிப்பதை கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தெரிவித்தோம். யானையை கோவிலில் வைத்து பராமரிக்க நடவடிக்கை எடுத்தோம்.
தற்பொழுது உடல்நிலை பாதிக்கப்பட்டு திடீரென்று இறந்துள்ளது. யானை லட்சுமி நம்மை விட்டு பிரிந்துள்ளது. அனைத்து பக்தர்களுக்கும் ஆசீர்வதிக்கின்ற இந்த யானை இப்போது நம்மிடம் இல்லாது மிக பெரிய அதிர்ச்சியும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கில் மக்கள் இங்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
அந்த அளவிற்கு மக்கள் யானையை நேசித்துள்ளனர். இது புதுவைக்கு மிகப்பெரிய இழப்பு. யானை இறந்தது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணயில் யார் தவறு செய்தார்கள் என தெரியவரும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- திருபுவனை தொகுதியில் உள்ள 3 பேர்களுக்கு நில அளவை பதிவுத்துறையின் மூலமாக இலவச மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி திருபுவனை பெருமாள் கோவில் தேவஸ்தான வளாகத்தில் நடைபெற்றது.
- இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் எம்.எல்.ஏ. வின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
திருபுவனை தொகுதியில் உள்ள 3 பேர்களுக்கு நில அளவை பதிவுத்துறையின் மூலமாக இலவச மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி திருபுவனை பெருமாள் கோவில் தேவஸ்தான வளாகத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்.எல்.ஏ. அங்காளன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி இலவச மனை பட்டாவை பயனாளிகளுக்கு வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து திருபுவனை தொகுதியில் உள்ள கலித்தீர்த்தாள் குப்பம், சன்னியாசிகுப்பம், செல்லிப்பட்டு, சோரப்பட்டு, வம்புப்பட்டு, ஆகிய கிராமங்களில் உள்ள மனை பட்டா சொத்து அடையாள அட்டை சுமார் 153 குடும்பங்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் எம்.எல்.ஏ. வின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
- யானைக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் இறந்திருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
- யானை லட்சுமி குருசு குப்பத்தில் உள்ள அக்கா சாமி மடத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.
புதுவையில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் உள்ளது. மணக்குள விநாயகரை நாட்டின் பல்வேறு மாநிலங்கள், பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் தரிசிக்க வருவார்கள். இந்த கோவிலுக்கு 1996ல் தொழிலதிபர் ஒருவர் யானையை பரிசாக அளித்தார். 5 வயதான பெண் யானைக்கு லட்சுமி என பெயர் சூட்டப்பட்டது. வழக்கமாக ஆண் யானைக்கு தான் தந்தம் இருக்கும். ஆனால் மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமிக்கு ஆண் யானைபோல் தந்தம் இருந்தது.
இந்த யானை கோவிலுக்கு வருகிற பக்தர்களிடம் அன்பை பெற்றது. கோவில் வாசலில் நிற்கும் யானை லட்சுமியுடன் கோவிலுக்கு வருகிற பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு பிறகு போட்டோ எடுத்துக்கொள்வது, ஆசி பெறுவதும் வழக்கம். யானை லட்சுமிக்கு ஈஸ்வரன் கோவிலுக்கு பின்புறம் கொட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
இங்குதான் இரவில் யானை லட்சுமி ஓய்வெடுக்கும். வழக்கம்போல் நேற்று இரவும் யானை லட்சுமி கொட்டிலில் ஓய்வெடுத்தது.
இன்று காலை 6.15 மணியளவில் நடைபயிற்சிக்கு பாகன் அழைத்துச்சென்றார். கல்வேபள்ளி அருகே வந்தபோது திடீரென யானை லட்சுமி மயங்கி சரிந்தது.
இதையடுத்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. அப்போது யானை லட்சுமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். யானைக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் இறந்திருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர். யானை இறந்த தகவல் பொதுமக்களிடம் பரவ தொடங்கியது.
அந்த சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். அங்கேயே யானைக்கு மாலை அணிவித்தும், பூக்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர். பக்தர்கள் பலரும் கண்ணீர்விட்டு அழுதனர்.
பின்னர் யானை லட்சுமி பொதுமக்கள் அஞ்சலிக்காக மணக்குள விநாயகர் கோவில் முன்பு வைக்கப்பட்டது. அங்கும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
தமிழகத்தில் இருந்து கால்நடைத்துறை டாக்டர்கள் வந்து யானை லட்சுமியை உடற்கூராய் செய்கிறார்கள். அதன்பின்னர் யானை லட்சுமி குருசு குப்பத்தில் உள்ள அக்கா சாமி மடத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது. இறந்த யானை லட்சுமிக்கு 31 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, புதுச்சேரியில் உயிரிழந்த மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிழை செளந்தரராஜன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,"யானை லட்சுமியின் இழப்பு ஒவ்வொரு வீட்டிலும் ஏற்பட்ட இழப்பு போன்றது. தங்கத்தேர் கோவிலில் வரும் போது தேர் போல வழிநடத்தி செல்வார் யானை லட்சுமி. யானை லட்சுமியின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
- பிரிவினையை பேசியதை கண்டித்த ராணுவவீரர் வீடு புகுந்து மிரட்டிய சம்பவத்தை ஏற்க முடியாது. இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கக்கூடாது. புதுவையில் அரசு வக்கீல்கள் நியமனத்தில் முதல்-அமைச்சர் கொடுத்த பட்டியலை நான் புறக்கணித்ததாக கூறுவது தவறு.
- புதுவை புறக்கணிக்க ப்படுவதை என்றும் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். புதுவைக்கு தேவையான உதவிகளை மத்திய அரசிடம் சென்று கேட்டு வருகிறேன்.
புதுச்சேரி:
காட்டேரிக்குப்பத்தில் பழங்குடியினர் கவுரவ விழாவில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரிவினையை பேசியதை கண்டித்த ராணுவவீரர் வீடு புகுந்து மிரட்டிய சம்பவத்தை ஏற்க முடியாது. இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கக்கூடாது. புதுவையில் அரசு வக்கீல்கள் நியமனத்தில் முதல்-அமைச்சர் கொடுத்த பட்டியலை நான் புறக்கணித்ததாக கூறுவது தவறு.
எனக்கும், வக்கீல்கள் தேர்வுக்கும் சம்பந்தமே இல்லை. பட்டியல் மட்டுமே என்னிடம் வந்தது. அதில் ஒருவர் மட்டும் சென்னையை சேர்ந்தவர், மற்றவர்கள் புதுவையை சேர்ந்தவர்கள். தலைமை செயலர், சட்டசபை செயலர் நேர்முகத்தேர்வு நடத்தி மதிப்பெண் கொடுத்து தகுதிபடைத்தவர்கள் என பட்டியல் கொடுத்தனர். இதில் எனது பங்கு எதுவும் இல்லை.
புதுவை புறக்கணிக்க ப்படுவதை என்றும் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். புதுவைக்கு தேவையான உதவிகளை மத்திய அரசிடம் சென்று கேட்டு வருகிறேன். முதல்- அமைச்சருக்கும், எனக்கும் எந்தவித விரிசலும் இல்லை. தமிழக கவர்னர் காலாவதியானவர் என கனிமொழி எம்.பி கூறியுள்ளார். கவர்னர்களை மிகவும் மோசமாக விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மணக்குள விநாயகர் தொழில் நுட்ப கல்லூரியில் உள்ள உணவு தொழில் நுட்ப துறை மாணவர்கள் தொழிற்சாலை பார்வையிடல், உணவு தரம் கண்டறிதல், உணவு சார்ந்த தொழில் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை கல்லூரியோடு இணைந்து வழங்கிட இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- இதில், உணவு தொழில் நுட்ப துறை தலைவர் திருச்செல்வம், வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் மற்றும் பல்வேறு துறை தலைவர்கள் பங்கேற்றனர்.
புதுச்சேரி:
கலிதீர்த்தாள் குப்பத்தில் உள்ள மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லூரி, ரியல் புட்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
மணக்குள விநாயகர் தொழில் நுட்ப கல்லூரியில் உள்ள உணவு தொழில் நுட்ப துறை மாணவர்கள் தொழிற்சாலை பார்வையிடல், உணவு தரம் கண்டறிதல், உணவு சார்ந்த தொழில் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை கல்லூரியோடு இணைந்து வழங்கிட இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியில், மணக்குள விநாயகர் கல்விக்குழும தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார்.
துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தனர்.
ஒப்பந்தத்தில் கல்லூரி சார்பில் முதல்வர் மலர்க்கண் மற்றும் ரியல் புட்ஸ் நிறுவன உரிமையாளர் அசோக் ரெட்டி ஆகியோர் கையெழு த்திட்டு, புரிந்துணர்வு ஒப்பந்த பரிமாற்றம் செய்து கொண்டனர். பின், இயற்கை உணவு தொழில்நுட்பம் பற்றி அசோக் ரெட்டி சிறப்புரையாற்றினார்.
இதில், உணவு தொழில் நுட்ப துறை தலைவர் திருச்செல்வம், வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் மற்றும் பல்வேறு துறை தலைவர்கள் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை உதவி பேராசிரியர்கள் சாந்தலட்சுமி, பாக்யாநிஷா, ஷைலஜா ஆகியோர் செய்திருந்தனர்.
- நடப்பு நிதியாண்டில் 5 மாதம் கழித்துத்தான் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நடப்பு நிதியாண்டில் மீதியுள்ளது. அரசு நிர்வாகத்தில் கடைசி 2 மாதங்கள் ஒன்றுமே செலவு செய்ய மாட்டார்கள்.
- எனவே நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி அரசின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி–ருப்பதாவது:-
நடப்பு நிதியாண்டில் 5 மாதம் கழித்துத்தான் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நடப்பு நிதியாண்டில் மீதியுள்ளது. அரசு நிர்வாகத்தில் கடைசி 2 மாதங்கள் ஒன்றுமே செலவு செய்ய மாட்டார்கள். இப்படி கணக்கிட்டு பார்த்தால் நடப்பு நிதியாண்டில் மீதியுள்ளது இன்னும் 2 மாதங்கள்தான் ஆனால் பல்வேறு அரசுத்துறைகளில் பட்ஜெட்டில் ஒதுக்கி யபடி நிதி செலவு செய்யப்படவில்லை.
ஆதிதிராவிடர் நலத்துறையில் இதுவரை 23 சதவீதம் மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து துறைகளிலும் அறிவித்த திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை.
நிதி நிர்வாகத்தில் புதுவையை ஆளும் என்.ஆர்.காங். பா.ஜனதா கூட்டணி அரசு முழு தோல்வி அடைந்து விட்டதாகவே தெரிகிறது. எனவே நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி அரசின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். அதாவது பட்ஜெட்டில் அறிவித்தபடி எவ்வளவு நிதியை மாநில அரசு திரட்டியுள்ளது, மத்திய அரசு எவ்வளவு நிதி வழங்கியுள்ளது,
அரசுத்துறைகள் ஒவ்வொன்றிலும் பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள் என்னென்ன செய்யப்பட்டுள்ளது? ஒதுக்கப்பட்ட நிதியில் எத்தனை சதவீதம் செலவிடப்பட்டுள்ளது? என்பது குறித்த விவரங்களை வெளியிட வேண்டும்.
வல்லுனர் குழுவை அமைத்து ஆலோசனை பெற்று நிதி நிர்வாகத்தை செம்மைப்படுத்தி பட்ஜெட்டில் அறிவித்த அனைத்து திட்டங்களை நிறைவேற்றுவதுடன், 100 சதவீத நிதியையும் திரட்டி செலவிட வேண்டும்.
இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. அறிக்கையில் கூறியுள்ளார்.
- உப்பளம் தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் வீடு கட்டுவதற்கான மானியம் ஊக்கத் தொகை பெற வேண்டி விண்ணப்பித்த பயனாளிகளுக்கு பரிசீலிக்கப்பட்டு பணி ஆணை உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி வழங்கினார்.
- 320 சதுர அடிக்கு தரைபரப்பளவு குறையாமல் ஆர்.சி.சி. தளம் போட்டு கழிவறையுடன் வீடு கட்ட வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு எம்.எல்.ஏ. அனிபால்கென்னடி அறிவுறுத்தினார்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் வீடு கட்டுவதற்கான மானியம் ஊக்கத் தொகை பெற வேண்டி விண்ணப்பித்த பயனாளிகளுக்கு பரிசீலிக்கப்பட்டு பணி ஆணை உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி வழங்கினார்.
வீடு கட்டுவதற்கான மானியத்தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் செலுத்தப்படும் என்றும், மானிய தவணைத் தொகை பெற்ற தேதியில் இருந்து 4 மாத காலத்திற்குள் அதற்கான கட்டிட வேலையை முடித்து விட வேண்டும் என்று, 320 சதுர அடிக்கு தரைபரப்பளவு குறையாமல் ஆர்.சி.சி. தளம் போட்டு கழிவறையுடன் வீடு கட்ட வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு எம்.எல்.ஏ. அனிபால்கென்னடி அறிவுறுத்தினார்.
இதில் இளநிலை பொறியாளர், ஆய்வாளர் முரளி, தி.மு.க. தொகுதி செயலாளர் சக்திவேல், ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேல் , கிளை செயலாளர் செல்வம், காலப்பன்,ரவி, ஜெயசீலன் மற்றும் தி.மு.க. பிரமுகர்கள் ஹரிகிருஷ்ணன், குணசீலன்பாலாஜி, லாரன்ஸ்,மோரிஸ், ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் நலமான சமுதாயம் அமைப்போம் திட்டத்தின் கீழ் கிராமப்புற ஏழை-எளிய பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கவும், பல்வேறு சிகிச்சைகள் சம்பந்தமாக வழி காட்டவும் தாண்டவமூர்த்திகுப்பத்தில் மருத்துவ மையம் அமைக்கப்பட்டது.
- இந்த நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு மருத்துவ மையத்தை திறந்து வைத்து வாழ்த்தி பேசினார்.
புதுச்சேரி:
அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் நலமான சமுதாயம் அமைப்போம் திட்டத்தின் கீழ் கிராமப்புற ஏழை-எளிய பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கவும், பல்வேறு சிகிச்சைகள் சம்பந்தமாக வழி காட்டவும் தாண்டவமூர்த்திகுப்பத்தில் மருத்துவ மையம் அமைக்கப்பட்டது.
இந்த மருத்துவ மையம் திறப்பு விழாவுக்கு தாண்டவ மூர்த்திக்குப்பம் கவுன்சிலர் ராஜாத்தி வெங்கடேசன் தலைமை தாங்கினார். வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் பொது மேலாளர் சவுந்தரராஜன், துணைப் பொது மேலாளர் புகழேந்தி, கண்டமங்கலம் ஒன்றிய சேர்மன் ஆர்.எஸ்.வாசன், கண்டமங்கலம் தி.மு.க. பிரமுகர் சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு மருத்துவ மையத்தை திறந்து வைத்து வாழ்த்தி பேசினார்.
நிகழ்ச்சியில் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள், செவிலி யர்கள், ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய மாணவர் சங்கம் சார்பில் தட்டாஞ்சாவடி ஆதிதிராவிடர் நலத்துறை முன்பு கண்டன ஆர்ப் பாட்டம் நடந்தது.
- ஆர்ப்பாட்டத்துக்கு பிரவீன்குமார் தலைமை வகித்தார்.
புதுச்சேரி:
தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய மாணவர் சங்கம் சார்பில் தட்டாஞ்சாவடி ஆதிதிராவிடர் நலத்துறை முன்பு கண்டன ஆர்ப் பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு பிரவீன்குமார் தலைமை வகித்தார். இளவரசி, ஜெயபிரகாஷ், ஆனந்த் முன்னிலை வகித்தனர். ஆனந்தன், ராமசாமி, கொளஞ்சியப்பன் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், சரவணன், உமாசாந்தி, சீனிவாசன், தமிழ்செல்வன், கலியமூர்த்தி, சரவணன், ராம்ஜி, உலகநாதன், பிரபுராஜ், மதிவாணன், சங்கர், தட்சிணாமூர்த்தி, ரமேஷ், அரிகிருஷ்ணன், குப்புசாமி, பிரவீன், சங்கர், நாகராஜன், சுப் பிரமணியன், செங்கதிர், நடராஜன், பார்த்தசாரதி, சிவகாமி, பிரேம்குமார், கந்தன், சுரேந்திரன், கோதண்டபாணி, கலியன், ரஞ்சித்குமார், லீலாவதி அன்புமணி, நாகராஜ், ஜெர்மண், கவுசிகன், வினாயகம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் மாணவ, மாணவிகள் விடுதியில் சுகாதார சீர்கேடை களைய வேண்டும். விடுதிகளில் உள்ள கழிவறைகளை சீரமைத்து திறக்க வேண்டும். மாணவர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உடனுக்குடன் சமைத்து வழங்க வேண்டும். மாணவர் இலவச பஸ்சை இயக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மாணவர் சங்க நிர்வாகி சஞ்சய்சேகரன் நன்றி கூறினார்.
- தேசிய பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு வார விழா கடந்த ஒரு வாரமாக விமர்சையாக கொண்டாடப்பட்டது.
- நிறைவு நாள் விழாவில் மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தின் செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் குழந்தை நலத்துறை மற்றும் இந்திய குழந்தைகள் மருத்துவ சங்கம் புதுவை கிளையும் இணைந்து தேசிய பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு வார விழா கடந்த ஒரு வாரமாக விமர்சையாக கொண்டாடப்பட்டது.
நிறைவு நாள் விழாவில் மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தின் செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
மேலும் இவ்விழாவில் மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், மருத்துவ கல்லூரி இயக்குனர் ராஜகோவிந்தன், துணை இயக்குனர் காக்னே, டீன்கள் கார்த்திகேயன், கலைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குழந்தைகள் நலத்துறை தலைவர் டாக்டர் பரத்குமார் வரவேற்புரையாற்றினார். செங்கல்பட்டு மருத்துவ கல்லுரியின் பச்சிளம் குழந்தைகள் துணை பேராசிரியர் டாக்டர் மணிகுமார், பிறந்தவுடன் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு குறித்தும் சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியையொட்டி மாணவ-மாணவிகளுக்கு வினா-வினாடி போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் குழந்தைகள் நலத்துறை இணை பேராசிரியர் பிரித்தி நன்றி கூறினார்.
- குருமாம்பட்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் என்.ஆர்.டி.யு.சி. தொழிற்சங்க பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது.
- இதில் என்.ஆர். காங்கிரஸ் மாநில செயலாளர் என்.எஸ்.ஜெ.ஜெயபால் பெயர் பலகையை திறந்து வைத்தார்.
புதுச்சேரி:
குருமாம்பட்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் என்.ஆர்.டி.யு.சி. தொழிற்சங்க பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது. இதில் என்.ஆர். காங்கிரஸ் மாநில செயலாளர் என்.எஸ்.ஜெ.ஜெயபால் பெயர் பலகையை திறந்து வைத்தார்.
விழாவில் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் அழகு, தொழிற்சங்க தலைவர் அன்பு அப்பாஸ், தலைவர் பாபு, செயலாளர் குமார், பொருளாளர் புகழேந்தி, குணா, தேவராஜ், சோமு, வினோத்குமார் மற்றும் பலர் கலந்து கெண்டனர்.
விழாவில் என்.ஆர். இலக்கிய பேரவை தலைவர் தனசேகரன் பேசியதாவது:-
என்.ஆர்.காங்கிரசும், என்.ஆர்.டி.யு.சி.யும் இரட்டை குதிரை பூட்டிய தேரை போன்றது. ஒருபுறம் மக்களை காப்பதிலும், மறுபுறம் தொழிலாளர் நலனைக் காப்பதிலும் மிகுந்த அக்கறையோடு செயல்பட்டு வருகிறது. மற்ற கட்சிகளைப் போல் அல்லாமல் என்.ஆர்.காங்கிரஸ் மாநில அந்தஸ்து பெறுவதற்காகவே தொடங்கப்பட்ட இயக்கம்.
கரசூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் புதிய தொழிற்சாலைகள் கொண்டு வர அண்மையில் மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், ஏராளமான தொழிற்சாலைகளை கொண்டு வந்து இளைஞ ர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த அரசு திட்டமிட்டு ள்ளது.
குறிப்பாக ஐ.டி. தொழிற்சாலைகளை அதிக அளவில் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. இது ஒரு புறம் இருக்க, தொழிற்சாலைகளுக்கு அதிக சலுகைகளை வழங்க வும், அரசு ஆலோசித்து வருகிறது.
இதுபோன்ற அரசின் முயற்சி புதுவை இளைஞர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் நன்மை பயக்கும் என்பதில் சந்தேகமும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.






